தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 januari 2015

இணையத்தளத்தைக் கலக்கும் மகிந்த கேட்ட கேள்வி!

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு தவம்??

இந்த நிலையில் கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தவம்(அல் தவாம்) முதலமைச்சராவதற்கான வாய்ப்புக்கள் தென்படுவதாக குறிப்பிட்டார்.
தேசிய காங்கிரசின் கோட்டை எனக்கருதப்படும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தனது கால் தடத்தை மிக வலிமையாக பதித்து கொள்ள பிரதேசத்தை சேர்ந்த தவத்தை முதலமைச்சராக்கும் நகர்வை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை  மேற்கொள்வது தொடர்பாக தீவிரமாக அராய்ந்துவருவதாக  தெரிவிக்கபடுகிறது.
அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த  தவம் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல் தவாம் தலைமைதுவத்துக்கு மிக மிக விசுவாசமானவர் என்பதையும் நாம் கருத்தில் எடுக்க வேண்டியுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/95689.html

மகிந்தவின் தோல்விக்கு காரணம் யார்?? வெளியானது பட்டியல்…..

01. மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகாரப் போக்கு
02. ராஜபக்ஷக்களின் குடும்ப ஆதிக்கம்
03. தூய்மையற்ற நிருவாக முறையும் மோசடிகளும்
04. கட்சி மட்ட அதிர்ப்திகள்
05. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்
06. செல்வாக்கில்லாத கட்சிகளின் கூட்டு
07. ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் அடவடித்தனங்கள்
08. ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறை
09. ஜேவிபி, ஹெல உறுமய ஆகியவற்றின் அதிரடி பரப்புரைகள்
10. வெகுஜன இயக்கங்களின் எழுர்ச்சி
தோல்விக்கு வித்திட்ட 10 பிரபல்யங்கள்
01. மாதுலுவாவே சோபித்த தேரர்
02. சந்திரிக பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ
03. ரணில் விக்கிரமசிங்ஹ
04. அணுர குமாரதிசாநாயக்க
05. அதுருலியே ரதன தேரர்
06. ராஜித சேனாரத்ன
07. கோட்டபே ராஜபக்ஷ நடவடிக்கைகள்
08. கலபொடஅத்த ஞானசார தேரர் வன்முறைகள்
09. விமல் வீரவன்சவின் நையாண்டி பேச்சுக்கள்
10. எஸ்.பி.திசாநாயக்க தூசன வார்த்தைகள்
நாட்டில் ஜனநாயகத்தைக் காக்க உதவிய 10 காரணிகள்
01. தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய துனிச்சலான செயல்பாடுகள்
02. பொலிஸ் மா அதிபரும் பொலிசும் கடைப்பிடித்த நடு நிலை
03. இராணுவப் படைத் தளபதியின் ஒத்துழைப்பு
04. அமெரிக்காவின் அழுத்தங்கள்
05. இந்தியவின் எச்சரிக்கை
06. ஐ.நா.செயலாளரின் அவதானம்
07. சிரச எதிரணிக்குக் கொடுத்த ஒத்துழைப்பு
08. இணையத்தளங்களும் முகநூல்களும்
09. அரச சார்பில்லாத தமிழ் ஊடகங்களின் நகர்வு
10. அரச அதிகாரிகளின் நடு நிலையான செயல்பாடுகள்.
http://www.jvpnews.com/srilanka/95698.html

இணையத்தளத்தைக் கலக்கும் மகிந்த கேட்ட கேள்வி!

அதற்கு அப்துல் கலாம் அவர்கள் அதை அவரை சுற்றி உள்ள அறிவாளிகளில் தங்கியுள்ளது என்றார். அவர்கள் அறிவாளிகள் என்று அவர் எப்படி அடையாளம் கண்டு கொள்வர்? என்று கேட்டார் மஹிந்த அவர்கள்.
அதற்கு அப்துல் கலாம் அவர்கள், அதை அவர்களிடம் சிறந்த கேள்விகளை கேட்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றார் அப்துல் கலாம் அவர்கள். அப்துல் கலாம் உடனே மன் மோகன் சிங்குக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவரிடம் கேட்டார்.
உங்கள் அம்மாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது…… உங்கள்அப்பாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது…… அனால் அது உங்கள் சகோதரரோ சகோதரியோ இல்லை……. அப்படியானால் அவர் உங்களுக்கு யார் என்று கேட்டார்?
அதற்கு மன்மோகன்சிங் உடனே அது நான் தான் என்று பதில் கூறினார். அதற்கு அப்துல் கலாம் அவர்கள் சரியாக சொன்னீர்கள் என்று வாழ்த்துக்கள் சொல்லி விடைகூறினார்.
அப்துல் கலாம் மஹிந்தவை பார்த்து புரிந்ததா என்று கேட்டார்.
மஹிந்த, ஆம் புரிந்தது நானும் இதை பயன்படுத்துவேன் என்று நாடு திருப்பினார்.
நாடு திருப்பிய பின் மஹிந்த அவர்கள் மேர்வின் சில்வாவை அழைத்து நான் கேட்கும் கேள்விக்கு விடை கூற முடியுமா? என்று கேட்டார். அதற்கு மேர்வின் சில்வா நிச்சசயமாக….. என்று பதில் கூறினார்.
தலைவர் மஹிந்த அவர்கள்மேர்வினிடம் கேட்டார், உங்கள் அம்மாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது…… உங்கள்அப்பாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது…… அனால் அது உங்கள் சகோதரரோ சகோதரியோ இல்லை……. அப்படியானால் அவர் உங்களுக்கு யார் என்று கேட்டார்?
மேர்வின் சில்வா நீண்ட நேரம் யோசித்து விட்டு தனக்கு சிறிது நேரம் தரும்படி கேட்டார். மேர்வின் சில்வா அவர்கள் எல்லா அமைச்சர்களையும் அழைத்து விடை தெரியுமா என்று கேட்டார்? எல்லோரும் யோசித்தார்கள்……………..
இறுதியாக மேர்வின் சில்வா அவர்கள் ரணிலுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நான் கேட்கும் கேள்விக்கு விடை கூற முடியுமா? என்று கேட்டார். அதற்கு ரணிலும் இணங்க அவரிடம் கேள்வியைக் கேட்டார்.
உங்கள் அம்மாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது…… உங்கள்அப்பாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது…… அனால் அது உங்கள் சகோதரரோ சகோதரியோ இல்லை……. அப்படியானால் அவர் உங்களுக்கு யார் என்று கேட்டார்?
அதற்கு ரணில் விக்கரமசிங்கே உடனே அது நான் தான் என்று பதில் கூறினார்.
மேர்வின் சில்வா அவர்கள் மீண்டும் மஹிந்தவிடம் வந்து எனக்கு அது யார் என்று தெரியும் என்று சொன்னார்.
மஹிந்த யார் என்று கேட்ட போது….
அது எங்களுடைய ரணில் விக்கரமசிங்கே என்று பதில் கூறினார்.
அதற்கு மஹிந்த அது தவறு…………
அது … மன்மோகன்சிங் …… என்று கூறினார்…..
இது எப்படி இருக்குது?……
 http://www.jvpnews.com/srilanka/95692.html

Geen opmerkingen:

Een reactie posten