தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 januari 2015

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதில் மத்திய அரசு அவசரம்: தமிழருவி மணியன்



ஐ.நா விசாரணைக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்த பிரித்தானிய தலைவர்கள்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 03:12.43 AM GMT ]
பிரித்தானிய பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களின் மீது ஐ. நா நடாத்தும் சர்வதேச, சுயாதீன விசாரணைக்கான தமது ஆதரவை மீண்டும் உறுதி செய்தனர்.
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் இணைந்து நேற்று லண்டனில் நடாத்திய இரவு போசனத்தில் காணொளி மூலமும் தமது பிரதிநிதிகள் மூலமும் தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.
பிரித்தானியப் பிரதமர் தமது செய்தியினை தமது பிரதிநிதி மூலம் அனுப்பி வைத்தார்.
இலங்கையின் நிலைமைகளை ஆழமாக அலசிய பிரதமர், புதிய இலஙகை அதிபரின் சில நடவடிக்கைகளை குறிப்பிட்டு வரவேற்றார்.
ஐ. நாவினால் முன்னெடுக்கப்படும் விசாரனைகளுகு இலங்கை அரசு பூரணமாக ஆதரவினைத் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
2013 கார்த்திகையில் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது அங்கு ஓர் சர்வதேச விசாரணையை தேடுவதில் ஈடுபட்டேன் எனக் கூறும் பிரதமர், அவர்கள் கடந்த பங்குனி மாதம் ஐ.நா வில் கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மமானத்தில் தாம் ஆற்றிய காத்திரமான வகிபாகத்திற்காக தான் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவரும் லேபர் கட்சி தலைவருமான திரு. எட் மிலிபாண்ட் அவர்கள் காணொளி மூலம் தமது கருத்தை பதிவு செய்தார்.
புதிய மாற்றத்தை வரவேற்ற எதிர்க் கட்சித் தலைவர், அதன் போது இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்கு முகமாக ஐ.நா வினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென புதிய இலங்கை அதிபருக்கு அழுத்தம் கொடுத்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் தமிழர்கள் மீதான சர்வதேச பார்வையில் மாற்றம் ஏற்படுமோ என்ற கருத்து உருவாகி வரும் ஒரு முக்கிய தருணத்தில் பிரித்தானிய பிரமுகர்களை அழைத்து ஓர் ஒன்று கூடலை நடாத்தினோம்.
அதன் போது பிரித்தானிய தலைவர்கள், அமைச்சர்கள் அனைவரும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்குவதில் தமக்குள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்தது எமக்கு ஓர் தார்மீக பலத்தை தருகின்ற‌து என பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலர் ரவி தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceoz.html

பிரதம நீதியரசரை நியமிக்கும் முறையை மாற்றுமாறு ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 04:07.57 AM GMT ]
ஜாதிக ஹெல உறுமயவின் சிறப்பு பிரதிநிதி மாநாடு மாரகமவில் உள்ள  இளைஞர் சேவைகள் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
அங்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் அத்துரலிய ரத்தின தேரர் பிரதம நீதியரசர் பதவி குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
முன்னாள் பிரதம நீதியரசரை அரசாங்கம் கௌரவமான முறையில் ஓய்வு பெற வாய்ப்பளித்ததாக அத்துரலிய ரத்தின தேரர் தெரிவித்தார். இதற்கு முன்னர் பிரதம நீதியரசர் பிரபல நாடொன்றின் தூதுவர் பதவி கேட்டதன் பின்னர் சிக்கலான முறையில் கடமை புரிந்ததை சுட்டிகாட்டினார்.
அவரை பதவி விலக்கியது தொடர்பாக எந்த சிக்கலும் இல்லை மேலும் உரிய முறையில் நீதியரசர் நியமிக்கும் முறையினை அறிமுகம் செய்துகொண்டு நடைமுறையில் இருக்கும் முறையினை மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceo2.html

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதில் மத்திய அரசு அவசரம்: தமிழருவி மணியன்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 03:36.03 AM GMT ]
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதில் மத்திய அரசு அவசரம் காட்டக்கூடாது என்று காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். 
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
இலங்கையில் புதிய அரசு தற்போதுதான் அமைந்துள்ளது. இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதில் மத்திய அரசு ஏன் அவசரம் காட்டுகிறது என்று தெரியவில்லை.
இலங்கையிலிருந்து வந்த அகதிகளுக்கு அங்கு அவர்களுக்கு சொந்தமான வீடு, நிலம் ஆகியவை அவர்களுக்கே திருப்பி கொடுக்கப்படும் என்பதும், அவர்களுக்கு குறைந்தபட்ச உரிமைகளும் அளிக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்படாத நிலையில் அவர்களை திருப்பி அனுப்பக்கூடாது என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.
அப்படி திருப்பி அனுப்ப மத்திய அரசு முயற்சி செய்தால் அதை எதிர்த்து ஒட்டு மொத்த தமிழகமும் கிளர்ந்தெழும் என்று தெரிவித்தார்.
இலங்கை அகதிகள் நாடு திரும்பும் வகையில் கலந்துரையாடல்
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் சுயமாகவே நாடு திரும்புவதற்கான ஏற்பாட்டு கலந்துரையாடல் ஒன்று நேற்று புதுடில்லியில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் இரண்டு நாட்டு அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்திய தரப்புக்கு இலங்கை விடயம் தொடர்பான வெளியுறவு அமைச்சின் கூட்டு செயலாளர் தலைமை தாங்கினார்.
இலங்கை தரப்புக்கு வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் தலைமை தாங்கினார்.
இதன்போது தமிழகத்தில் உள்ள அகதிகள் தாமாகவே நாடு திரும்பும் வகையிலான ஏற்பாடுகள் குறித்த ஏதுக்களை இரண்டு தரப்பினரும் ஆராய்ந்தனர்.
இதன்பின்னர் இரண்டு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்கள் இந்த விடயம் குறித்து ஆராய்வதென்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceo0.html

Geen opmerkingen:

Een reactie posten