தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 januari 2015

மகிந்தவின் ஆட்சியில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை: பா.அரியநேத்திரன்

பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அமைச்சர் திகாம்பரம் ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 03:41.54 PM GMT ]
ஐக்கிய நாட்டு அபிவிருத்தி திட்ட நிறுவன பிரதிநிதிகளுக்கும் பெருந்தோட்ட அமைச்சர் பழனி திகாம்பரத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை நடைபெற்றது.

இந்த சந்திப்பு கொழும்பு 3ல் அமைந்துள்ள பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் ஐ.நா அபிவிருத்தி திட்ட நிறுவனத்தின் வதிவிட பிரதிநிதி சுபனே நந்தி மற்றும் இந்நிறுவனத்தின் இலங்கைக்கான உதவி பணிப்பாளர் கணேசராஜா, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சின் செயலாளர் திரு.சிவஞானஜோதி, அமைச்சரின் ஆலோசகர் திரு.எம்.வாமதேவன் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், 2006ம் ஆண்டு ஐக்கிய நாட்டு அபிவிருத்தி திட்ட நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியோடு தயாரிக்கப்பட்ட பத்தாண்டு திட்டத்தினை நினைவுப்படுத்தி, அத்திட்டம் செயற்படாமல் போனது பற்றியும் விளக்கம் அளித்தார்.
பத்தாண்டு திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியதோடு, இத்திட்டத்தின் முக்கியமான அம்சம் வீடமைப்பு என்றும் பெருந்தோட்ட மக்களுக்கு உரித்துடனான ஏழு பேர்ச் காணியுடன் வீடமைப்பு திட்டத்தினை மேற்கொள்வதே எமது அமைச்சின் முக்கிய நோக்கம் என கருத்துரைத்தார்.
இதனையடுத்து அமைச்சின் செயலாளர் திரு.சிவஞானஜோதி அமைச்சு மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளித்தார்.
இச்சந்திப்பில் பதிலளித்த ஐக்கிய நாட்டு அபிவிருத்தி திட்ட நிறுவனத்தின் வதிவிட பிரதிநிதி சுபனே நந்தி அவர்கள், பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை பற்றி தான் நன்கு அறிந்துள்ளதாகவும், பத்தாண்டு திட்டத்தினை தயாரிப்பதற்கு ஒத்துழைத்தது போலவே அமைச்சினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
நூறு நாள் வேலைத்திட்டத்தில் பத்தாண்டு திட்டத்தினை தற்போதைய சூழ்நிலைக்கேற்ப மீள் வடிவமைத்தல் வேண்டும் எனவும், இத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு ஏனைய நாடுகளின் மூலம் உதவியினை பெற்றுகொள்வதற்காக தான் உதவி செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
மேலும் ஐக்கிய அபிவிருத்தி திட்டம் தற்போது பெருந்தோட்ட பிரதேசங்களில் இயற்கை அனர்த்தங்களால் பாதிப்பு குறித்தும் சூழல் பாதுகாப்பு குறித்தும் ஆய்வுகள் செய்து வருவதாகவும் அவ்வாய்வுகளின் முடிவுகள் வீடமைப்புத் திட்ட உருவாக்கத்தில் உள்வாங்கப்பட்டு வீடமைப்பு திட்டங்கள் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgw2.html


