தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 januari 2015

சட்ட ஒழுங்கின் நியாயத் தன்மையை எதற்காகவும் ஜனாதிபதி விட்டுக் கொடுக்கக் கூடாது: ஹிருனிகா

இலங்கையின் மீன் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை! அரசசார்பற்ற அமைப்புக்கள் வரவேற்பு
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 01:15.26 AM GMT ]
இலங்கையில் இருந்து மீன்களின் இறக்குமதியை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்யப்பட்டமையை பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களும் வரவேற்றுள்ளன.
ஓசானியாவில் உள்ள சுற்றாடலுக்கான நீதி அமைப்பு, இயற்கைக்கான உலகளாவிய நிதியம் என்பன அவற்றுள் அடங்குகின்றன.
சர்வதேச கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியை தடுக்க இலங்கை தவறி விட்டதாக குற்றம் சுமத்தியே ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் இருந்து மீன் இறக்குமதிகளை கடந்த 15ஆம் திகதி முதல் தடை செய்துள்ளது.
அத்துடன் நேற்று முன்தினம் இந்த விடயத்தை ஐரோப்பிய ஒன்றியம் கறுப்புப்பட்டியலிலும் சேர்த்தது.
இந்தநிலையில் இலங்கையை தண்டித்தமையை அரசசார்பற்ற அமைப்புக்கள் வரவேற்றுள்ளன.
இதேவேளை, இந்த தடையை ஒத்திவைக்குமாறு கோருவதற்காக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தற்போது பிரசல்ஸ்ஸூக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgr0.html
ஜக்சன் அந்தனி வீட்டில் கைப்பற்றப்பட்ட அதிசொகுசு கார் யாருடையது?
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 01:21.44 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளரான பிரபல சிங்கள கலைஞர் ஜக்சன் அந்தனி, தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
பொருளாதார அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று தமது வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.
குறித்த வாகனம் கார் நிறுவனம் ஒன்றினால் தமக்கு விளம்பரம் கருதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கொழும்பின் புறநகரான கடவத்தை பொலிஸார் அந்தனியின் வீட்டுக்கு சென்று குறித்த வாகனத்தை மீட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் கீழ் இருந்த பொருளாதார அமைச்சினால் அவருக்கு வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgr2.html

சட்ட ஒழுங்கின் நியாயத் தன்மையை எதற்காகவும் ஜனாதிபதி விட்டுக் கொடுக்கக் கூடாது: ஹிருனிகா
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 01:47.05 AM GMT ]
கருணையையும் சட்டம் ஒழுங்கின் நியாயதிக்கத்தன்மையையும் குழப்பிக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர கோரியுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகர்கள், சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதே நல்லாட்சியாகும்.
எனது தந்தையின் கொலையாளிகளுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும் வரையில் மக்கள் காத்திருக்கின்றார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தனை செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது.
இந்த ஆண்டில் தந்தையின் கொலையாளிகளுக்கு தண்டனை விதித்து சட்டம் ஒழுங்கின் நியாயதிக்கத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என ஹிருனிகா கோரியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் 59ம் சிறார்த்த தின நிகழ்வுகள் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgr7.html

Geen opmerkingen:

Een reactie posten