தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 januari 2015

கிடைத்த வெற்றியை மலையக மக்கள் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்- வரவு செலவுத் திட்டம் திருப்தி: ஸ்ரீதரன்

ரணிலை தாக்கிய சம்பவம் தொடர்பாக மீண்டும் விசாரணை: அஜித் அசேல
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 04:41.36 AM GMT ]
கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்க பயணித்த வாகனத்திற்கு பலபிட்டிய  பிரதேசத்தில் நடந்த தாக்குதல்  சம்பவம் தொடர்பாக முறையான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என அம்பலாங்கொட பொலிஸாருக்கு மீண்டும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பலபிட்டிய பிரதேச சபை உறுப்பினர் அஜித் அசேல டி சொய்சா மீண்டும் முறைபாடு செய்துள்ளார்.
தாக்குதல் இடம்பெற்ற தினம் அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாருக்கு முறைபாடு செய்திருந்தார் எனினும் இதுவரை முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceo3.html
மொஹான் பீரிஸ் குறித்து விவாதம்: அடுத்த வாரம் கூடுகின்றது பாராளுமன்றம்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 04:46.01 AM GMT ]
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் திங்கட்கிழமை விசேட தினமாக பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்ற ஆணையாளர் தம்மிக்க தசாநாயக்க பிரதம நீதியரசர் பதவியில் இதுவரை கடமை புரிந்த மொஹான் பீரிஸ் விலக்கியது தொடர்பாக எதிர்கட்சியினால் கேட்டுக்கொண்ட விவாதம் அன்றைய தினம் இடம்பெறும் என தெரிவித்தார்.
மதியம் 02 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதோடு அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceo4.html

வாழைச்சேனையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 05:23.53 AM GMT ]
கஞ்சா விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில்  இருவர் வாழைச்சேனை கும்புருமுல்ல பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்றில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்து செய்யப்பட்டவர்கள் 47 வயதுடைய பெண் மற்றும் 27 வயதுடைய ஆண்  என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் 5 கிலோகிராம் கஞ்சா இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceo5.html
வசந்தவின் குற்றச்சாட்டிற்கு பாட்டலி சம்பிக்கவின் பதில்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 05:58.39 AM GMT ]
மோசடி நடவடிக்கை தொடர்பாக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பினால் தனக்கு முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க  மறுக்கிறார்.
தான் ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரானவன் என பாட்டலி சம்பிக்க ரணவக்க ஊடகமொன்றுக்கு கருத்து தெரித்தார்.
இலங்கை மின்சார சபையில் ஏற்படும் மோசடியான நடவடிக்கைகளை சட்டபூர்வமாக்க அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முயற்சிப்பதாக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பு தெரிவிக்கின்றது.
எப்படியிருப்பினும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பினால் எந்தவிதமான அமைச்சரவை பத்திரமும் அமைச்சரவையில் தனக்கு வழங்கவில்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையில் ஏற்படும் மோசடியான நடவடிக்கைகளை முதல் முதலாக நாட்டிற்கு வெளிப்படுத்தியது தான் என தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையில் சில தொழிற்சங்கங்கள் தற்பொழுது முன்னணியில் இருப்பது கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மேலும் தற்பொழுது இடம் பெறும் விசாரணையின் பின்னர் மோசடிகாரர்கள் யார் என நாட்டிற்கு வெளிப்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.
எரிசக்தி துறையில் ஏற்பட்டிருக்கும் ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமித்திருக்கும் குழுவின் அறிக்கை எதிர்வரும் சில நாட்களுக்குள் தன்னிடம் கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcepy.html


