தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

பிரதம நீதியரசராக கே.சிறிபவன் இன்று சத்தியப்பிரமாணம்

கசினோ திட்டத்தை கைவிட ஜேம்ஸ் பக்கரின் கிறவுன் குரூப் தீர்மானம்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 01:31.49 PM GMT ]
கொழும்பில் கசினா சூதாட்ட நிலையத்துடன் கூடிய ஹோட்டல் நிர்மாணிக்கும் திட்டத்தைக் கைவிடப்போவதாக ஜேம்ஸ் பக்கரின் கிறவுன் குரூப் அறிவித்துள்ளது.
பக்கரின், சுற்றுலா மையம் உட்பட மூன்று வெளிநாட்டு சுற்றுலா மையங்களுக்கான தாராள வரி சலுகைகளை இரத்து செய்யப்போவதாக இலங்கையின் புதிய அரசாங்கம் வியாழன்று அறிவித்தது.
இதனால் அத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப் போவதில்லையென ஜேம்ஸ் பக்கரின் கிறவுன் குரூப் கூறியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த கம்பனிக்கு பல வரிச் சலுகைகளை வழங்கியிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfv7.html
பிரதம நீதியரசராக கே.சிறிபவன் இன்று சத்தியப்பிரமாணம்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 01:31.06 PM GMT ]
புதிய பிரதம நீதியரசராக கே.சிறிபவன், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இவர் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதியரசராகவும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஷ்ட ஆலோசகராகவும் பிரதி சட்டமா அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
கனகசபாபதி ஜே.ஸ்ரீபவன் 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார். யாழ் இந்து கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்ற அவர் சட்ட கல்லூரியில் இணைந்து கொண்டதுடன் 1976 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியின் பரீட்சையில் முதல் தரத்தில் சித்தியடைந்தார்.
1978 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிக்கு சேர்ந்த ஸ்ரீபவன், பதில் சட்ட ஆலோசகராக பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டு சிரேஷ்ட சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்தி:
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfv6.html

Geen opmerkingen:

Een reactie posten