தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 januari 2015

நோர்வே பிரதமரிடம் சிக்கிய ஈழத்தமிழ்ச் சிறுவர் விவகாரம்!

2014 இல் 234 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டனர்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 12:48.09 PM GMT ]
கடந்த 2014 ஆம் ஆண்டில் நாட்டில் எச்.ஐ.வி.மற்றும் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான 235 பேர் இனங்காணப்பட்டதாக பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு தொடர்பான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்தார்.
இவ்வாறு இனங்காணப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள். எயிட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளான 14 பேர் கடந்த வருடம் இறந்து போனதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாலியல் தொழிலாளிகள், போதைப் பொருள் ஊசிகளை பயன்படுத்துவோர், சுற்றுலா வழிக்காட்டிகள், பீச் போய்ஸ் போன்றவர்கள் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இவர்களுக்கு நோய் ஆபத்து பற்றி தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாகவும் மருத்துவர் லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcer2.html

வவுனியா பாடசாலை தொடர்பாக வெளியான குற்றச்சாட்டிற்கு அதிபர் மறுப்பு
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 12:55.45 PM GMT ]
மாணவர்களை அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு ஆசிரியர்கள் மதுபானம் அருந்தியதாக வெளியான குற்றச்சாட்டு பொய்யென வவுனியா பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
மாணவர் தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் கல்விச் சுற்றுலாவிற்கு வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதி பெற்றே மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆசிரியர்கள் மது அருந்தியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டானது, பாடசாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகும் என பாடசாலை அதிபர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களும் பெற்றோர்களும் இந்த குற்றச்சாட்டை சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcer3.html


நோர்வே பிரதமரிடம் சிக்கிய ஈழத்தமிழ்ச் சிறுவர் விவகாரம்!
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 02:16.16 PM GMT ]
நோர்வே நாட்டில் அவல நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண தமிழர் உட்பட வெளிநாட்டு வதிவாளர்களின் குழந்தைகள் தொடர்பான விவகாரம் நோர்வே பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேவேளை, நோர்வேயில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்களின் நிலைமை மற்றும் அவர்களது குழந்தைகள் நோர்வே காப்பகங்களால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஆகிய விடயங்களை நோர்வே பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நோர்வே நாட்டில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எரிக்ஜோசப் டிலாந்தினிஜோசப் தம்பதியரின் மூன்று குழந்தைகளான எரிக்ஜோசப் இனுக்கா (வயது 14), எரிக்ஜோசப் மெலோனி (வயது 10), எரிக்ஜோசப் மெரியோ (வயது 7) ஆகியோரும்,
தாமோதரம் பிள்ளை ஆனந்தராசா ரஜித்தா ஆனந்தராசா ஆகிய தம்பதியரின் குழந்தைகளான ஆனந்தராசா தமிழினி (வயது 14), ஆனந்தராசா ஈழவன் (வயது 12), ஆனந்தராசா யாழினி (வயது 9), ஆனந்தராசா தமிழ்ப்பிரியன் (வயது 7) ஆகியோரும், மகாத்மாஜோதி செல்லத்துரை சித்ராதேவி செல்லத்துரை தம்பதியரின் மூன்று குழந்தைகளான மகாத்மாஜோதி நபீலா (வயது 7), மகாத்மாஜோதி நிலோத் (வயது 5), மகாத்மாஜோதி நிமித்தா (வயது 4) ஆகியோரும்,
வசந்தகுமாரன் சியாமலா வசந்தகுமாரன் தம்பதியரின் குழந்தைகளான வசந்தகுமாரன் ஷியாந்தன் (வயது 12), வசந்தகுமாரன் ஷண்ட்ஷியா (வயது 9) ஆகியோருமாக மொத்தமாக 12 குழந்தைகள் நோர்வேயிலுள்ள சிறுவர் காப்பகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பலவந்தமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைத்திருப்பது தொடர்பான முழுத் தகவல்களும் நோர்வே பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcer5.html

Geen opmerkingen:

Een reactie posten