தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 januari 2015

போரினால் ஏற்பட்ட மாசடைவுகளைக் கணக்கிலிட முடியாது: விக்னேஸ்வரன்

பொருட்களுக்கான விலைகளை குறைக்க முடியாது: இறக்குமதிச் சங்கம்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 07:23.38 AM GMT ]
அத்தியாவசிய உணவு பொருட்கள் 13ற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விலை குறைப்பிற்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாது என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிச் சங்கம் தெரிவிக்கின்றது.
அதற்கு காரணம் டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதே என தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் குறித்த உணவு பொருட்கள் சிறிதளவிலே குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை வரவு செலவு திட்டத்தின் வழங்கிய விலை குறைப்பிற்கு ஏற்றவாறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதற்கு விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது என வாடிக்கையாளர் சேவை அதிகாரி தெரிவிக்கின்றார்.
அதற்காக மாவட்ட செயலகம் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcep4.html
மலையக அமைச்சர்கள் மூவரும் புதிய மாற்றத்திற்கான புதிய பாதைக்கு புத்துயிர் அளிப்போம்: திகாம்பரம்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 07:25.30 AM GMT ]
மலையகத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்களும், மனோகணேசனும் சேர்ந்து மலையக மக்களின் புதிய மாற்றத்திற்கான பாதைக்கு புத்துயிர் அளிக்கப்போவதாக என்று தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அமைச்சுப் பதவியை பொறுப்பேற்ற அவர் மலையகத்தின் முக்கிய பிரச்சினையான மலையக வீடமைப்புத்திட்டத்தை ஆரம்பிக்கும் முன் மல்வத்து மகாநாயக்க தேரர் வண. திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து நல்லாசி பெற்றுக் கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மலையகத்தில் இன்று பாரிய பிரச்சினையாக இருப்பது தனி வீடு, கல்வி, சுகாதாரம் தொடர்பானவையாகும். முன்னர் சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த போது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை தோட்ட மக்களுக்காகக் தந்திருந்தார்.
ஆனால் 2007 இன் பின் அவை நீக்கப்பட்டன. அன்று தோட்டப் பகுதி மக்களுக்கு இதனூடாக பல்வேறு சேவைகளை வழங்கி இருக்க முடிந்த போதும் அன்றைய எமது தலைவர்களது தனிப்போக்கு காரணமாக அவை வெற்றி அளிக்கவில்லை.
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தோட்ட மக்களின் பாரிய பிரச்சினையாகவுள்ள தனி வீட்டுப் பிரச்சினையை இனம் கண்டு தீர்ப்பதற்கு முன்வந்துள்ளனர்.இதனை அடுத்தே நாம் அவர்களது வெற்றிக்கு உதவினோம். தற்போது தோட்ட மக்களுக்கென்றே உருவாக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு எனக்குத் தரப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சு, அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. எம் இருவருடன் அமைச்சர் வேலாயுதம் மற்றும் மனோகணேசன் ஆகியோர் இணைந்து மலையக மக்களின் புதிய எதிர்ப்பார்ப்பான 7 பேர்சஸ் காணியில் அமைந்த தனி வீடு பற்றிய எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் பொன்னான நாள் கனிந்துள்ளது. இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
நூறு நாள் வேலைத்திட்டத்துடன் இதனையும் இணைத்து செயற்படவுள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவரையும் பழிவாங்கும் எண்ணம் கொண்டவர் அல்ல. அவர் அனைத்து தரப்பையும் இணைத்தே செயற்பட விரும்புகின்றார். எனவே அவருடன் எவரும் இணையலாம். அது பற்றி எமக்கு எவ்வித கருத்து முரண்பாடுகளும் இல்லை. ஆனால் பெருந்தோட்டத் துறையைப் பொறுத்தவரை வெளியாருக்கு அதில் செல்வாக்கு செலுத்த முடியாது.
தோட்ட உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளை தற்போது தோட்டப் பகுதியில் இருந்து அமைச்சர்களாகப் பதவி வகிக்கும் எம் மூவருடன் மனோகணேசனும் இணைந்தே முன்னெடுப்போம். அதற்கு வேறு யாரையும் அனுமதிக்க மாட்டோம். பெருந்தோட்டப் பகுதிகளுக்கு சேவை செய்யும் பல்வேறு சந்தர்ப்பம் எம்மில் பலருக்குக் கிடைத்தது.
அதனை அவர்கள் தவற விட்டு விட்டனர். தனிப்பட்ட சுக போகங்களுக்கே அவற்றைப் பயன் படுத்தினர். இந்நிலையில் மாற்றம் தேவை என்ற கோஷம் தோட்டப் பகுதிகளிலும் தொடர ஆரம்பித்தது. இதன் விளைவாகவே என்போன்ற சிலர் இன்று அமைச்சர்களாக முடிந்தது. நான் தோட்டப் பகுதியில் பிறந்தவன், தோட்டப் பகுதியிலே வாழ்ந்தவன், தோட்ட மக்களின் இன்ப துன்பங்களை அறிந்தது மட்டுமல்ல அதில் ஒன்றறக் கலந்தவன். எனவே என்னால் தோட்டப் பகுதிக்கு கச்சிதமாக சேவையாற்றும் தகுதி உண்டு என்பதை உணர்கிறேன், பிரதமரும் அதனை உணர்ந்தே எனக்கு இப்பதவியை ஒப்படைத்துள்ளார். எனவே இது ஒரு பொன்னான சந்தர்ப்பமாகும், இவ் அரசின் புதிய வரவு– செலவுத்திட்டம் பற்றி பலர் பல்வேறு விதமாக விமர்சிக்கின்றனர்.
