பிரதம நீதியரசராக ஜனாதிபதி முன் சிறிபவன் சத்தியப்பிரமாணம்! (படங்கள் இணைப்பு)
|
புதிய பிரதம நீதியரசராக கே.சிறிபவன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இவர் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதியரசராகவும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
புதிய பிரதம நீதியரசராக கே.சிறிபவன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இவர் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதியரசராகவும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஷ்ட ஆலோசகராகவும் பிரதி சட்டமா அதிபராகவும் பணியாற்றியுள்ளார். கனகசபாபதி ஜே.ஸ்ரீபவன் 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார். யாழ் இந்து கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்ற அவர் சட்ட கல்லூரியில் இணைந்து கொண்டதுடன் 1976 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியின் பரீட்சையில் முதல் தரத்தில் சித்தியடைந்தார். 1978 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிக்கு சேர்ந்த ஸ்ரீபவன், பதில் சட்ட ஆலோசகராக பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டு சிரேஷ்ட சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
1996 ஆம் ஆண்டு பிரதி சட்டமா அதிபராக நியமனம் பெற்ற அவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராகவும் பணியாற்றியுள்ளார். புதிய சட்டக்கல்வியை தொடர்ந்தும் கற்று வந்த இவர், 1992 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழிற்சட்டம் சம்பந்தமான டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.
அத்துடன் அதே ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பில் விசேட பட்டத்தையும் பெற்றுள்ளார். 2002 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக நியமிக்கப்பட்டார். உயர் நீதிமன்ற நீதியரசர் நிஹால் ஜயசிங்க ஓய்வுபெற்ற பின்னர் இவர் 2008 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
|
30 Jan 2015 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1422659058&archive=&start_from=&ucat=1&
உயர்பாதுகாப்பு வலயக் குறைப்பு வடக்கிற்கானது மட்டுமல்ல! ஹரீம் பீரிஸ்
|
உயர் பாதுகாப்பு வலயங்களை குறைக்கும் செயற்பாடு வடக்கில் மட்டும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையல்ல என மீள்குடியேற்றத் தலைவர் ஹரீம் பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று மீள்குடியேற்ற அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்ற நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்திருந்தார்.
உயர் பாதுகாப்பு வலயங்களை குறைக்கும் செயற்பாடு வடக்கில் மட்டும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையல்ல என மீள்குடியேற்றத் தலைவர் ஹரீம் பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று மீள்குடியேற்ற அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்ற நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்திருந்தார்.
உயர் பாதுகாப்பு வலயங்களை குறைக்கும் செயற்பாடுகள் வடக்கில் மட்டும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையல்ல மாறாக தெற்கு உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை. தற்போது வலிகாமம் மேற்கு பகுதி சம்பந்தமாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. வலிகாமம் மேற்கு யுத்த காலப் பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.ஆனால் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் அங்கு ஆடம்பர வீடுகள், அரசியல்வாதிகளுக்கு உல்லாசமாக இருப்பதற்கு அதி நவீன விடுதிகள் ,கோல்ப் மைதானங்கள் என்பன அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அங்கு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இவை மக்களின் இடம். இவற்றிற்கான உறுதி பத்திரங்கள் மக்களிடம் உள்ளன. எனவே இந்த இடங்களை அவர்களுக்கு மீண்டும் கொடுப்பதற்கான முன்மொழிவு புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கண்காணிப்பில் மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குறித்த வேலைத்திட்டத்தைக் கொண்டு சொல்லத் தயாராக இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். |
30 Jan 2015 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1422659327&archive=&start_from=&ucat=1&
இராணுவ காணிகள் விரைவில் விடுவிப்பு! மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் (படம் இணைப்பு)
|
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், யாழ்ப்பாணம் வலி வடக்கு மற்றும் திருகோணமலை சம்பூர் போன்ற பகுதிகளை விடுவித்து பொது மக்களுக்கு மீண்டும் வழங்க எமது அரசாங்கம் மிகவிரைவில் நடவடிக்கை எடுக்கும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், யாழ்ப்பாணம் வலி வடக்கு மற்றும் திருகோணமலை சம்பூர் போன்ற பகுதிகளை விடுவித்து பொது மக்களுக்கு மீண்டும் வழங்க எமது அரசாங்கம் மிகவிரைவில் நடவடிக்கை எடுக்கும்.
இதனை எமது 100 நாள் வேலைத்திட்டதிற்குள் முடிக்க நாம் தீர்மானித்துள்ளோம்.மேலும் குறித்த பகுதிகளில் உடைக்கப்பட்ட மத ஸ்தலங்களை புனர்நிர்மானம் செய்து கொடுக்கவும் நாம் செயற்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
|
30 Jan 2015 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1422659521&archive=&start_from=&ucat=1& |
|
|
Geen opmerkingen:
Een reactie posten