[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 07:34.02 AM GMT ]
பொதுத் தேர்தலில் ஜனநாயக் கட்சி தனித்து போட்டியிட்டு தற்போது அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகளுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.
கட்டாயமாக அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன். கடந்த முறை கொழும்பு மாவட்டத்தில் நான் போட்டியிட்டேன்.
98 ஆயிரம் வாக்குகளை வழங்கி கொழும்பு மாவட்ட மக்கள் என்னை ஏற்றுக் கொண்டனர்.
இதனைவிட இரண்டு மடங்கு வாக்குகளை பெறுவது எனக்கு சிரமமான காரியமல்ல எனவும் ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfqz.html
அமைச்சரவை வாகனங்களை மீள ஒப்படைக்காத முன்னாள் பிரதி அமைச்சர்!
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 07:44.18 AM GMT ]
லேன்டர் ரோவர் டிஸ்கவரி (CAB - 9854) ஜீப் வண்டி மற்றும் பி.எம்.டப்ல்யூ (KY - 7563)வகை வாகனங்களையே அமைச்சர் இதுவரை அமைச்சுக்கு ஒப்படைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
03 கோடி ரூபாய் பெறுமதியுள்ள வாகனத்தை மேலும் சில காலங்கள் பயன்படுத்துவதற்கு இடமளிக்க முடியாதென சிறந்த அரசியலமைப்பிற்கு உதவிய அமைச்சர்கள் சிலர் அமைச்சரவையின் சிரேஷ்ட அதிகாரிக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மைத்திரிபால இடத்தை ஜயசிங்க நிரப்பினார்
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 07:55.12 AM GMT ]
2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பொலன்நறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட ஜயசிங்க, 21 ஆயிரத்து 878 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் 5 வது இடத்தை அவர் பெற்றிருந்ததுடன் பொலன்நறுவை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டனர்.
1991 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திம்புலாகல பிரதேச சபைக்கு தெரிவான ஜயசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
அமெரிக்க உதவி ராஜாங்க செயலர் இலங்கை வருகை: ஜனநாயகத்தை நிலை நாட்ட நடவடிக்கை
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 08:13.18 AM GMT ]
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தெற்கு மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் அடுத்த வாரம் இலங்கை வருகிறார்.
இலங்கை வரும் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் தற்போது அரசில் உள்ள முக்கியஸ்தர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.
பிஸ்வால் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது தொடர்பான கோரிக்கையை இவ் விஜயத்தின் போது முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விரைவில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு இராஜாங்க செயலாளர் உட்பட திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகளைச் சந்திப்பதற்கு முன்பாக இந்த விஜயம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிஷா பிஸ்வால் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பிலான விசாரணையில் போதிய முன்னேற்றம் காணப்படாமை தொடர்பில் சர்வதேசத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததுடன் இதன்காரணமாக சர்வதேச விசாரணைகளுக்கு அழைப்பு விடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை சூசகமாக வெளியிட்டிருந்தார்.
இதேபோன்று நாட்டில் மோசமடைந்து செல்லும் மனித உரிமை நிலைமை சிறுபான்மையினர் மீதான மதத் தாக்குதல்கள் குறித்தும் கவலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்திய விஜயத்தின் போது இலங்கையில் ஜனநாயகத்தினை நிலைநாட்டுவதற்கு புதிய நம்பிக்கை ஒன்று பிறந்துள்ளது எனக் குறிப்பிட்டர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfq3.html
Geen opmerkingen:
Een reactie posten