ஆனால் இது தோட்டப் பகுதி மக்களுக்கான வரவு செலவுத்திட்டம் என்பதில் ஐயமில்லை, ஏனெனில் கோதுமை மா, பாண், நெத்திலி, மண்ணெண்ணெய், கொத்தமல்லி, சரக்குத்தூள், இப்படியான பொருட்கள் தோட்டத் தொழிலாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவையாகும். அத்துடன் திரவப் பாலுக்கான விலையேற்றமும் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை சாதகமான ஒன்றாகும்.
எனவே இது மற்றவர்கள் கூறும் கொத்தமல்லி வரவு– செலவுத்திட்டமல்ல தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ஒரு வரவு– செலவுத்திட்டமாக இதனைக் கருதுகின்றேன்.
சாதாரணமாக தோட்டப் பிரதேசங்களில் தரிசாக உள்ள வீடு அமைக்கக் கூடிய சுமார் இரண்டு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் உள்ளன. இதில் வீடு கட்டுவதற்கு தற்போது 8000 ஏக்கர் போதுமானது, அதிலும் ஒரேநேரத்தில் தேவைப்படாது, சுமார் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டால் போதுமானது.
அவை அனைத்தும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கட்டப்படுவதில்லை, பகுதி பகுதியாக அவ்வப்போது மேற்கொள்ளப்படுவதனால் அதில் பிரச்சினைகள் இல்லை.
அத்துடன் மகாநாயக்க தேரர் நமது தோட்டப் பகுதிப் பிரச்சினைகளை நன்கு அறிந்துள்ளார், அவர் ஆசீர்வாதமும் கிடைத்துள்ளது, எனவே, வெகுவிரைவில் எமது தனி வீடு பற்றிய நீண்டகாலக் கனவு நனவாகும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcep5.html
பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் பொதுபல சேனா
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 08:30.54 AM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிவது குறித்து பொதுபல சேனா அமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பல தரப்பிடம் இருந்து தமது அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கைகள் பற்றி முழுமையான ஆராய்ந்து சிங்கள பௌத்த மக்களுக்காக சரியான தீர்மானம் ஒன்றை தமது அமைப்பு எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது எதிர்க்கட்சியின் பணியை பொதுபல சேனாவே மேற்கொண்டது எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceqy.html
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் இன்று இலங்கை விஜயம்!
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 08:42.19 AM GMT ]
பொதுநலவாய மாநாடுகளின் செயலாளர் கமலேஷ் ஷர்மா இன்று இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கை வரவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.
கமலேஷ் ஷர்மா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரம சிங்க,வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய கமலேஷ் ஷர்மா எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார். கமலேஷ் ஷர்மா குறித்த விஜயத்தின் போது இவ்வருடத்தில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாடு குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceqz.html
போரினால் ஏற்பட்ட மாசடைவுகளைக் கணக்கிலிட முடியாது: விக்னேஸ்வரன்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 08:46.55 AM GMT ]
வடக்கில் போரினால் ஏற்பட்ட மாசடைவுகளைக் கணக்கிலிட முடியாது, இன்னும் முப்பது வருடங்களுக்கு அதன் தாக்கத்தைத் தெரிவித்தே தீரும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட சுற்றாடல் முன்னோடி பாசறை வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லூரியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு முதல்வர் மேலும் கூறியதாவது,
எமது இளைஞர், யுவதிகள் ஒன்றை மட்டும் மிக முக்கியமாக மனதில் வைத்திருக்க வேண்டும். அதாவது இந்த சுற்றாடல் மாசடைதலானது உலக ரீதியில் தற்பொழுது பெரும் பிரச்சினையாக மாறிக் கொண்டிருகின்றது என்பதே அது.
பூகோள வெப்பநிலை, ஓசோன் படலம் சிதைவடைதல், மண் அரிப்படைதல், பனிமலை உருகுதல், கடல்மட்டம் உயர்வடைதல் போன்ற பல பிரச்சினைகளை சர்வதேச சமூகம் அலசி ஆராய்ந்து வருகிறது.
சுற்றுச் சூழலை மதிப்பது என்பது எமது சுயநலத்தில் இருந்து விடுபட்டு எம்மைச் சுற்றி உள்ளவர்களையும் உள்ளவற்றையும் நாம் மதிக்கும் ஒரு மனோநிலையாகும்.
சூழல் மாசடைவு நின்று கொல்லும் தன்மையது. “அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என்பது பழமொழி. சூழல் மாசடைவும் நின்று கொல்லுந் தன்மையது.
யாழ்ப்பாணத்தில் பெருகிக் கிடந்த குப்பை கூளங்களைத் திண்மக் கழிவுகளைப் போதியவாறு நாங்கள் அப்புறப்படுத்தாததால்தான் இருவரின் உயிர்கள் அண்மையில் டெங்குக் காய்ச்சலால் பறிக்கப்பட்டன.
அந்த இருவரின் இறப்புத்தான் எங்களை மும்முரமாகத் திண்மக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் கவனம் செய்ய வைத்தது.
சுயநலக் காரணங்களினால் எமது கடமைகளை நாம் செய்யாது விடுவது நாளடைவில் எம்மையே பாதிக்கும். இதை மனதில் வைத்து சுற்றாடல் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுங்கள். சூழல் மாசடைவதைத் தடுக்க முன்வாருங்கள், என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceq0.html

Geen opmerkingen:

Een reactie posten