தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 januari 2015

அம்பலத்திற்கு வந்த டக்ளஸின் தில்லுமுள்ளு



யாழ்.புத்தூரில் சனசமூக நிலையக் கட்டிடத்தை திறந்து வைத்தார் மாவை எம்.பி
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 03:36.07 PM GMT ]
யாழ்.புத்தூர் மணற் பகுதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட கலையகம் சனசமூக நிலையத்திற்கான புதிய கட்டடத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா திறந்து வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் மாலை 4.30மணிக்கு நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் மாகாண ச பை உறுப்பினர்களான சிவயோகன் மற்றும் பரஞ்சோதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவ்வூர் கலைஞர் மற்றும் சமூக சேவையாளர்கள் 4 பேரை கௌரவித்ததுடன், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcer6.html

வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு நேரில் சென்று பார்வையிட்ட ரிசாட் பதியுதீன்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 03:57.30 PM GMT ]
வாழைச்சேனை கடதாசி ஆலையை கைத்தொழில் வணிகத்துறை வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் போது கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் கட்டிடங்கள் உடைக்கப்பட்டு அதனுள் இருந்த இரும்புகள் அனைத்தும் விற்கப்பட்டுள்ளது. அதற்கு தனது அமைச்சின் உயர் அதிகாரிகளைக் கொண்ட விசாரனை குழு ஒன்று ஒரு வாரத்திற்குள் நியமிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வேண்டுகோளின் பெயரில் இன்று விஜயம் செய்த அமைச்சர், கடதாசி ஆலையை பார்வையிட்டதுடன், ஆலை ஊழியர்களுடன் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்!
மிகவும் பிரபல்யமாக விளங்கிய வாழைச்சேனை கடதாசி ஆலையை இந்தளவு மோசமான நிலைக்கு கொண்டு செல்வதற்கும் இங்குள்ள சொத்துக்களை களவெடுப்பதற்கும் யாரெல்லாம் உடைந்தையாக இருந்தார்களோ அவருக்கு நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுத்து அதற்குரிய தண்டணையை பெற்றுக் கொடுப்பேன்.
அரச சொத்து இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழிற்சாலை, நான்காயிரம் ஐயாயிரம் பேர் தொழில் செய்யும் தொழிற்சாலை, இதை பாதுகாப்பதற்கு நியமிக்கப்பட்டவர்களால் இந்த ஆலை நாசமாக்கப்பட்டுள்ளது என்று நினைக்கும் போது மிகவும் கவலையாகவுள்ளது.
மஹிந்த அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல்களை இல்லாமல் செய்வதற்காகத்தான் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். மைத்திரிபால சிறிசேன ஒரு நேர்மையான ஜனாதிபதி. நல்லாட்சியை கொண்டு வருவதற்காக வந்துள்ளார். அவருடைய அரசாங்கத்தில் இதற்குரிய பொறுப்பை எனக்கு தந்துள்ளார். எனவே இது என்னுடைய அமைச்சுக்கு கீழ் வந்துள்ளது. இதனை எவ்வாறு இலாபகரமாக இயங்க வைக்கலாம், எவ்வாறு தொழிலாளர்களுக்கு இலாபம் வழங்கி, எவ்வாறு சந்தோசப்படுத்தலாம் என்ற விடயத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம்.
பிரதி அமைச்சர் அமீர் அலி இந்த ஆலையைப் பற்றி அடிக்கடி என்னிடம் கவலைப்படுவார், தொழிற்சாலையை முன்னேற்ற வேண்டும் இலாபகரமாக இயங்க வைக்க வேண்டும், தொழிலாளர்களை முன்னேற்ற வேண்டும் என விடயத்தில் மிகவும் அக்கறையாக உள்ளார்.
இங்கு கடமை புரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் நியமிக்கப்படும் விசாரனைக்குழுவிடம் கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்களை எல்லாம் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் அப்போது தான் ஆலையின் பெயரால் நடாத்தப்பட்ட ஊழல்களை வெளிக் கொண்டுவர முடியும்.
வாழைச்சேனை கடதாசி ஆலையில் கடமை புரிந்த பொறியியலாளர்கள், உத்தியோகத்தர்கள் எல்லோருக்கும் நான் தற்போது அழைப்பு விடுக்கின்றேன். ஆலையின் வளர்ச்சியை கருத்திற் கொண்டு தற்காலிகமாக வந்து இந்த தொழிற்சாலையை எவ்வாறு மீளக் கட்டியமைக்கலாம், இதை எவ்வாறு முன்னேற்றலாம் இதற்கு நாங்கள் என்ன என்ன விடயங்கள் செய்ய வேண்டும் என்று தங்களுடைய ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.
வேலைகள் இடம்பெற்றால் சம்பளம் வழங்க முன்னெடுத்துச் செல்லாம். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய அமைச்சர் நான் வந்திருக்கின்றேன். அதனால் தற்காலிமாக நான் தங்களிடம் வேண்டிக் கொள்வது தொழிற்சாலைய முன்னேற்றி நடாத்திச் செல்வதற்குரிய வேலைகளை செய்வதற்கு கலந்துரையாடவுள்ளோம். அத்தோடு தங்களுக்கு இதுவரை என்ன என்ன கிடைக்க வில்லையோ அதனை அமைச்சரவையில் பத்திரத்தை போட்டு, இங்கு நடைபெற்ற ஊழல்கள் என்பவற்றையும், களவு செய்யப்பட்ட பொருட்களையும் உரியவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு அல்லது சிறையில் அடைந்து அவர்களிடம் இருந்து பறிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறினார்.
இந்த விஜயத்தின் போது பிரதி அமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி, கடதாசி ஆலையின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcer7.html

