[ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 12:50.51 PM GMT ]
அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை வெளிநாடு செல்ல முடியாதபடி அவரது கடவுச்சீட்டு இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன ஆகியோர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyBRaKchs4.html
ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பைக் கோரியுள்ளது ஜனாதிபதி ஆணைக்குழு
[ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 02:06.24 PM GMT ]
தமது ஆணைக்குழுவில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயவே இந்த சந்திப்பு கோரப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம, இது தொடர்பில் கூறும்போது தமது ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை தயாரிக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
ஆணைக்குழுவின் வாக்குமூல பதிவுகள் முடிவடைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
2013 ஆகஸ்ட் 15ஆம் திகதியன்று அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவிடம் 19,671 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்தநிலையில் ஆணைக்குழுவின் நீடிக்கப்பட்ட 6 மாதக்காலம் இந்த பெப்ரவரி 15ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBRaKchs5.html
புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட இந்தியா எதிர்ப்பார்க்கிறது: வை.கே.சிங்ஹா
[ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 02:32.22 PM GMT ]
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இந்திய இல்லத்தில் வைத்து இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
இரண்டு நாடுகளினதும் மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலும் உறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பூகோள ரீதியில் மாத்திரம் அல்லாமல், கலாசார ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உறவு உள்ளது.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலும் அரசியல் தெளிவும் உள்ளது. இந்தநிலையில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நியாயமான முறையில் முன்னெடுக்கப்பட்டமையை சிங்ஹா வரவேற்றுப் பேசினார்.
போருக்கு பின்னர் யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் உட்பட்ட, வீடுகள் அமைப்பு திட்டங்களையும் இந்தியா செய்து கொடுத்துள்ளது.
இந்தநிலையில் எதிர்காலத்திலும் இரண்டு நாடுகளுக்கு இடையிலும் உறவுகள் தொடரும் என்று சிங்ஹா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRaKchs6.html
நான் இன்னமும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரே: மனுச நாணயக்கார
[ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 03:09.53 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து எனக்கு அழைப்புக்கள் கிடைக்கப்பெறுகின்றன.
நான் இன்றைக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரேயாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளகின்றீர்களா என யாரும் என்னிடம் கேட்பதில் பயனில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட தொகுதி அமைப்பாளராக மனுச நாணயக்காரவை நியமிக்க உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளித்த போது மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள ஆலயத்தை பார்வையிட்ட பிரதியமைச்சர்!
[ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 03:42.14 PM GMT ]
குறித்த பகுதிக்கு பிரதியமைச்சர் தலமையில் அப்பகுதி மக்கள் ஒருசிலரும் சென்று பார்வையிட்டிருந்தனர்.
கடந்த 2002ம் ஆண்டு தொடக்கம் 2005ம் ஆண்டு காலப்பகுதி வரையில் குறித்த ஆ லயத்தை பார்வையிடுவதற்கு அப்பகுதி மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனபோதும் அதன் பின்னர் அந்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 10வருடங்களுக்கு பின்னர் மக்கள் தங்கள் குலதெய்வம் ஆலயத்தை இன்றைய தினம் சென்று வழிபட்டிருக்கின்றனர்.
மேலும் கடந்த 25வருடங்களாக குறித்த ஆலயம் பராமரிக்கப்படமலிருக்கும், நிலையில் குறித்த ஆலயம் பற்றைகள் வளர்ந்து காடாக மாறியிருக்கின்றது.
மேலும் இன்றைய விஜயம் நாம் நமது சொந்த நிலத்தில் மீள்குடியேற்றப்படுவோம் என்னும் நம்பிக்கையினை மேலும் வலுப்படுத்துவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRaKchty.html
ஹுனைஸ் பாருக்கின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் கைது
[ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 03:47.08 PM GMT ]
முள்ளியவளை, நீராவிப்பிட்டி பகுதியில் ஐந்து தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கின் ஆதரவாளர்கள் மூவர் தாக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
வட மாகாண சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
தாக்குதல் நடத்தியதாக தரப்பைச் சேர்ந்த ஒன்பது சந்தேகநபர்கள் இன்று காலை முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகள் நிறைவுபெற்றதும் சந்தேகநபர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தாக்குதலுக்கு இலக்கான தரப்பைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்படவுள்ளனர்.
தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த சந்கேநபர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவுடன் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRaKchtz.html
Geen opmerkingen:
Een reactie posten