[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 02:09.54 AM GMT ]
மாற்றுக் கருத்துடையவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை ஏற்படும் வகையில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
கட்சியின் அரசியல் பிரிவு உறுப்பினர் குமார் குணரட்னத்தை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தினர் வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு அழைத்துள்ளனர்.
இந்த நடவடிக்கையானது குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் அவசியமன்று.
அரசியல் அழுத்தங்கள் காரணமாக இவ்வாறு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தைப் போன்றே இந்த அரசாங்க ஆட்சிக் காலத்திலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் பன்னிப்பிட்டியில் அமைந்துள்ள எமது காரியாலத்திற்கு வந்து குமார் குணரட்னம் பற்றிய விபரங்களை கோரினார்கள்.
குமார் குணரட்னம் நேரில் வந்து வாக்கு மூலமொன்றை அளிக்க வேண்டுமென கோரியிருந்தனர்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் மாற்று அரசியல் செயற்பாடுகளை இந்த அரசாங்கமும் ஒடுக்குகின்றமை வருத்தமளிப்பதாக புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்று அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgsz.html
பசில், விமலின் கணக்குகள் சர்வதேச நிறுவனங்களால் ஆய்வு
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 02:52.11 AM GMT ]
பொருளாதார மற்றும் வீடமைப்பு அமைச்சுக்களை இந்த இருவரும் கொண்டிருந்தனர்.
இதன்படி எம்ஸ்ட் அன்ட் யங் மற்றும் பிரைஸ் வோட்டா கௌஸ் கூப்பர்ஸ் ஆகிய கணக்காய்வு நிறுவனங்கள் குறித்த இரண்டு அமைச்சுக்களின் கணக்குகளை ஆராயவுள்ளன.
வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பணிப்பின் பேரில் இந்த கணக்காய்வுகள் நடத்தப்படவுள்ளன.
இரண்டு அமைச்சுக்களில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தியே இந்த கணக்காய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுங்கள்: ஜனாதிபதி
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 04:04.35 AM GMT ]
குடியுரிமை சக்தி மற்றும் புதிய தலைமுறை நிறுவனங்களின் உறுப்பினர்களை நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது எவ்வாறு என்பது தொடர்பாக அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
நீதியரசர் மொஹான் பீரிஸ் வீட்டின் மீது அசாத் சாலி தாக்குதல்!
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 04:19.55 AM GMT ]
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த குழுவினருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியும் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
நீதியரசர் உடனடியாக விலக வேண்டும் அல்லது பல விதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் என மொஹான் பிரீஸிற்கு அறிவித்துள்ளதகா தெரிவிக்கப்படுகின்றது.
கிடைத்த தகவலின் படி மேலதிக விசாரனை மேற்கொள்ளபடும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நீதியரசர் வீட்டிற்கு நட்பு ரீதியாக பேசுவதற்கே சென்றேன்: அசாத் சாலி
மத்திய மாகாண உறுப்பினர் அசாத் சாலி நேற்று இரவு தன் வீட்டிற்கு வந்து அச்சுறுத்தல் விடுத்ததாக பிரதம நீதியரசர் பொலிஸாருக்கு முறைபாடு வழங்கியிருந்நதார்.
எப்படியிருப்பினும் அதன் பின்னர் நடத்திய விசாரனையில் தான் எந்த அச்சுருத்தலையும் விடுக்கவிலை நட்பு ரீதியாக பேசுவதற்கே சென்றேன் என்று அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதம நீதியரசர் வழங்கிய முறைப்பாடு தொடர்பாக தொடர்ந்தும் விசாரனையை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgs3.html
157 புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக ஆஸி. நீதிமன்றம் தீர்ப்பு!
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 04:36.06 AM GMT ]
இதன் போது உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் படகில் வந்தவர்கள் படகில் தடுத்து வைப்பது தவறான என்ற தீர்ப்பை, இன்று ஏகமனதாக தவறல்ல என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறிப்பாக இந்த தீர்ப்பினை 2 பேர் ஆதரவாகவும் 2 பேர் சற்று எதிர்த்தும் ஒருவர் முற்றாக எதிர்த்தும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா வரைக்கும் இவர்களை கொண்டு சென்று இறுதியாக அவர்களை நவ்ரு தீவுக்கு அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
புகலிட கோரிக்கையாளர் தடுத்து வைக்கப்பட்டமை சட்டத்திற்கு உட்பட்டது! ஆஸி உயர் நீதிமன்றம்
இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்ற 157 பேர் ஆழ்கடலில் சுங்க கப்பல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டமை சட்டத்திற்கு உட்பட்டது என அவுஸ்திரேலிய உயர் நீதிமன்ற இன்று தீர்ப்பளித்துள்ளது.
4 பேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழுவில் மூன்று பேர் அரசாங்கத்திற்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
நவ்ரு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த 157 புகலிட கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டே வகையிலேயே சுங்க கப்பலில் தடுத்து வைத்திருந்தாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
கடந்த ஜூன் 29 ஆம் திகதி கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் 16 கடல் மைல் தொலைவில் படகில் இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில், அதில் இருந்த 157 பேர் அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் காப்பற்றப்பட்டனர்.
குடியேற்ற அமைச்சர் ஸ்கொட் மொரிசன் உள்ளிட்ட அவுஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு குழு இந்தியாவில் இருந்து வந்ததாக கூறப்படும் மேற்படி புகலிட கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பு தீர்மானத்தை எடுக்கும் என நம்படுகிறது.
எவ்வாறாயினும் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு புகலிட கோரிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgs4.html
Geen opmerkingen:
Een reactie posten