தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 januari 2015

சுதந்திரக் கட்சியினர் 58 லட்சம் மக்களை காட்டிக் கொடுத்து விட்டனர்: விமல் வீரவன்ஸ

ஜாதிக ஹெல உறுமய கலைக்கப்படாது: நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 05:40.51 AM GMT ]
ஜாதிக ஹெல உறுமய கட்சியை கலைத்து விட்டு அமைச்சர் சம்பிக்க ரணவக்க உட்பட அந்த கட்சியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை என கட்சியின் ஊடகப் பேச்சாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
கட்சி தீர்மானம் ஒன்றை எடுக்குமாயின் அது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுவில் கலந்துரையாடிய பின்னரே முடிவு செய்யப்படும், ஆனால் அப்படியான எந்த தீர்மானங்களும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் பற்றி கட்சியின் மத்திய செயற்குழுவில் பேசப்பட்டால் அது குறித்து நாட்டுக்கு பகிரங்கமாக அறிவிக்கப்படும்.
இதனால், ஜாதிக ஹெல உறுமய கட்சி கலைக்கப்பட்டு அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள போவதாக வெளியாகியுள்ள தகவல்களில் எந்த உண்மையுமில்லை எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

உமாஓய திட்டத்தை உடனடியாக நிறுத்தவும்: ஹரின் பெர்னாண்டோ
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 05:57.23 AM GMT ]
ஈரான் - இலங்கை அரசாங்கத்தின் கீழ் கட்டுமான பணிகளில் உள்ள உமாஓய திட்டத்தை நிறுத்தவும் இல்லை என்றால் மாற்று பாதையை பயன்படுத்துமாறு ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் மூலம் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
ஈரான் - இலங்கை அரசாங்கத்தின் கீழ் இயங்கும் உமாஓய திட்டம் வெலிமடை ஊவா பரனகம பிரதேசத்தில் ஆரம்பித்து பண்டாரவளை, எல்ல, வெல்லவாய ஊடாக தற்பொழுது நீண்ட சுரங்கங்கள் கட்டப்படுகின்றது.
இத் திட்டம் சூழலை மாசுபடுத்தி கட்டப்படுகின்றதனால் உடனடியாக கட்டுமான பணிகளை நிறுத்துமாறு கோரிக்கை ஒன்றினை முன்வைத்து ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட ஹரின் பெர்னாண்டோ, உமாஓய திட்டம் மக்களின் வேண்டுகோளின்றி கடந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.
இத் திட்டத்தின் மூலம் சூழலை பாதுகாப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திரக் கட்சியினர் 58 லட்சம் மக்களை காட்டிக் கொடுத்து விட்டனர்: விமல் வீரவன்ஸ
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 06:24.16 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்ததன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்த 58 லட்சம் மக்களை காட்டிக்கொடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தனவின் வீட்டில் நடைபெற்ற கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த சில கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இரகசிய கூட்டம் ஒன்றில் வீரவன்ஸ இவ்வாறு கூறியுள்ளார்.
கீதாஞ்சன குணவர்தன வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ஸ, திஸ்ஸ விதாரண, டியூ. குணசேகர, டக்ளஸ் தேவானந்தா, வாசுதேவ நாணயக்கார, முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில, அரசாங்கம், மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இப்படியானவர்களை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் எப்படி இணைந்து பணியாற்றுவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக்குழுவை கூட்டியிருந்தார்.
அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என, கீதாஞ்சன குணவர்தன வீட்டில் நடைபெற்ற இரகசிய கூட்டத்திலேயே தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தீர்மானித்திருந்தனர்.
எனினும் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வது என டியூ. குணசேகர மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் முடிவு செய்தனர். தாம் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தமது நிலைப்பாடுகளை தெரியப்படுத்தி விட்டு வருவதாக இவர்கள் கூறினர்.
இதேவேளை இந்த இரகசிய கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரின் கீழ் செயற்படுவதில்லை எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfp2.html

Geen opmerkingen:

Een reactie posten