தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 januari 2015

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை!

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோற்பார் என தெரிந்தே அவருடன் இணைந்தேன்: உதய கமன்பில
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 03:25.58 AM GMT ]
 ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் வெற்றி பெறும் என மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கமன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு ஊடக நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உதய கமன்பில இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து விலகி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்தது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த கமன்பில, மஹிந்த ராஜபக்ஷ தோற்பார் என்பதை தெரிந்தே அவருக்கு ஆதரவு வழங்கியதாக குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி உறுப்பினர்கள் 50 பேர் வியட்னாமிற்கு சுற்றுலா
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 03:43.43 AM GMT ]
மக்களின் வரி பணத்தில் 50 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வியட்நாமிற்கு சுற்றுப்பணயம் மேற்கொள்ள தயாராகி வருவதாக முதலாவது முன்னணியின் பிரதான செயலாளர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாம் அரச நிர்வாக அமைச்சர் கரு ஜயசூரியவிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்ததாக அவர் செய்தி சேவையொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி முதல் சுற்றுலா ஆரம்பமாகவுள்ளது. இதில் நாட்டின் பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலாவது முன்னணியின் பிரதான செயலாளர் தெரிவித்தார்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் எழுகை அமைப்பு நிவாரணம்!
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 04:08.06 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமான வட்டவான் கிராம மக்களுக்கு சுவிஸ்லாந்து எழுகை அமைப்பின் நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக புதன்கிழமை மாலை உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக வழங்கப்பட்ட உதவிப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.
இதன்போது பேரவை பிரதி நிதிகள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப் உணவுப் பொதி அரிசி, சீனி, தேயிலை, கோதுமை மா, பருப்பு உட்பட்ட பொருட்களை அடங்கியதாக 240 உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமாக காணப்படும் வட்டவான் கிராம மக்களுக்கு இவ் உதவியை வழங்கியமைக்காக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை சுவிஸ்லாந்து எழுகை அமைப்பின் தலைவர் எஸ்.யோகி மற்றும் நிருவாகத்தினருக்கு நன்றியை தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இவ் உதவியை பெற்ற மக்களும் தமது நன்றிகளை தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfo4.html
அனுஷ இடத்திற்கு சுஹய்ர் நியமனம்!
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 04:14.42 AM GMT ]
தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக எம்.எம்.சுஹய்ர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை ஜனாதிபதி காரியாலயத்தில் ஜனாதிபதி மைத்திரிபாலவின் கையால் இவர் நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
1994ஆம் ஆண்டு அரசியலில் இணைந்து கொண்ட சுஹய்ர் 2000ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட சுஹய்ர் ஈரான் தூதராக செயற்பட்டார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
கடந்த அரசாங்கத்தின் கீழ் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளராக அனுஷ பெல்பிட்ட செயற்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை!
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 03:04.06 AM GMT ]
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பாக இந்திய நாட்டு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இந்திய பாராளுமன்றத்தில் இது தொடர்பாக இலங்கை விவகாரங்களைக் கவனிக்கும் மத்திய இணைச் செயலர் சுசித்ரா துரை தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய இலங்கையில் தற்போது நிலவும் சமாதானமான சூழ்நிலை காரணமாக மீண்டும் தாய் நாட்டிற்கு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தருவதற்காக இந்திய அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.
இது தொடர்பாக நாளை டெல்லி நகரத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெறவுள்ளது. இந்தியா அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவிக்கின்றது.
யுத்த காலகட்டங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் இந்தியா நோக்கி சென்றுள்ளதாகவும் அவர்கள் தற்பொழுது வரை அந்நாட்டில் முகாம்கள் அமைத்து வாழ்ந்து வருவது குறிப்பிடதக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfo0.html

Geen opmerkingen:

Een reactie posten