[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 01:18.01 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த தகவலை அறிவித்தார்.
மஹிந்தோதய தொழில்நுட்பக் கல்லூரி கட்டுமானப் பணிகள் மூலம் பெருந்தொகையான பணம் மோசடி செய்யப்பட்டதாக முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
என்னை மோசடிக்காரன் என கல்வியமைச்சர் குறிப்பிட்டமை முற்றிலும் உண்மைக்குப் புறப்பானது. இதனை அவர் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபித்தால் மக்கள் மத்தியில் பொது மன்னிப்புக் கோரி அரசியலிலிருந்து விடைபெறுவேன்
தமக்கெதிராக சுமத்தியுள்ள பொய்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் மானநஷ்ட வழக்குத் தொடரப்போவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மொஹான் பீரிஸை பயமுறுத்தவில்லை!- அசாத் சாலி
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 01:19.43 AM GMT ]
தாம், அவருக்கு நிகழ்வு ஒன்றுக்கான அழைப்பை விடுக்கவே அவரின் இல்லத்துக்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதவி விலகுமாறு தாம் பிரதம நீதியரசரை பயமுறுத்தியிருந்தால், அவரின் பாதுகாவலர்கள் தம்மை கைது செய்திருக்க முடியும் என்று சாலி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தமது வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசித்த சாலி, தம்மை பயமுறுத்தியதாக மொஹான் பீரிஸ், கறுவாத்தோட்டம் பொலிஸில் நேற்று முன்தினம் முறையிட்டிருந்தார்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய இடைக்கால வரவு செலவுத் திட்டம், பழையதை மாற்றாது!- பிரதிபா மகாநாம
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 01:36.14 AM GMT ]
தனியார் வானொலி நிகழ்ச்சியில் இது தொடர்பாக இன்று காலை கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் இவ்வாறான இடைக்கால வரவு செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஏற்கனவேயுள்ள வரவு செலவுத் திட்டத்தில் குறைநிரப்பும் ஒன்றாகவே இது முன்வைக்கப்படுகின்றது. இது புதிய ஒரு வரவு செலவுத் திட்டம் அல்ல.
இந்த வரவு செலவுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் தேவையெனவும் அவர் மேலும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcgx5.html
யோஷித்த கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டமை குறித்து ஆராய விசாரணைக் குழு
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 01:56.17 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித்த ராஜபக்ஷ கடற்படையில் இணைந்து கொள்ளப்பட்டமை குறித்து ஆராய்வதற்கு விசாரணைக் குழுவொன்றை கடற்படைத் தளபதி நியமித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ கடற்படையில் லெப்டினனாக கடமையாற்றி வருகின்றார்.
எந்த அடிப்படையில் யோஷித்த ராஜபக்ஷ கடற்படையில் உள்ளீர்க்கப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
யோஷித்த ராஜபக்ஷ, கடற்படைச் சட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டதாக பாதுகாப்புச் செயலாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை கருத்திற் கொண்டு உரிய விசாரணை நடத்துமாறு கடற்படைத் தளபதிக்கு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கடற்படையின் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடற்படையிலிருந்து ராஜினாமா செய்வதாக யோஷித்த ராஜபக்ஷ, கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள போதிலும் இதற்கு கடற்படைத் தளபதி அனுமதியளிக்கவில்லை என கடற்படை பேச்சாளர் கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார்.
யோஷித்த கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டதன் பின்னர், வழங்கப்பட்ட பதவி உயர்வு, வெளிநாட்டுப் புலமைப் பரிசில், கடற்படையில் கடமையாற்றியவாரே அரசியலில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ஜே.வி.பி. கட்சியினரும் யோஷித்த தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcgx7.html
வவுனியா தீ விபத்தில் காயமடைந்த கணவனும் மரணம்
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 01:59.36 AM GMT ]
வவுனியா, உக்கிளாங்குளத்தில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில் கணவனும் மனைவியும் சிக்கி காயமடைந்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் கஜேந்திரன் சுதாஜினி (வயது 28) மரணமானார்.
இவரின் கணவரான பாலச்சந்திரன் கஜேந்திரன் (வயது 40) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பயனளிக்காமல் அவர் நேற்று மாலை மரணமானார் என தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
முன்னைய செய்தி - வவுனியாவில் தீயில் கருகி மனைவி பலி! கணவன் வைத்தியசாலையில்
ஜே.வி.பியும், ஹெல உறுமயவும் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன!– தே.சு.முன்னணி
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 02:07.03 AM GMT ]
குமரன் பத்மநாதனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி வழக்குத் தொடர வேண்டுமென விடுக்கப்படும் கோரிக்கையானது, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் தேவையாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஸாம்மில் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிற்கு பின்னர் குமரன் பத்மநாதனே புலிகளின் தலைவராக கடமையாற்றி வந்தார்.
குமரன் பத்மநாதனை கைது செய்த அரசாங்கம், பல்வேறு புலனாய்வு நடவடிக்கைகளுக்காக அவரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்.
இதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு நான்காக பிளவடைந்தது.
கே.பி. கைது செய்யப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் சார்பில் ஒரு உளவாளியாக செயற்பட்டார்.
திறந்த நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்து கேள்வி எழுப்புவதன் மூலம் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் அம்பலமாகக் கூடிய அபாயம் காணப்படுகின்றது. அவ்வாறான நடவடிக்கைகள் நியாயமானது.
புலனாய்வுத் தகவல்களை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கே அதிகளவில் காணப்படுகின்றது.
பிளவடைந்த புலிகளின் புலம்பெயர் இயக்கங்கள் இணைந்து செயற்பட வழியமைக்கும் என முஸாம்மில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பத்தரமுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfoz.html
Geen opmerkingen:
Een reactie posten