அம்பலத்திற்கு வந்த டக்ளஸின் தில்லுமுள்ளு
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 04:08.00 PM GMT ]
யாழ்.சிறீதர் தியோட்டர் கட்டிடத்தில் அடாத்தாக குடியிருக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டிடத்திற்கு எவ்விதமான வாடகையோ, மாநகரசபைக்கான வருமான வரியோ கட்டாமல் கடந்த 1997ம் ஆண்டு தொடக்கம் தங்கியிருக்கும் விடயம் முழுமையாக அம்பலத்திற்கு வந்துள்ளது.
உரிமையாளர்கள் மேற்படி அடாத்திற்கு எதிராக நீதிமன்றை நாட தீர்மானித்துள்ளனர்.  குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
மேற்படி முன்னாள் அமைச்சர் கடந்த பல வருடங்களாக சிறீதர் தியேட்டர் கட்டிடத்தை மட்டுமே பிடித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் கூறிக் கொண்டிருந்தன.
ஆனால் சிறீதர் தியேட்டர் மட்டுமல்லாமல் அந்த தியேட்டர் உரிமையாளர்களுக்குச் சொந்தமான ஒரு வீடு மற்றும் காணிளையும் சேர்த்து சுமார் 13 பரப்பு காணியையும்,அதிலுள்ள கட்டிடங்களையும் அவர் அடாத்தாக பிடித்து வைத்திருப்பதாக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் குறித்த நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு மாநகரசபைக்கு செலுத்த வேண்டிய வரியைக் கூட அவர் செலுத்துவதில்லை. மாறாக மாநகர சபையிலிருந்து வரி செலுத்துமாறு வரும் அறிவித்தல் துண்டுகளையும் கூட அவர் மறைத்து வைத்திருக்கின்றார்.
இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு தொடக்கம் வருடம் ஒன்றுக்கு 22ஆயிரம் ரூபா வீதம் உரிமையாளர்கள் யாழ்.மாநகரசபைக்குச் செலுத்தியிருக்கின்றனர்.
குறித்த வரி உரிமத் தை காணியில் தற்போதுள்ளவர் பெயருக்கு மாற்றிக் கொடுக்குமாறு காணி உரிமையாளர்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோதும் அதற்கு மாநகரசபை பதிலளிக்காததுடன், நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை.
மேலும் குறித்த முன்னாள் அமைச்சரிடம் காணியை விடுவிக்குமாறு பல தடவை காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தபோதும் இப்போ, அப்போ என காலம் தாழ்த்தியுள்ளார்.
குறித்த அமைச்சர். இந்நிலையில் மேற்கண்டவாறு சிறீதர் தியேட்டர் தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவியபோதே மேற்படி விடயத்தை அவர்கள் கூறினர்.
மிகுந்த அச்சத்துடன் இருக்கும் குறித்த காணி உரிமையாளர்கள் தமது காணியை விடுவித்துக் கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடவும் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த முன்னாள் அமைச்சர் தான் காணி உரிமையாளர் என மாறி மற்றொருவரிடம் வாடகையை கொடுத்து தாம் ஏமார்ந்திருப்பதாக காணி உரிமையாளரிடம் கூறியிருப்பதாக உரிமையாளர்கள் கூறினர்.
இதேவேளை குறித்த அமைச்சர் கடந்த பல வருடங்களாக தான் இருந்த கட்டிடத்தில் பாவிக்கப்பட்ட மின்சாரத்திற்கான நிலுவையினை செலுத்தாமல் உள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றமையும், இந்த விடயத்தை மின்சாரசபை அதிகாரிகள் இதுவரையில் மூடி மறைத்து வைத்திருந்த விடயமும் தற்போது மெல்லக் கசிய ஆரம்பித்திருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக தக்கதாகும்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcesy.html

Geen opmerkingen:

Een reactie posten