தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 januari 2015

தமிழர்கள் மீதான பாலியல் வன்கொடுமையினை ஆவணப்படுத்திய கலாநிதி பிறையன் செனிவிரத்தின

அரசின் தொந்தரவுகள் குறித்து ஆராய எதிர்க்கட்சியின் குழு
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 12:43.22 PM GMT ]
ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக அரசாங்கத்தை சேர்ந்த பல நபர்களினால் ஏற்பட்ட தொந்தரவுகள் மற்றும் அழுத்தங்கள் குறித்து ஆராய எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.
இந்த குழு சேர் மாக்ஸ் பெர்னாண்டோ மாவத்தை இருக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இயங்கும்.
குழுவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தனிப்பட்ட ரீதியில் ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் சுதந்திரக் கட்சியினருக்கு ஏற்பட்ட தொந்தரவு குறித்து நேரில் அங்கு சென்று தேடிப்பார்த்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcer1.html


பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பி நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் எங்கே?- மக்கள் ஆர்ப்பாட்டம்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 12:19.36 PM GMT ]
இளைஞனொருவர் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி ஓடி மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் பாய்ந்து காணாமல் போயுள்ளார்.
தலவாக்கலை நகரத்தில் பாபுள் வெற்றிலையை கையில் வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து, விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
கொண்டு செல்லும் வழியில் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி ஓடி மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் பாய்ந்து காணாமல் போயுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நீர்தேக்கத்தின் பாலத்திலிருந்து கீழே 40 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் தொடர்பாக எந்த விடயமும் தெரியாதெனவும் இவர் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாகவும் குறித்த நபரை தேடுதல் பணிகளிலும் தலவாக்கலை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
தலவாக்கலை நகரில் பொலிஸ் பிடியில் இருந்து தப்பி சென்ற இளைஞன் மேல்கொத்மலை நீா்தேக்கத்தில் பாய்ந்து காணாமல் போயுள்ளார்.
குறித்த நபர் பாய்ந்ததுக்கான காரணம் குறித்த பொலிஸார் தான் என கோரி பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி தலவாக்கலை பூண்டுலோயே பிரதான வீதியை மறித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcerz.html


தமிழர்கள் மீதான பாலியல் வன்கொடுமையினை ஆவணப்படுத்திய கலாநிதி பிறையன் செனிவிரத்தின
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 12:10.45 PM GMT ]
தமிழ் மக்களின் நீதிக்காக 1948ம் ஆண்டிலிருந்து குரல் கொடுத்து வருபவரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனற்சபை உறுப்பினருமாகிய கலாநிதி பிறையன் செனிவிரத்தினவால் எழுதப்பட்ட “Sri Lanka: Rape of Tamil Civilians in the North and East by the Sri Lankan Armed Forces” எனும் புத்தகம் அவுஸ்திரேலியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
177 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள ஸ்ரத்வீல்ட் நகரிலுள்ள கறிங்ரன் தேவாலய மண்டபத்தில் கடந்த சனவரி மாதம் 17ம் தேதி வெளியிட்டு வைக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் செனற்சபை உறுப்பினர் லீ றியனன் அவர்கள் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்ததோடு அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை ஏன் கண்டனம் செய்யவில்லை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
முன்னாள் நீதியரசரும், முன்னாள் நியூ சவுத் வேல்ஸ் மாநில அமைச்சருமான ஜோன் டவுட் (Chancellor – Southern Cross University) புத்தகத்திற்கான ஆய்வுரையை வழங்கியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினரால் (உயர் அதிகரிகள் உட்பட) ஆண், பெண், சிறுமிகள், சிறுவர்கள் என பராபட்சமின்றி தமிழர்கள் இலங்கைத்தீவில் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என தனது நிறைவுரையில் கலாநிதி பிறையன் செனிவிரத்தின அவர்கள் கூறியிருந்தார்.
இப்புத்தக வெளியீட்டு நிகழ்வில் பல தமிழ் அமைப்புக்கள் மற்றும் ஆர்வலர்கள் பலர் பங்கெடுத்திருந்ததோடு புத்தகத்தினால் பெறப்படும் வருமானம் தமிழீழத் தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தின் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcery.html

Geen opmerkingen:

Een reactie posten