தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 januari 2015

அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் தமிழர்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் இல்லை !

நமால் ராஜபக்ஷவின் நடமாடும் விடுதியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது !

[ Jan 30, 2015 05:50:55 AM | வாசித்தோர் : 29965 ]
நாமல் ராஜபக்சவால் நடத்தப்பட்ட நடமாடும் விடுதி ,அதாவது ஹோட்டல் கண்டுபிடிக்கப்படுள்ளது அந்த நடமாடும் விடுதி வாகனத்தில் ஆடம்பர வசதிகள் மற்றும் இருக்கைகள் கொண்டவையாகவும் இருந்தது. பொதுநலவாய அமைப்பின் மாநாட்டுக்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்றை தனதாக்கி கொண்ட மஹிந்த மகன் நாமல் ராஜபக்ஷ தனது சுகபோக வாழ்க்கைக்கு பயன்படுத்தியுள்ளார்.
அந்த வாகனத்தையே தற்பொழுது பொலிசார் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த வாகனத்தை பயன்படுத்தி பல குற்றசெயல்கள் மற்றும் பெண்களை பலவந்தமாக தனது விருப்பத்துக்கு பயன்படுத்தி வந்தார் என்று தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.athirvu.com/newsdetail/2131.html

அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் தமிழர்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் இல்லை !

[ Jan 31, 2015 03:18:54 PM | வாசித்தோர் : 6910 ]
புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் சிறுபான்மைமக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் அன்ட்றூ மெக்டொனாவ் குற்றம் சுமத்தியுள்ளார். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள போதிலும், நூறு நாள் திட்டத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பதில் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரிபால சிறிசேன கடமையாற்றியுள்ளார் எனவும், இதனால் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு மெய்யாகவே தீர்வு காண மைத்திரிபால விரும்புகின்றாரா என்பது பற்றி கேள்வி எழுப்பும் உரிமை மக்களுக்கு உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் விசாரணைகளை உதாசீனம் செய்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வுத் திட்டங்களையும் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் வழங்கத் தவறினால் எவ்வாறான விளைவுளை எதிர்நோக்க நேரிடும் என்பதனை பிரித்தானிய தெளிவுபடுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/2139.html

Geen opmerkingen:

Een reactie posten