தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 januari 2015

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் - வட மாகாண முதலமைச்சர் சந்திப்பு



வாழைச்சேனை பிரதேசத்தில் 22 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 05:16.03 AM GMT ]
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் ஜனவரி மாதத்தில் மட்டும் 22 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி ஏ.பி.திஸாநாயக்கா தெரிவித்தார்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் நுளம்புப் பெருக்கத்தை தடுக்கும் வகையில் வாழைச்சேனை கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் வேல்விஷன் நிறுவனம் என்பவற்றுடன் இணைந்து புதன்கிழமை தொடக்கம் எதிர்வரும் 04ம் திகதி வரை டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் வாரமாக பிரகடனப்படுத்தி மக்களை விழிப்பூட்டும் வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் நேற்று கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் விநாயகபுரம் பிரதேசத்தில்  இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸ், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், வாழைச்சேனை பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், வேல்விஷன் நிறுவனத்தின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
விநாயகபுரம் பிரதேசத்தில் வீடுகள், வர்த்த நிலையங்கள், பாடசாலை உட்பட 385 இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 45 இடங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டதுடன், ஏழு வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் தெரிவித்தார்.

கொழும்பு - கண்டி பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி! 4 பேர் காயம்
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 05:27.42 AM GMT ]
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை - தெதிகம பிரதேசத்தில் இன்று காலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 04 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வான் ஒன்று பாதையைவிட்டு விலகியதனாலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது. விபத்தில் உயிரிழந்தவர் வேன் சாரதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் - வட மாகாண முதலமைச்சர் சந்திப்பு
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 05:33.17 AM GMT ]
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோறே ஸ்வைர் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
யாழ்ப்பாணம் சென்ற வெளிவிவகார அமைச்சர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு  வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
அத்துடன் இங்குள்ள நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார். அவருடன் இலங்கைக்கான பிரித்தானிய தூதர் ஜோன்ரன்கினும் பங்கேற்றிருந்தார்.
இங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பிரிட்டிஷ் கல்லூரிக்குச் சென்று ஆங்கில மொழி கற்கைகள் குறித்தும் அவர் ஆராய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfpz.html

Geen opmerkingen:

Een reactie posten