தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

முக்கிய கொலையில் கோத்தா! பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்….

ஐரோப்பிய ஒன்றிய கறுப்புப் பட்டியலில் இலங்கை….

இதையடுத்து, சிறிலங்கா கொடி தாங்கிய கப்பல்களினால், பிடிக்கப்படும் கடலுணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது அதிகாரபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
பிரசெல்சில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்றொழில் அமைச்சர்களின் பேச்சுக்களின் போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் நேற்றுத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சூரை மற்றும் வாள் மீன் ஏற்றுமதியில் சிறிலங்காவே இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது.
எனினும், சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் 2012ம் ஆண்டு தொடக்கம் சிறிலங்காவை எச்சரித்து வந்தது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காத நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/95555.html

வடக்கு மீது தாக்குதலுக்குத் தயாராகும் கோத்தா படை

ஏற்கனவே இராணுவ முகாம் ஒன்றில் இரகசியமாக தாக்குதல்களுக்காக ஒரு குழுவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக பல்வேறு இராணுவ முகாம்களிலருந்து 400 முதல் 500 பேர் வரையில் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதன் ஊடாக பயங்கரவாதம் தலைதூக்கியதாக பிரச்சாரம் செய்து, இனவாதத்தை விதைத்து ஆட்சியை கைப்பற்றுவதே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் திட்டமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும், இந்த சூழ்ச்சித் திட்டம் தொடர்பில் இராணுவத்தைச் சேர்ந்தவர்களே தகவல்களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கத்தை பாதுகாக்க பல்வேறு தரப்பினரும் இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் ஊழல் மோசடிகள் தொடர்பில் 2000த்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சூழ்ச்சித் திட்டம் தொடர்பில் அமைச்சரவையிடம் சமர்ப்பித்துள்ளதாக விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/95561.html

முக்கிய கொலையில் கோத்தா! பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்….

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் 59வது ஜனன தினம் இன்றாகும். இந்த நிலையில் இவ்வாறு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் தனது வாக்குமூலத்தில், இலங்கையில் தான் தங்கியிருந்தால் மகிந்த குடும்பம் மற்றும் கோத்தபாயவினால் கொலை செய்யப்படலாம் என்ற நிலையில் நாட்டை விட்டு வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணி வாசுகி முருகதாசிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹிருணிகா மற்றும் மேர்வின் சில்வா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கடந்த 2011ம் ஆண்டு ஒக்டோபர் 8ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/95566.html

Geen opmerkingen:

Een reactie posten