தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

பதவியை இழந்தார் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்!

இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிசின் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீளப் பெற்றுள்ளார்.
இழுபறி நிலையில் இருந்த பிரதம நீதியரசரின் பதவி விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.
நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிசின் பதவியை மீளப் பெற்றுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.
சட்டத்திற்கு முறனாக பதவி நீக்கப்பட்ட முன்னால் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா அவ் வெற்றிடத்திற்கு நியமிக்கப் பட உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இவர் பதவியை நீடிக்க விரும்பாத சந்தர்ப்பத்தில் உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட அதிக சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten