[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 09:30.27 AM GMT ]
ஐரோப்பிய ஒன்றியத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இலங்கையில் மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் புதிய தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இலங்கையில் இருந்து மீன் கொள்வனவு செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தடையை நீக்கி மீண்டும் மீன் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதம நீதியரசர் விவகாரம்: நீதி கோரும் தினேஷ் குணவர்தன- நீக்கியதால் சட்டத்தின் ஆதிக்கம் உடைக்கப்பட்டுள்ளது
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 10:13.39 AM GMT ]
இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயல் என்பது தெளிவாக தெரியவதாகவும் அத்துடன் இலங்கையின் நாடாளுமன்றத்தின் அனுதியை பெறாது மேற்கொள்ளப்பட்டது என்பதால், அது பற்றி ஆராய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை மொஹான் பீரிஸின் வீட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து அவர் கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாடு தொடர்பில் பதிலை எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 23/2 கீழ் அவர்கள் இது குறித்து கேள்விகளை எழுப்பினர்.
எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு நாளைய தினம் முழுமையாக பதிலளிப்பதாக பிரதம ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அத்துடன் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்றை கூட்டி இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க முடியும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.
மொஹான் பீரிஸை நீக்கியதனால் சட்டத்தின் ஆதிக்கம் உடைக்கப்பட்டுள்ளது: தேசிய சுதந்திர முன்னணி
முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் நீக்கப்பட்டது தொடர்பாக இன்று பல ஊடக சந்திப்புக்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.
தேசிய சுதந்திர முன்னணியினால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போது குறித்த அரசியல் குழுவின் அங்கத்தவர் பியசிறி விஜேநாயக்க முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸ் சட்ட ரீதியாக விலக்காமையால் இந்நாட்டு சட்டத்தின் ஆதிக்கம் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு முன்னாள் நீதியரசர் நீக்குவது சரியா தவறா என்று வரலாற்றினால் தீர்மானிக்கபட வேண்டும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfr2.html
மகிந்தவை மன்னிக்குமாறு சந்திரிக்காவிடம் கோரிய சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 11:11.19 AM GMT ]
இவர்கள் நேற்றும், நேற்று முன்தினமும் சந்திரிக்காவை சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இதன் போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த, நாட்டுக்கும், கட்சிக்கும், தனக்கும் எதிராக கடந்த 9 வருடங்களாக செய்த கொடுமைகளை தெளிவுப்படுத்தியுள்ள சந்திரிக்கா, சுதந்திரக் கட்சியினரின் கோரிக்கை தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாட இணக்கம் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கட்சியின் தவிசாளராகவும் செயற்படும் வகையில் கட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfr3.html
Geen opmerkingen:
Een reactie posten