முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவை எவ்வாறு கொலை செய்தார் என நபரொருவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
கோத்தபாயவுடன் கூட இருந்த நபரே இவ்வாறு பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் 59வது ஜனன தினம் இன்றாகும்.
இந்த நிலையில் இவ்வாறு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் தனது வாக்குமூலத்தில், இலங்கையில் தான் தங்கியிருந்தால் மகிந்த குடும்பம் மற்றும் கோத்தபாயவினால் கொலை செய்யப்படலாம் என்ற நிலையில் நாட்டை விட்டு வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணி வாசுகி முருகதாசிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹிருணிகா மற்றும் மேர்வின் சில்வா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கடந்த 2011ம் ஆண்டு ஒக்டோபர் 8ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgo1.html
Geen opmerkingen:
Een reactie posten