பூநகரியில் இடம்பெற்ற மணல் கொள்ளை வடமாகாண அமைச்சரால் முறியடிப்பு
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 03:48.47 PM GMT ]
கிளிநொச்சி- பூநகரி பகுயில் சட்டத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சரினால் சுற்றிவளைக்கப்பட்டு, அள்ளப்பட்ட மணல் மீண்டும் அள்ளப்பட்ட இடத்திலேயே கொட்ட வைக்கப்பட்ட சம்வம் இன்று இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்படி பகுதியில் கடந்த 4 வருடங்களாக மணல் அகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அதிகளவு உழவு இயந்திரங்கள் மற்றும் கனரக வாகனங்களில் மணல் ஏற்றப்பட்டது.
இதுதொடர்பாக மக்கள் மாகாண சுற்றுச்சூழல், அமைச்சருக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து மணல் அள்ளப்பட்டுக் கொண்டிருக்கும்போதே சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர், அங்கே மணல் அள்ளியவர்களின் அனுமதிப் பத்திரத்தை சோதனையிட்டார்.
இதன்போது அதில் உயிலங்காடு என்ற இடத்தில் மணல் அள்ளுவதற்கான அனுமதி பெற்ற ஒருவர் மணித்தலை பகுதியில் அள்ளிக் கொண்டிருப்பது சட்டத்திற்கு மாறானது என சுட்டிக்காட்டிய அமைச்சர், அள்ளப்பட்ட மணல் முழுவதனையும் அள்ளப்பட்ட இடத்திலேயே மீண்டும் கொட்டவைத்தார்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த அனுமதிப் பத்திரம் தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
அவ்வாறான அனுமதிப் பத்திரத்தை தாங்கள் வழங்கவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபை மறுத்துள்ள நிலையில் கனியவளங்கள் அமைச்சிடமிருந்து மணல் சட்டத்திற்கு மாறாக அனுமதிப்பத்திரத்தை பெற்று இவ்வாறான கொள்ளை இடம்பெறுவதாக இன்றைய தினம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgw3.html
மகிந்தவின் ஆட்சியில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை: பா.அரியநேத்திரன்
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 04:15.41 PM GMT ]
2009ம் ஆண்டிற்கு பின்னர் இந்த நாட்டிலே அராஜக நடவடிக்கைகள் தலைதூக்கி, தமிழர்களாகிய நாம் சொல்லொண்ண துன்ப துயரங்களை அனுபவித்து எமது உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை இருந்தது என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்று பகல் 3.00 மணிக்கு  பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
கடந்த ஆண்டு இந்த படுகொலையினை செய்வதற்கு தயாராக இருந்தபோது, அதனை தடுத்தி நிறுத்தி இந்த மண்டபத்தினை பூட்டி எங்களை வெளியேற்றி நிகழ்வை செய்வதற்கு பொலிசார் தடைகளை ஏற்படுத்தினார்கள்.
நாங்கள் இந்த நாளை நினைவு கூருவதற்காக சிவன் ஆலயத்தில் சென்று, அஞ்சலி நிகழ்வினை செய்தோம். இதுதான் மகிந்த அரசாங்கத்தின் அடக்குமுறையாக இருந்தது.
65 வருட கால போராட்டத்தில் எமது இனம் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.  இவ்வாறு இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒரு அஞ்சலி நிகழ்வினைக்கூட செய்யமுடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் இருந்து கொண்டு வருகின்றோம்.
ஆனால் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் உயிர்நீத்த ஏனைய இனத்தவர்கள் சுதந்திரமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழர்களாகிய எங்களுக்கு மாத்திரம் அந்த சுதந்திரம் இல்லை என்பதை நினைக்கும்போது மனம் வெதும்புகின்றது.
பல்வேறு பட்ட போராட்டங்களை போராடி எமது உரிமையை பெறமுடியாத நிலையில் இன்றும் எமது இனம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
இங்கு உண்மையான சமாதானம் ஒன்று இருந்திருந்தால் எமது இனம் சுதந்தரமாக வாழ்ந்திருக்கும். ஆனால் மகிந்த அரசாங்கத்தில் உண்மையான சமாதானம் நடைபெறவில்லை.
கொக்கட்டிச்சோலை படுகொலையானது, இன்றுடன் 28 வருடங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றது. இந்த படுகொலை இடம்பெற்ற காலப் பகுதியிலேதான் இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதற்குப் பின்னரும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் படுகொலைகள் நடந்து கொண்டுதான் இருந்தது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgw4.html

Geen opmerkingen:

Een reactie posten