தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 januari 2015

மைத்திரியின் தலைமையில் சுதந்திரக் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்துவோம்: எதிர்க்கட்சித் தலைவர்



தோட்ட அதிகாரியை வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டம்- இந்து கலாச்சார அமைப்பினால் ஆலயங்களுக்கான பொருட்கள் வழங்கி வைப்பு
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 10:19.40 AM GMT ]
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் தோட்ட அதிகாரியை வெளியேற்றுமாரு கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் அங்கத்தவர்களும் தோட்ட தொழிலாளிகளும் இன்று மேற்படி தோட்ட தொழிற்சாலைக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கடந்த காலங்களில் குறித்த தோட்ட அதிகாரி தோட்டத்தில் பணிபுரியும் சேவையாளர்களை பல சிரமத்திற்குள்ளாக்குவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
அந்தவகையில் மேற்படி தோட்டத்தில் இயந்திர திருத்த பணியாளராக கடமையாற்றிய 58 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு தோட்ட அதிகாரி பல சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகப்பட்டு இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் அங்கத்தவர்களும் தோட்ட தொழிலாளிகளும் இவ்வாறு தோட்ட அதிகாரியை வெளியேறுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இவ்விடயம் தொடர்பாக தோட்ட அதிகாரி நாலக்க வித்தானகே அவரை தொடர்புகொள்ள முயற்சித்த போது அது பயனளிக்கவில்லை.
எனினும் இவ்விடயம் சம்மந்தமாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து கலாச்சார அமைப்பினால் ஆலயங்களுக்கான பொருட்கள் வழங்கி வைப்பு
மத்திய மாகாண விவசாயத்துறை, தோட்ட உட்கட்டமைப்பு, இந்து கலாச்சார அமைச்சின் ஏற்பாட்டில் ஆலயங்களுக்கான சிலைகள், மின்சார மேளங்கள் மற்றும் அறநெறி பாடசாலைகளுக்கான நூல்கள் தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் எம்.ராம் அவர்கள் உரையாற்றியதோடு, அமைச்சர் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான துரை மதியுகராஜா, அமைச்சின் செயலாளர் அப்பொருட்களை வழங்கிவைத்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgvy.html

இலங்கையின் 45 வது பிரதம நீதியரசராக கே. ஸ்ரீபவன்.? ஷிராணி பண்டாரநாயக்க ஒருநாளில் ஓய்வுபெறுகிறார்.
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 10:56.52 AM GMT ]
இலங்கையின் 45 வது பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் சட்டவிரோத நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட 43 வது (ஷிராணி பண்டாரநாயக்க ) பிரதம நீதியரசர் இன்று மீண்டும் அந்த பதவியில் கடமையாற்றியதுடன் ஒருநாளில் ஓய்வுபெறுகிறார்.
44 வது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட மொஹான் பீரிஸ் இன்னும் பதவியை ராஜினாமா செய்யவில்லை. எனினும் அவரது நியமனம் சட்டவிரோதமானது என இலங்கையின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், நாளைய தினம் புதிய பிரதம நீதியரசராக ஸ்ரீபவன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் சர்ச்சையான சூழ்நிலையில், அவர் பிரதம நீதியரசராக பதவியேற்பதில் தயக்கம் காட்டி வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதியரசர் கே. ஸ்ரீபவன் முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgv0.html
சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 11:10.38 AM GMT ]
முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது பிறந்த ஊரான அம்பலாங்கொடவில் அங்காங்கே பட்டாசுகள் கொளுத்தி மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சரத் பொன்சேகா 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து பொது வேட்பாளராக போட்டியிட்டதன் காரணமாக மகிந்த அரசாங்கம் அவரை அரசியல் ரீதியாக பழிவாங்கியது.
இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இராணுவ பதவிப் பட்டங்கள், ஓய்வூதியம், வாக்குரிமை, குடியுரிமை என்பன பறிக்கப்பட்டதுடன் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சரத் பொன்சேகாவை சகல குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்தார்.
இதனால், அவருக்கு மீண்டும் இராணுவப் பட்டங்கள் உள்ளிட்ட சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் தற்போது வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்தி:
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgv1.html
மைத்திரியின் தலைமையில் சுதந்திரக் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்துவோம்: எதிர்க்கட்சித் தலைவர்
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 11:38.01 AM GMT ]
இம்முறை எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கலப்பான உணர்வுகளுடன் புதிய கலாசாரத்தை நோக்கி செல்ல வேண்டிய பதவி என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இதனடிப்படையில் செயற்படும் போது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு சேர் மார்க்ஸ் பெர்ணாந்து மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் அரசியல் பாத்திரமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூலமே உருவாகினேன். எனது உடலில் ஓடுவது அந்த இரத்தம். இதனால், கட்சியை பாதுகாப்பதற்காகவே நான் முன்னுரிமை வழங்குவேன்.
கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதால், கட்சியினை மேலும் வலுப்படுத்த அது உதவியாக அமையும். ஜனாதிபதி கட்சியின் தலைமை பதவியை ஏற்று இரண்டாக பிளவுபடுவதை தடுத்து காப்பாற்றினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதே எமது நோக்கம். இதற்காக அனைவரும் பொறுமையாக செயற்பட வேண்டும்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெரும் சேவைகளை செய்துள்ளார். அதனையும் இந்த சந்தர்ப்பத்தில் கட்டாயமாக நினைவுக்கூற வேண்டும்.
நாங்கள் அங்கம் வகித்த அரசாங்கத்தில் குறைபாடுகள் பல இருந்தன என்பதை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgv3.html

Geen opmerkingen:

Een reactie posten