தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 januari 2015

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மீள்குடியேற்ற அமைச்சர் சந்திப்பு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு இன்று கூடுகிறது
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 08:49.49 AM GMT ]
முன்னாள் பிரதம நீதியரசர் தொடர்பாக சட்ட களத்தில் எழும்பியிருக்கும் சிக்கலை தீர்ப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிர்வாகக் குழு முன்னிலையில் இன்று கூடவுள்ளதாக குறித்த சங்கத்தின் ஆணையாளர் அஜித் பத்திரன தெரிவித்தார்.
மேலும் புதிய நீதியரசராக கே.ஸ்ரீபவன் நியமிக்கப்ட்டது சட்டப்பூர்வமான முறையில் எனவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceq1.html


நாடாளுமன்றத்தில் எழுப்பும் கேள்விகளுக்கு ஊடகங்களில் பதிலளிக்க வேண்டாம்: ஊடகத்துறை அமைச்சர்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 10:11.22 AM GMT ]
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் போது ஊடகங்களை பயன்படுத்த வேண்டாம் என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அதற்கு பதிலளிக்க, துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
லேக் ஹவுஸ் நிறுவனத்தில் நேற்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் நாள் வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பொய்யான தகவல்கள் எப்படி வெளியிடப்பட்டன என்பது குறித்து ஆராய்ந்து விபரமான அறிக்கையை வழங்குமாறும் அரசாங்க ஊடகங்களின் தலைவர்களிடம் கோரியுள்ளதாக அதனை அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்க உள்ளதாகவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக எழுதக் கூடிய ஊடக கலாச்சாரத்தை துரிதமாக ஏற்படுத்த வேண்டும் எனவும் நல்லாட்சி மற்றும் மைத்திரி நிர்வாகம் மூலம் அதனை ஏற்படுத்த போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceq2.html

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மீள்குடியேற்ற அமைச்சர் சந்திப்பு
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 10:27.08 AM GMT ]
இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவது மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பான இன்றைய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், மீள்குடியேற்றம், புனரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு சுவாமிநாதனின் அமைச்சில் நேற்று இடம்பெற்றது.
இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சுவாமிநாதன், பாதுகாப்பு தரப்பினருக்கு தேவையான நிலங்களை வைத்து கொண்டு, தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாத மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்படும்.
இதன் மூலம் மக்களுக்கும் படையினருக்கும் இடையில் சிறந்த நட்புறவுகளை ஏற்படுத்த முடியும். அத்துடன் அது தேசிய நல்லிணக்கத்திற்கும் ஏதுவாக அமையும்.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் சம்பூர் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேசங்களில் பல்வேறு காரணங்களினால் இதுவரை விடுவிக்கப்படாத மக்களுக்குரிய காணிகளில் அவர்களை மீண்டும் குடியேற்ற எண்ணியுள்ளோம்.
சம்பூரில் பெருமளவிலான நிலம் மின்சார நிலைய திட்டம் மற்றும் முதலீட்டுச் சபையின் கீழ் இருந்து வருகிறது. அவற்றில் இருக்கும் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு அதில் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.
இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு தெளிவுபடுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நாடராஜாபிள்ளை, மேலதிக செயலாளர் எம்.எம். தைமுதீன், மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரின் பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceq3.html

Geen opmerkingen:

Een reactie posten