ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் சமுர்த்தி பயனாளிகளுக்கு திவிநெகும திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்படவிருந்த பொருட்களின் ஒரு தொகை, கொத்மலை பிரதேச காரியாலய கட்டிடத்தில் மீட்கப்பட்டுள்ளது.
119 அழைப்பின் மூலம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று நுவரெலியா மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரியான ஜி.விமலதாச தலைமையில் நேற்று முதல் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த பொருட்கள் பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது நுவரெலியா மாவட்ட திவிநெகும பணிப்பாளர் திருமதி ஏயரத், திவிநெகும அதிகாரிகள் கொத்மலை பிரதேச காரியாலய அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
இதன்போது 120 ஜூகி மெசின், 03 நீர் இறைக்கும் பம்பி, 08 தற்காலிக கூடாரங்கள் என்பன மீட்கப்பட்டன.
மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfu3.html
Geen opmerkingen:
Een reactie posten