தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

சட்டக் கல்லூரி பரீட்சை வினாத்தாள்கள் மூன்று மொழிகளிலும் வழங்கப்படும்: நீதி அமைச்சர்

பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 05:21.41 PM GMT ]
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் ஹியூ ஸ்வைர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் இருந்தார்.

சட்டக் கல்லூரி பரீட்சை வினாத்தாள்கள் மூன்று மொழிகளிலும் வழங்கப்படும்: நீதி அமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 05:07.50 PM GMT ]
சட்டக்கல்லூரி பரீட்சை வினாத்தாள்கள் மூன்று மொழிகளிலும் வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சட்டக் கல்லூரிக்கான பரீட்சைகள் நடத்தப்படும் போது எதிர்வரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளது.
மாணவர்கள் விரும்பிய மொழியில் பரீட்சை வினாத்தாளுக்கு பதிலளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டக்கல்லூரி பரீட்சை மொழி மூலம் தொடர்பில் நீண்ட நாள் சர்ச்சை நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டக்கல்லூரியில் மாணவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று நடைபெற்ற சந்திப்பில் பங்கேற்ற போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfw5.html

Geen opmerkingen:

Een reactie posten