தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 januari 2015

ஆட்சி மாற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது! கௌரவ சொற்பதங்களில் என்னை அழைக்க வேண்டாம்!: ஜனாதிபதி

நாடு முழுவதிலும் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளேன்: சஜித் பிரேமதாச
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 04:34.48 PM GMT ]
நுறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று செவ்சிறிபாயவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனது எந்த ஒரு ஒப்பந்தமும் ஒளிவு மறைவுமின்றி விளம்பரப்படுத்தப்படும்.
எனது அமைச்சின் கீழ் உள்ள அதிகார சபைகள், நிறுவனங்களில் ஒருபோதும் எனது கட்சிக்காரர், சொந்தக்காரர் மற்றும் தோ்தலில் உதவி செய்தவர்களை பணிப்பாளர் சபையில் நியமிக்கப் போவதில்லை.
ஒவ்வொரு துறையிலும் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர்களையே தேடுகின்றேன்.
எனது அமைச்சினை நடைபெற்றுள்ள லஞ்சம், நிதி மோசடிகளை சர்வதேச கணக்காய்வாளர் கம்பனி ஆய்வு செய்து வருகின்றது.
அதன் பின் இந்த அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஊழல், நிதி மோசடி, அதற்கு உடந்தையானவா்கள் வெளியில் அனுப்பப்படுவார்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKces0.html

பணி நீக்கம் செய்யப்பட்ட முறைமை பிழையானது: மொஹான் பீரிஸ்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 04:59.43 PM GMT ]
பிரதம நீதியரசர் பதவியிலிருந்து பணி நீக்கப்பட்ட முறைமை பிழையானது என முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பணி நீக்கியமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் நான் பணி நீக்கப்பட்டுள்ளேன். நான் இன்னமும் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெறவில்லை, காரியாலயத்திலிருந்து வெளியேறவும் இல்லை.
புற அழுத்தங்கள் காரணமாக என்னை பதவியிலிருந்து சட்டவிரோதமான முறையில் நீக்கியுள்ளனர்.
உரிமைகளை விடவும் அதிகாரம் வலுவானது. இதனால் அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையினர் ஷிராணி பண்டாரநாயக்கவை பணி நீக்கியுள்ளனர். இதுவே இறுதி முடிவாகும் என மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.


ஆட்சி மாற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது! கௌரவ சொற்பதங்களில் என்னை அழைக்க வேண்டாம்!: ஜனாதிபதி
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 04:14.39 PM GMT ]
நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள ஊடகங்களுக்கு வழங்கி வரும் விசேட நேர்காணலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தை தோற்கடிக்க இளைஞர் யுவதிகள் முக்கியமான ஒத்துழைப்பை வழங்கினர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தை தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கினர்.
மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் எதிர்பார்ப்புடன் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும்.
100 நாள் திட்டத்தை முன்னெடுப்பது அவ்வளவு சுலமான காரியமல்ல.
அதீதிதமான அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு காணப்பட்டாலும், நாடாளுமன்றின் ஒத்துழைப்பின்றி 100 நாள் திட்டத்தை அமுல்படுத்த முடியாது.
இரண்டாண்டுக்காவது தேசிய அரசாங்கமொன்றின் மூலம் ஆட்சி நடத்த முயற்சிக்க வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பிர்களின் ஒத்துழைப்பின்றி 100 நாள் திட்டம் வெற்றியளிக்காது.
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதி மேன்மை தாங்கிய என என்னை விளிக்க வேண்டாம் - ஜனாதிபதி
அதி மேன்மை தாங்கிய என தம்மை விளிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதி மேன்மை தாங்கிய, அதி வணக்கத்திற்குரிய, சேர், கௌரவ ஜனாதிபதி என்றெல்லாம் என்னை விளிக்கக் கூடாது.
இவ்வாறான விசேட சொற்பதங்களைக் கொண்டு என்னை அழைக்கக் கூடாது என்பது பற்றி அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன்.
எனது துணைவியை ஜனாதிபதியின் பாரியார் என்றெல்லாம் அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி கோரியுள்ளார்.
ஜனாதிபதி பங்கேற்ற முதலாவது நேர் காணல் நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcesz.html

Geen opmerkingen:

Een reactie posten