தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 januari 2015

உணர்வுபூர்வமாக நடைபெற்ற கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தினம்

சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 11:10.38 AM GMT ]
முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது பிறந்த ஊரான அம்பலாங்கொடவில் அங்காங்கே பட்டாசுகள் கொளுத்தி மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சரத் பொன்சேகா 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து பொது வேட்பாளராக போட்டியிட்டதன் காரணமாக மகிந்த அரசாங்கம் அவரை அரசியல் ரீதியாக பழிவாங்கியது.
இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இராணுவ பதவிப் பட்டங்கள், ஓய்வூதியம், வாக்குரிமை, குடியுரிமை என்பன பறிக்கப்பட்டதுடன் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சரத் பொன்சேகாவை சகல குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்தார்.
இதனால், அவருக்கு மீண்டும் இராணுவப் பட்டங்கள் உள்ளிட்ட சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் தற்போது வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்தி:
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgv1.html

உணர்வுபூர்வமாக நடைபெற்ற கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தினம்
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 11:13.33 AM GMT ]
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று புதன்கிழமை மண்முனை தென்மேற்கு(பட்டிப்பளை) தமிழரசுக்கட்சி கிளை ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் "கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது ஆண்டு வணக்க நிகழ்வும் சமகால அரசியல்" கருத்தரங்கும் என்னும் தலைப்பில் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா, மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களினால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.
1989ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இரால் பண்ணையில் வேலையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த கொலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் ஐ.நா.வின் கவனத்துக்கு கொண்டு சென்றதை தொடர்ந்து படுகொலை சம்பவம் சர்வதேச மயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgv2.html

Geen opmerkingen:

Een reactie posten