கிடைத்த வெற்றியை மலையக மக்கள் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்- வரவு செலவுத் திட்டம் திருப்தி: ஸ்ரீதரன்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 06:02.40 AM GMT ]
தொழிற்சங்க பலத்தினால் அரசியலுக்குள் பிரவேசித்த தொழிலாளர் தேசிய சங்கம் இன்று ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து மலையக தமிழ் மக்களுடைய வாக்குப்பலத்தினால் நாட்டில் நல்லதொரு ஆட்சி மாற்றத்திற்கும் வித்திட்டுள்ளது என்று மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
திம்புள்ள - பத்தனை சனசமூக நிலையத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத் தலைவர்மார்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதேசசபை உறுப்பினர்களான ஜீ.நகுலேஸ்வரன், காளிதாஸ் மற்றும் பிரதேச அமைப்பாளர்களான ஜெயராம்,லெச்சுமணன்,விஜயவீரன் மற்றும் தோட்டத்தலைவர்களோடு கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகியவை ஒன்றிணைந்து மலையகத்திலும் நாட்டிலும் அராஜகத்தை ஒழித்து ஜனநாயக அரசியலை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயற்பட்டன.
இதன் காரணமாக மலையக மக்களுக்கு நேரடியாக சேவை செய்யக்கூடிய தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் பெருத்தோட்டத்துறை அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் ஒன்று சேர்ந்து கிடைத்திருப்பதானது எமது தலைவர்களையும், மலையக மக்களையும் கௌரவப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இத்தகைய அமைச்சுக்களையும் எமது சிறந்த தலைவர்களையும் தக்க வைத்துக் கொள்வது இனிவரும் காலங்களில் எமது மக்களின் மாண்புமிகு கடப்பாடாகும்.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினூடாக தலைவர் திகாம்பரம் அவர்கள் எமது மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கு உரித்தான காணி மற்றும் வீட்டுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான முதற்கட்ட நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
அதேபோல மீரியபெத்தையில் எமது சொந்தங்களுக்கு தனிவீடு அமைப்பதிலும் முனைப்புக் காட்டி வருகின்றார். இதற்கு மலையத்தின் மீது பற்றுள்ள ஏனைய அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புக் கிடைத்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.
இடைக்கால வரவுசெலவுதிட்டத்தில் நாட்டு மக்கள் பல்வேறு நிவாரணங்களை பெற்றுள்ளனர். அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வில் எமது மலையக தோட்டப்புற அரசாங்க உத்தியோகத்தர்களும் நன்மையடைந்துள்ளதோடு இதனால் இவர்களில் தங்கிவாழ்ந்த தோட்டத்தொழிலாளர்களும் நன்மையடைந்துள்ளனர்.
இதேபோல எதிர் காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளிலும் மலையக தலைவர்கள் அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களையும் ஆலோசனைகளையும் கொடுத்து வருகின்றனர்.
இவற்றை தக்கவைத்துக்கொள்ள எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். எமது தொழிலாளர் தேசிய சங்க அங்கத்தவர்கள் ஏனைய மலையக மக்களிடம் வாக்கின் புனிதத்தை உணர செய்து உண்மையான மலையக தலைவர்களை தெரிவு செய்ய தூண்டுவதோடு இந்த மக்களின் ஆட்சியை நிலைக்க வைக்க இப்போதிருந்தே நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நான் மக்களை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் கல்விசார் ஊழியர்களுக்கு திருப்தியைத் தந்துள்ளது: ஸ்ரீதரன்
 நீண்ட காலமாக ஆசிரிய சமூகம் எதிர்பார்த்திருந்த சம்பள அதிகரிப்பு புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஆத்ம திருப்தியுடன் பணிபுரியக் கூடிய வாய்ப்புக் கிட்டியுள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஸ்ரீதரன் தெரிவித்தார்.
ஹற்றன் கல்வி வலயத்தைச் சேர்ந்த குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சாரணர் இயக்க மாணவர்களுக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த சீருடைகளை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி வித்தியாலய அதிபர் எஸ். நடராஜா தலைமையில் நடைபெற்ற வைபவத்தை சாரணர் இயக்கப் பொறுப்பாசிரியை திருமதி ஷோபனா ஏற்பாடு செய்திருந்தார். ஹற்றன் கல்வி வலயத்தின் சார்பில் ஆசிரிய ஆலோசகர் என். பாலமோகன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில், புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார வசதி குறைந்த சாதாரண மக்களின் நலன் கருதி அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
 மின்சார வசதி இல்லாமல் சிரமங்களை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு உதவும் வகையில் மண்ணெண்ணையின் விலை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்கத்துக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
மேலும், ஆசிரிய சமூகம் எவ்வளவோ அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற போதிலும் அவர்களின் உழைப்புக்கு ஏற்றவாறு சரியான சம்பள உயர்வு கிடைக்காமல் பொருளாதார ரீதியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தார்கள். இந்நிலையில் இடைக்கால சம்பள உயர்வானது ஆசிரிய சமூகத்துக்கு தகுந்த நேரத்தில் வழங்கப்பட்ட ஒன்றாகும்.
இது இருபது வருடங்களுக்குப் பின்னர் கிடைத்த பெரிய அளவிலான சம்பள உயர்வுமாகும். எனவே, ஆசிரியர்களும், அதிபர்களும் முன்னரை விட அக்கறையுடனும் ஆத்ம திருப்தியுடனும் தமது கடமைகளை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதால் பெற்றோர் தமது கஷ்டங்களில் இருந்து ஓரளவு விடுபட்டு பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
 குறிப்பாகச் சொல்லப் போனால், அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமையும், அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளமையும் கல்விசார் சமூகத்துக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதமாகவே காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் மலையகப் பாடசாலைகள் அரசியல் மயமாகவே காட்சி தந்து வந்துள்ளன. ஒரு சிலரைத் தவிர ஏனையவர்களிடமிருந்து வளங்களைப் பெற்றுக் கொள்வதில் அதிபர்கள் தயக்கம் காட்டி வந்துள்ளார்கள்.
எனினும் குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் மேற்கொண்ட வழிகாட்டல் காரணமாக எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சாரணர்களுக்கான சீருடைகளை மாணவர்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலை தோன்றியுள்ளது.
அதேபோல் சாரணர்கள் விழுமியக் கல்வியோடு ஒழுக்கம்,விழுப்பம்,ஒப்புரவு முதலானவை ஒருங்கே கிடைப்பதால் நாட்டின் நற்பிரஜைகளாக மிளிர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcepz.html

Geen opmerkingen:

Een reactie posten