தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

ஈழத்தில் தமிழர் இருக்கும் நிலையில் 35,000 பவுன்கள் செலவு செய்து பார்டி நடத்த வேண்டுமா ?

யோசித ராஜபக்ஷவுக்கு லண்டனில் எப்படி கடல்படை சான்றிதழ் கிடைத்தது : விசாரணை ஆரம்பம் !

[ Jan 27, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 12030 ]
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ தொடர்பில் விசாரணை நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் பஸ்நாயக்க, கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார் என்ற தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. யோசித கடற்படையில் இணைந்து கொண்ட விதம், பிரித்தானிய பாதுகாப்பு கல்லூரியில் புலமைப் பரிசில் கிடைத்த விதம் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். அதுவும் லண்டனில் அவருக்கு எவ்வாறு கடல்படை தொடர்பான புலமை பரிசில் கிடைத்தது என்பது பெரும் மர்மமாகவே உள்ளது என்கிறார்கள்.
கடற்படைத் தளபதிக்கு, பாதுகாப்புச் செயலாளர் உடனடியாக இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். ஜே.வி.பி கட்சி செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக பிரித்தானிய அரசு எதனையும் அறிவிக்கவில்லை. இன் நிலையில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. போலியாக இவர் கடல்படையில் இணைந்திருந்தால் பெரும் சிக்கலில் மாட்டிகொள்வார் என்று கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/2095.html

"இலங்கையின் இந்திரா காந்தியாம்" சந்திரிக்காவுக்கு கொடுக்கப்படும் அட்வைஸ் இதுதான் !

[ Jan 27, 2015 05:39:02 AM | வாசித்தோர் : 10090 ]
பண்டாரநாயக்க பரம்பரை உயிரை கொடுத்து காப்பாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வீழ்ச்சியடைந்து அழிந்து செல்ல இடமளிக்காது, இந்திரா காந்தி உள்ளிட்ட இந்தியாவின் காந்திகள் உயிர்கொடுத்து காங்கிரஸை காத்தது போல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தலைமை வகிக்குமாறு கட்சியின் பலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தவிசாளர் சந்திக்கா தலைமையில் 'கை' சின்னத்தில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யோசனையில் உள்ள விசேட அம்சம் என்னவென்றால் இதற்கு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஸ இணக்கம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சந்திரிக்காவுடன் மோதினால் ஏற்படும் பாதிப்புக்களை கருத்திற் கொண்டு மஹிந்த இந்த முடிவை எடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய ஒருவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி குறித்து தற்போது இடம்பெற்றுவரும் விசாரணையின் மூலம் பிரஜா உரிமையைகூட இழக்கும் அபாயத்தில் மஹிந்த உள்ளார்.
அதனால் இப்போது செயற்பாட்டு அரசியலில் இருந்து தனது மகன் நாமல் ராஜபக்ஸவின் அரசியல் எதிர்காலத்தையாவது ஸ்தரப்படுத்துவோம் என்ற திட்டத்தில் மஹிந்த உள்ளார். அதனால் சந்திரிக்காவுடன் மோதாதிருப்பது நல்லது என மஹிந்த அறிந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான நபர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலொசகர் பதவியும் மஹிந்தவை விட்டு பறிபோகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யாப்பினை ஐக்கிய தேசியக் கட்சி யாப்பிற்கு இணையாக மாற்றி அமைத்து கட்சி தலைமை மற்றும் தவிசாளர்கள் இருவரை நியமிக்கும் வகையில் திருத்தம் கொண்டுவர ஸ்ரீலங்கா சுமந்திர கட்சி மத்திய குழு மற்றும் செயற்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/2098.html

தலைபோற நேரத்திலும் “தலப்பா கட்டு” பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு அலையும் KP !

[ Jan 27, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 19095 ]
புலிகளின் ஆயுதக் கப்பல்களை காட்டிக்கொடுத்து , இந்திய “றோ” அமைப்போடு செயல்பட்டு பின்னர் கோட்டபாயவிடம் சரணடைந்தவர் KP என்பது யாவரும் அறிந்த விடையம். மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியுற்று ஒரு மூலையில் இருக்கிறார். கோட்டபாய என் நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலையில் பயத்தில் நடுங்கிக்கொண்டு இருக்கிறார். KP முன் நாள் புலிகள் உறுப்பினர் என்று அவர் மீது இலங்கை உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டும் உள்ளது. என் நேரம் என்றாலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.
அவ்வாறு நடந்தால் KP கொழும்புக்குச் செல்லவேண்டிய சூழ் நிலை ஏற்பட்டு, பின்னர் வெலிகடை சிறையில் அடைக்கப்படுவார். இது இவ்வாறு இருக்க கோட்டபாயவுடன் கூட்டுச் சேர்ந்து நெரடோ என்னும் அமைப்பை இவர் ஆரம்பித்து நடத்தி வருகிறார். மேலும் தேசிய தலைவரால் பராமரிக்கப்பட்டு வந்த செஞ்சோலை இல்லத்தையும் இவரே , தற்போது பெருமைக்காக நடத்தி வருகிறார். இங்கே விழா ஒன்றை நேற்று முன் தினம் வைத்து, சிறுவர்களுக்கு தாம் உதவுவதுபோல நாடகம் ஆடி, இறுதியில் பிரியாணியை மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு அவர் வீடு சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. தலைபோற நேரத்திலும் தலப்பா கட்டு பிரியாணி சாப்பிட்ட ஆள் இவராதான் இருக்க முடியும்.
லண்டனில் இவருக்கு சில அடி வருடிகள் இருக்கிறார்கள். அவர்களே KP ஐ தூக்கிப் பிடிப்பது வழக்கம். கள்ளக் காதலிக்காக KPயின் உதவி பெற்ற நபர்களும் லண்டனில் தான் இருக்கிறார்கள். இவர்கள் யார் ? இவர்கள் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது போன்ற திகைப்பூட்டும் சம்பவங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. பிரித்தானியாவில் இயங்கிவரும் சில தமிழ் அமைப்புகளில் KPயின் கைக்கூலிகள் இணைந்து இருப்பதும், தேசிய அரசியல் பேசி ஊரை விற்கும் இக் கள்வர்கள் தொடர்பாகவும் செய்திகள் வெளியாக உள்ளது. அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.

http://www.athirvu.com/newsdetail/2094.html

ஈழத்தில் தமிழர் இருக்கும் நிலையில் 35,000 பவுன்கள் செலவு செய்து பார்டி நடத்த வேண்டுமா ?

[ Jan 27, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 14840 ]
ஈழத்தில் தமிழர்கள் உள்ள நிலை நாம் அறியாத விடையம் அல்ல. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு புறம். யாழில் உள்ள தண்ணீரில் கழிவு எண்ணை கலந்து 12 பேருக்கு மேல் சிறு நீரக கோளாறுக்கு உள்ளாகியுள்ளார்கள். பல நூற்றுக்கணக்கான மக்கள் நச்சு தன்மை கொண்ட இந்த நீரைக் குடித்து நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள். இன் நிலையில்லண்டனில் பெரும் எடுப்பில், நட்சத்திர விடுதியில் ஒரு ஆடம்பர பார்டியை நடத்த பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள சில MPக்களை இதற்கு அழைப்பதாக அவர்கள் கூறியுள்ளார்கள். இருப்பினும் தமிழர்கள் இருக்கும் நிலையில் இதுபோன்றதொரு ஆடம்பர நிகழ்வு தற்போது அவசியமா ? என்ற கேள்வியை ஒருவர் சமூக வலையத்தளத்தில் (பேஸ் புக்கில்) போட அதில் இருந்து அணல்கக்க ஆரம்பித்துவிட்டது இப்பிரச்சனை.
பலராலும் விவாதிக்கப்படும் இப்பிரச்சனை தொடர்பாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே, நாம் இதனை எழுதுகிறோம். மேலும் இது தொடர்பான விவாதம் பேஸ் புக்கில் சூடு பிடித்துள்ளது. 2009ல் ஊரில் பாரிய சண்டை நடந்துகொண்டு இருந்தவேளை, “தூக்கத்தில் இருந்தேன் ஒரு கனவு வந்தது” என்று கூறினார் அப்போது TRO வுக்கு பொறுப்பாக இருந்த "றெஜி". அது என்ன கனவு என்றாலாம், "வணங்கா மண் கப்பல்" என்றார். இது தொடர்பாக ஊரில் இருந்த புலிகள் தலைவர்களுக்கு இவர் ஒரு படம் காட்டி, எப்படியோ அதற்கான ஆதரவைப் பெற்றுவிட்டார். பின்னர் வணங்கா மண் கப்பலுக்கு, பொருட்களை சேர்க்கவேண்டும் அதனை பிரபல்யமாக்கவேண்டும் என்று இவர்கள் 5 நட்சத்திர ஹோட்டல்களில் கூடிஅடித்த கும்மாளம் இருக்கிறதே. அதை எங்கே போய் சொல்ல ? ஊடகவியலாளர் என்ற வகையில், நாமும் அதில் கலந்துகொண்டோம். இவ்வாறு பெரும் பணத்தை வீண் விரையம் செய்தார்கள்.
இறுதியில் வணங்கா மண் கப்பல் எங்கே சென்றது என்று எவருக்குமே தெரியாது. இந்தியாவில் உள்ள அக்னி சுப்பிரமணியத்துக்கே வெளிச்சம். அதுபோல நாம் செயல் திட்டங்களை செய்கிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றவேண்டாம். இலங்கை அரசு தற்போது மாறிவிட்டது. அவர்கள் மகிந்த ராஜபக்ஷவை விட கூடிய அரசியல் ராஜதந்திரத்தில் நகர்கிறார்கள். ஆனால் நாம் புலம்பெயர் நாடுகளில் இருந்துகொண்டு இன்னும் பார்டி(party) வைத்துக்கொண்டு இருக்கிறோம்நாம் !
Disclaimer

The content on this page, including news, quotes,  and other information, is provided by  Face Book  page. And its third party content providers for your personal information only. "athirvu.com" is not responsible for the content of this news.
http://www.athirvu.com/newsdetail/2097.html

Geen opmerkingen:

Een reactie posten