தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

லண்டன் இலங்கை தொடர்பான தனது நிலைப்பாட்டை இன்னும் மாற்றவில்லை: அகதிகள் நிலை !

ராஜ தந்திர பாதுகாப்பை இழந்தார் மகிந்த: இனி ஆளை அமுக்க முடியும் என்கிறார்கள் சட்டவல்லுனர்கள் !

[ Jan 26, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 41105 ]
இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிய போது ராணுவ புரட்சி ஒன்றை ஏற்படுத்தி, பதவியில் தொடரும் சதித்திட்டம் தொடர்பான வழக்கில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவை விசாரிப்பதில், அரசியலமைப்பு சட்டத்தில் எந்த தடையும் கிடையாது என, நீதித்துறை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷே அதிரடியாக தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தின் 35-வது பிரிவு, நாட்டின் ஜனாதிபதி விசாரணைக்கு அப்பாற்பட்டவர் என்ற பாதுகாப்பை (immunity) கொடுக்கிறது. அதாவது, ஜனாதிபதி கொலை செய்தாலும் விசாரணைக்கு அவரை இழுக்க முடியாது.
இதனால், ராஜபக்ஷே தரப்பினர், “இவர்கள் கூறும் குற்றச்சாட்டு (ராணுவப் புரட்சிக்கு சதித்திட்டம்) மகிந்த ராஜபக்ஷே ஜனாதிபதி பதவியில் இருந்தபோது நடந்தது. எனவே அவர் விசாரணைக்கு அப்பாற்பட்டவர்” என கூறிவருகின்றனர். இது குறித்து விளக்கமளித்துள்ள நீதித்துறை அமைச்சர் விஜேதாச , “இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தின் 35-வது பிரிவு, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசாரணையில் இருந்து சட்ட பாதுகாப்பு வழங்கவில்லை. மகிந்த ராஜபக்ஷே, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய நிமிடத்தில் இருந்து அந்த immunity-யை இழந்து விட்டார். தற்போது அவர் எந்தக் குற்றத்துக்காகவும் விசாரிக்கப்படலாம் - குற்றம் நடைபெற்ற நேரத்தில் அவர் ஜனாதிபதியாக இருந்திருந்தாலும், தற்போது அவரை விசாரணைக்கு உட்படுத்தலாம். அரசியலமைப்பு சட்டத்தின் 35-வது பிரிவு அதை தடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
இலங்கை அரசு தற்போது இந்த ‘ராணுவப் புரட்சிக்கு சதித்திட்டம்’ விவகாரத்தை மிக சீரியசாகவே ,கையில் எடுத்துள்ளது. காரணம், இன்னும் 3 மாதங்களில் இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகின்றது. அதில் மகிந்தவை போட்டியிட விடாமல் செய்ய வேண்டும் என்றால், அவரை ஏதோ ஒரு வழக்கில் தண்டனை கொடுத்து சிறையில் அடைக்க வேண்டும். ஆனால் அந்த வழக்கு சாதா வழக்காக இருந்துவிட்டால், அவர் போட்டியிடுவதை தடுக்க முடியாது போகலாம். அதுவே, ‘ராணுவப் புரட்சிக்கு சதித்திட்டம்’ என்றால், தண்டனை வழங்கப்படுவதுடன், அவரது குடியுரிமையையும் பறிக்கலாம். அதன்பின் அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது.
ஆனால் இதனைச் செய்வதில் எதிர்கட்சிகள் இடையே 2 கருத்துக்கள் உள்ளது. சரத்பொன்சேகா போன்றவர்கள் மகிந்தரை உடனே கைதுசெய்து, குடியுரிமையை பறிக்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் அப்படிச் செய்தால் சிங்களவர் மத்தியில் அவர் மீண்டும் பிரபல்யமாகிவிடுவார் என்று ரணில் மற்றும் சந்திரிக்கா கூறுகிறார்கள். இதனால் மெல்ல மெல்ல மீடியாக்களில், அவர் ஊழல் தொடர்பான செய்திகளை கசிய விட்டு.கொஞ்சம் கொஞ்சமாக எஞ்சியுள்ள செல்வாக்கை சரிக்கவேண்டும் என்பதே இவர்கள் தற்போதைய திட்டமாக உள்ளது.
http://www.athirvu.com/newsdetail/2076.html

மகிந்த பள்ளி மாணவர்களை கொண்டு அலரி மாளிகையை சுத்தப்படுத்திய வீடியோ வெளியானது !

[ Jan 26, 2015 02:57:59 PM | வாசித்தோர் : 29370 ]
பள்ளி மற்றும் சாரண மாணவர்களை தனது வீட்டுக்கு அழைத்து, அவர்களை கொண்டு தனது வீட்டை சுத்தம் செய்துள்ளார் மகிந்த ராஜபக்ஷ. இதில் அவர்கள் எவ்வாறு சுத்தம் செய்கிறார்கள் என்று மாடியில் இருந்துகொண்டு வேடிக்கை வேறு பார்த்துக்கொண்டு உள்ளார். இதோ வீடியோ இணைப்பு !
http://www.athirvu.com/newsdetail/2082.html

லண்டன் இலங்கை தொடர்பான தனது நிலைப்பாட்டை இன்னும் மாற்றவில்லை: அகதிகள் நிலை !

[ Jan 27, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 9260 ]
கடந்த சில வருடங்களாக பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகள் இலங்கை அகதிகளுக்கு தஞ்சம் கொடுப்பதை தவிர்த்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் இதேவேளை இலங்கையில் அவர்கள் நினைத்தது போல ஒரு ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. இதனையடுத்து தமிழர்கள் அங்கே தற்போது பாதுகாப்பாக இருப்பதாக இன் நாடுகள் எண்ணிவிட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இனி வரும் காலங்களில் பல இலங்கையர்களை நாடு கடத்த மேற்குலக நாடுகள் முனையலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்தியா சென்ற மங்கள சமரவீர, நாட்டில் சுமூகமான நிலை தோன்றிவிட்டதாக கூறியுள்ளார்.
இதனால் இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் இனி மீண்டும் வரலாம் என்றும் கூறியுள்ளார். இன் நிலையில் அமெரிக்கா இதுதொடர்பாக தனது கருத்தை வெளியிட்டுள்ளது. அதுபோல பிரித்தானியா தனது கருத்தில், இலங்கையின் தற்போதைய நிலையை நாம் உண்ணிப்பாக கவனித்து வருகிறோம். அங்கே சூழ் நிலை முற்று முழுதாக சுமூகமாக வரவில்லை என்ற கருத்தைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதனை ஒத்த கருத்தையே கனடா நாடும் கொண்டுள்ளது. ஆனால் அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள், இலங்கையில் சுமூகமான நிலை ஒன்று வந்துவிட்டதாகவே கருதுகிறது.
இதன் காரணமாக அகதிகள் அந்தஸ்த்து கோரும், மற்றும் நிராகரிக்கப்பட்ட அனைவரது நிலையும் சற்று திண்டாட்டமாக உள்ளது. மகிந்த அரசால் தனக்கு ஆபத்து என்று கூறி, அகதிகள் அந்தஸ்த்து கோரியவர்களை இன் நாடுகள் எவ்வாறு கையாளப்போகிறது என்று தெரியாத ஒரு சூழ் நிலை காணப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/2085.html

Geen opmerkingen:

Een reactie posten