தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 januari 2015

மொஹான் பீரிஸ் வழங்கிய தீர்ப்புக்களும் சூன்யமாக்கப்பட வேண்டும்: சரத் என் சில்வா

வரவு செலவுத் திட்டத்துக்கு முன் பிரதமர் விசேட உரை
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 06:45.37 AM GMT ]
பாராளுமன்ற கூட்டத் தொடரில் இன்று பிற்பகல் 01.00 மணிக்கு இடம்பெறவுள்ள கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் விசேட உரையாற்றவுள்ளார்.
இதன்பின்னர் நிதி அமைச்சர் என்ற வகையில் ரவி கருணாநாயக்க இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார். இதேவேளை குறித்த வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாக பல மானியங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அமைச்சர்கள் சற்று நேரத்திற்கு முன் உரையாற்றியுள்ளனர்.
விஷேடமாக 10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் தீர்மானித்துள்ள நிவாரணங்கள் வரவு செலவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலதிகமாக சுங்க வரி அதிகரிப்பு, சமுர்த்தி கொடுப்பனவுகள் அதிகரித்தல், அரசாங்க அதிகாரிகளின் சம்பளம் உயர்வு, ஓய்வூதியம் பெறுபவர்களும் ஓய்வூதியம் அகற்றும் வரை அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் வழங்குவது தொடர்பானவைகள் வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfp4.html

புத்தளம் பிரதேசத்தில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்கள் கைது
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 06:32.24 AM GMT ]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் புத்தளம் கொஸ்வத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 48 வயதுடையவர் எனவும் மற்றைய பெண் 30 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பெண்களிடம் விற்பனை செய்யவிருந்து ஒரு தொகை கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொஹான் பீரிஸ் வழங்கிய தீர்ப்புக்களும் சூன்யமாக்கப்பட வேண்டும்: சரத் என் சில்வா
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 06:53.20 AM GMT ]
பிரதம நீதியரசராக கடமையாற்றிய மொஹான் பீரிஸ் வழங்கிய தீர்ப்புக்களும் சூன்யமாக்கப்பட வேண்டுமென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு ஆண்டு காலத்தில் மொஹான் பீரிஸினால் வழங்கப்பட்ட வழக்குத் தீர்ப்புக்களும் சூன்யமாக்கப்பட வேண்டும். பிரதம நீதியரசர் பணி நீக்கப்பட்ட விதம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
நீதிமன்றின் உயர் பதவிகள் இவ்வாறு இழிவுபடுத்தப்படுகின்றமை ஏற்புடையதல்ல.
பிரதம நீதியரசர் பதவி 1802ம் ஆண்டு முதல் இலங்கையில் காணப்படுகின்ற போதிலும் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டதில்லை. இந்த நிலைமையினால் நீதிமன்றச் சேவைகள் நிச்சயமற்றத்தன்மையை எதிர்நோக்கி வருகின்றது.
எந்தவொரு காரியத்தையும் சட்ட ரீதியாக அன்றி அவசரமாக மேற்கொள்வதனால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் இதன் மூலம் புலனாகியுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளினால் நீதிமன்ற சேவைகள் மீதான மக்கள் நம்பிக்கை வீழ்ச்சியடையும்.
உயர் பதவிகளை வகித்தவர்கள் சட்டவிரோதமான முறையில் பணி நீக்கம் செய்யப்படுவது நல்லாட்சிக்கு முரணானது என சரத் என் சில்வா சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfp5.html

Geen opmerkingen:

Een reactie posten