கனடாவிலும் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில் சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டத்திற்கான வரைவொன்றை நாடாளுமன்றத்தில் நேற்று
சமர்ப்பித்தது. பயங்கரவாதத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டவிதிகள் கனேடிய புலனாய்வுச் சேவையினருக்கு அதிகரித்த அதிகாரங்களை வழங்குகின்றன.
சமர்ப்பித்தது. பயங்கரவாதத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டவிதிகள் கனேடிய புலனாய்வுச் சேவையினருக்கு அதிகரித்த அதிகாரங்களை வழங்குகின்றன.
சந்தேகத்துக்கிடமான தீவிரவாத போக்குடையவர்களின் பயணத் திட்டங்கள், வங்கிக் கொடுப்பனவுகள், அடிப்படைவாத போக்குடைய இணையத்தளங்கள் என்பவற்றுக்கு எதிராக புலனாய்வு சேவையினர் செயற்பட அதிகரித்த அதிகாரங்கள் வழிவகுக்கும்.
சந்தேக நபர் ஒருவரின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தவும், அவரை கைது செய்து தடுத்து வைக்கவும் ஆர்.சி.எம்பியினருக்கு அவை உதவியாக அமையவுள்ளன.
கனடா மீது பயங்கரவாத தாக்குதலை நடத்த ஊக்கமளிப்பது ஒரு குற்றச்செயலாக கருதி நடவடிக்கை எடுக்கவும் புதிய சட்டவிதிகள் இடமளிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten