[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 12:38.56 PM GMT ]
இதனடிப்படையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியான நாடாளுமன்றத்திற்கும் சட்டத்திற்கும் பணிந்த பதவியாக தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதியிடம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலம் தொடர்பான அதிகாரங்கள் தொடர்ந்தும் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாபதிபதி பதவியை ஒழிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்படியான வாக்கெடுப்பு ஒன்றை நடத்த அரசாங்கத்திற்கு எவ்விதமான எதிர்பார்ப்பும் கிடையாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcer0.html
முன்னாள் ஆளுனர் சந்திரசிறியினால் தடுக்கப்பட்ட பளை மத்திய கல்லூரியின் சிறப்பு மலர் வெளியீடு
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 01:46.23 PM GMT ]
அதற்காக அன்றைய கல்லூரியின் அதிபர் க.குணபாலசிங்கம் தலைமையில் நூலாக்கக்குழு மலரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது. இதற்காக சமூகத்தின் மக்கள் பிரநிதிகள், சமூக முன்னோடிகள், கல்வி புலம் சார்ந்தோர் உயர் அதிகாரிகளின் வாழ்த்து மற்றும் ஆசியுரைகள் பெற தீர்மானிக்கப்பட்டன.
இதன்படி மதத்தலைவர்களின் ஆசியுரைகளும் அன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், ஈ.பி.டி.பி பா.உறுப்பினர் சந்திரகுமார், முன்னாள் ஆளுனர் சந்திரசிறி, வடமாகாணத்தின் கல்விப்பணிப்பாளர், மேலதிக கல்விப்பணிப்பாளர், வடமாகாணத்தின் கல்வி அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி அரசாங்க அதிபர், கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் உள்ளிட்டவர்களிடம் வாழ்த்துரைகளும் செய்திகளும் பெறப்பட்டன.
ஆனால் பின்பு இந்த மலர் வெளியீடு தொடர்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மிகமோசமான ஆளுனரும் இராணுவ அதிகாரியுமான சந்திரசிறியின் உத்தரவின் பேரில் அன்றைய கல்லூரியின் அதிபர் குணபாலசிங்கம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். காரணம் அந்த மலரில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் வாழ்த்துரை பெறப்பட்டதே ஆகும். ஆளுனரும் அவரின் அடிவருடிய கூட்டமும் சேர்ந்த அதிபர் குணபாலசிங்கத்தை மிரட்டிய போதும், எதற்கும் அஞ்சாமல் அந்த நூல் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் வாழ்த்துரை உள்ளடங்கியதாகவே வெளிவர வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். இதனால் அடாவடி ஆளுனர் சந்திரசிறி அதிபர் குணபாலசிங்கத்தை இடமாற்றம் செய்தார்.
காலமும் தர்மமும் தன் வேலையை காட்ட, கடந்த ஜனவரி எட்டாம் திகதி வடக்கின் ஆளுனர் சந்திரசிறி காணமால் போனார். அவரின் பிரதம செயலாளரும் காணாமல்போனார். முடங்கி மூலைக்குள்ள தள்ளப்பட்ட பளை மத்திய கல்லூரியின் அந்த மலர், நேற்று சிறப்புற வெளியிட்டு வைக்கப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு பளை மத்திய கல்லூரி அதிபர் சி.பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆசியுரையை வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் வழங்கினார். வரவேற்புரையை ஆசிரியர் வதனராசா ஆற்றினார். அடுத்து மலரை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வெளியிட்டு வைத்தார்.
இந்த நிகழ்வில் இந்த நூலை உருவாக்க காரணமாக இருந்த அதிபர் குணபாலசிங்கம் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டார். இந்த நூல் வெளியிட்ட விழாவில் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா சிறப்பு விருந்தினர்களாகவும், வடமாகாணசபை உறுப்பினர் ப.அரியரத்தினம் வலயக்கல்விப்பணிப்பாளர் முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டதுடன் அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கல்லூரி சமுகத்தினர் என பெருமளவானோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcer4.html
போர்க்குற்ற விசாரணைகளை நிறுத்துமாறு கோரும் அமெரிக்க அதிகாரி
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 11:57.37 AM GMT ]
இலங்கையின் உதவியுடன் ஜெனிவா மனித உரிமை பேரவையில், சகவாழ்வு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அமெரிக்கா இதுவரை கையாண்ட கடும் போக்கை கைவிட்டு நெகிழ்வான போக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரேசா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதி இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.
இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ள இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தெரேசா, அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் பணியாற்றிய பலமிக்க முன்னாள் அதிகாரியாவார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceq7.html
Geen opmerkingen:
Een reactie posten