தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

64 வயதான பெண்ணை வல்லுறவு கொண்ட இலங்கை இளைஞன் தமிழகத்தில் கைது

மனசாட்சிக்கு உண்மையாக வேலை செய்யவும்: தேர்தல் ஆணையாளர்
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 04:19.38 AM GMT ]
சகல அரசாங்க அதிகாரிகளும் நீதியுடனும் மனசாட்சிக்கு உண்மையாகவும் வேலை செய்தால் சிறந்த நாட்டை நிர்மாணிப்பது பெரியதொரு வேலை இல்லை என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.
மொனராகலை மாவட்ட செயலாளர் அலுவலகத்தின் புதிய உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாராவது தன் மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொண்டால் அவர்கள் மதங்களின் சார்பாக வாழ்பவர்களாகும். மனச்சாட்சிக்கு உண்மையாக வேலை செய்தால் அவர்கள் சிறந்த அரசியல் கட்சி கொள்கையின் படி வேலை செய்பவர்களாகும்.
மனசாட்சிக்கு உண்மையாக வேலை செய்தால் அவர்கள் அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களின் படி வேலை செய்பவராகும்.
எனவே அரசாங்க அதிகாரிகளான நாங்கள் அனைவரும் மனச்சாட்சிக்கு உண்மையாகவும் நீதிக்கு உண்மையாகவும் செயற்பட்டால் எங்கள் நாட்டை சிறந்த நாடாக மாற்ற முடியும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchwy.html
தென் மாகாண முதலமைச்சருக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு?
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 04:29.36 AM GMT ]
தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வாவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
காலி நகரசபையின் மேயர் இந்த முறைப்பாட்டை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக காலி நகரசபை மேயர் மெத்சிறி டி சில்வா தெரிவித்துள்ளார்.
சுமார் 25 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அநேகமாக இன்று பிற்பகல் அளவில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் தென் மாகாண முதலமைச்சருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சரும் நகரசபை மேயரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.http://www.tamilwin.com/show-RUmtyBRbKchw0.html

ஆனைமடு விபத்தில் கர்ப்பினி பெண் பலி!
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 04:58.18 AM GMT ]
ஆனைமடு, தோணிக்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் கொட்டுகச்சி, புராணகம பிரதேசத்ததை சேர்ந்த 32 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
டிப்பர் வண்டி ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதனால் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் உயிரிழந்துள்ளார். டிப்பர் வண்டி சாரதியை ஆனைமடு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchw2.html

64 வயதான பெண்ணை வல்லுறவு கொண்ட இலங்கை இளைஞன் தமிழகத்தில் கைது
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 05:39.23 AM GMT ]
பெண் ஒருவரை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த 25 வயதான இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு கன்னியாகுமாரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 64 வயதான தலித் இனப் பெண்ணையே குறித்த இளைஞன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பெண் கன்னியாகுமாரி மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த இளைஞனைக் கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆயர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என அந்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchw4.html

Geen opmerkingen:

Een reactie posten