ஐ.நா விசாரணையினை வலுவூட்டும் செயற்பாட்டில் தாயக தலைவர்கள் உறுதியாக இருப்பார்கள் என நம்புகின்றோம்: நா.க.த. அரசாங்கம்
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 12:13.32 PM GMT ]
ஆட்சிபீடமேறியுள்ள சிறிலங்காவின் புதிய அரசாங்கம், ஐ.நா.வின் விசாரணைகளை நீத்துப் போகச் செய்யும் முயற்சிகளுக்கு மத்தியில், தாயக அரசியல் தலைவர்கள் மௌனமாக இருப்பதாக யாழ்ப்பாண இலத்திரனியல் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்துரைக்கும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்களது ஊழல்களோ, குடும்ப ஆட்சியோ, ஆடம்பர அரசியலோ இதுவல்ல தமிழர் தேசத்தின் விவகாரம்.
பெரும் இன அழிபொன்றினைச் சந்தித்து தங்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலத்திடம் வேண்டி நிற்கும் ஓர் இனத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழர் தேசத்தின் அரசியல் தலைவர்கள், அந்த மக்களின் நலன்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக செயற்படமாட்டார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக விசாரணைக்கான ஐ.நா தீர்மான உருவாக்கத்தில், தாயக அரசியல் பிரதிநிதிகள் கடந்த காலத்தில் ஆற்றியிருந்த பங்கின் தொடர்ச்சியாக, வரும் மார்ச் மாத ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரிலும், அவர்கள் காத்திரமான பங்கினை ஆற்றுவார்கள் என தமிழ்மக்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் சுதன்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgv6.html
தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 12:45.46 PM GMT ]
இவர்களில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, நிஷாந்த முத்துஹெட்டிகம, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, அருந்திக்க பெர்ணான்டோ, விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), துமிந்த சில்வா, ரோஹித்த அபேகுணவர்தன, சரண குணவர்தன ஆகியோர் முக்கியமான நபர்கள் என கூறப்படுகிறது.
இவர்களுக்கு எதிராக ஊழல், மோசடிகள் உட்பட ஏனைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தெரியவருகிறது.
இந்த நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தன்னிடம் உறுதியளித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
இது பற்றி அறிந்து கொண்ட ஏனைய மோசடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெறுவதற்காக அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பின்னால் திரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்பள்ளி நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு: ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 12:58.22 PM GMT ]
கடந்த 24ம் திகதி உருத்திரபுரம் கிழக்கு சாயி முன்பள்ளி நிகழ்வில் இராணுவப் படையணிக் கொடியேற்றப்பட்டு இராணுவத்தின் அத்துமீறிய பிரசன்னம் குறித்தும் முன்பள்ளி ஆசிரியர்களின் சுதந்திரமான கற்பித்தல் செயற்பாடுகள், ஊதியம் போன்ற விடயங்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்கக் கோரியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதன் விபரம் வருமாறு,
2015.01.28
மாண்புமிகு ஜனாதிபதி.
கௌரவ மைத்திரிபால சிறிசேன,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு.
ஐயா!
மாண்புமிகு ஜனாதிபதி.
கௌரவ மைத்திரிபால சிறிசேன,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு.
ஐயா!
சிவில் பாதுகாப்புப் பிரிவிலிருந்து முன்பள்ளி ஆசிரியர்களை விடுவித்தல்
இலங்கை நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட தங்களுக்கு, எழுபது ஆண்டுகளுக்கு மேல் நீதி வேண்டிப் போராடும் தமிழ்த் தேசிய இனத்தின் சார்பில் என் வாழ்த்துக்கள்.
தங்களுடைய காலத்திலாவது தமிழ்த் தேசிய இனம் சிங்கள தேசிய இனத்துடன் தமிழர்களுடைய வரலாற்று ரீதியான, சரித்திர பூர்வமான நிலத்தில் தமிழர்களுக்கு உரித்தான இறைமையின் அடிப்படையில், நிலையான தீர்வைப் பெற்று இலங்கை நாட்டின் இணைப்பங்காளிகளாக சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு வழி சமைப்பீர்கள் என்று எனது மக்கள் சார்பாக எதிர்பார்க்கிறேன்.
அந்த எதிர்பார்ப்பும் மாற்றம் வேண்டிய முயற்சியும் தான் தமிழர் வரலாறு காணாத வகையில் திரண்டு வந்து தங்களை இந்நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதற்குக் காரணமாக அமைந்தது. அந்த முயற்சிக்கும், உழைப்பிற்கும் தாங்கள் நல்லெண்ணத்துடன் உழைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் கீழ்வரும் விடயத்தினையும் தங்கள் கவனத்திற்குத் தருகிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தநாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முகாமைத்துவப் பயிற்சி என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட இராணுவத் துன்புறுத்தல்களையும் எல்லை மீறிய பயிற்சியினையும் தாங்கள் உடன் நிறுத்தியமைக்கும் தேசிய பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பதவிகளை மீளப்பெற்றமைக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.
வடக்கு கிழக்கிலே குறிப்பாகக் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பள்ளி செல்லும் 3-4வயதுப் பாலகர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் சிவில் பாதுகாப்புப்பிரிவு என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு இராணுவக் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படுகிறார்கள்.
இராணுவம் கொடுக்கும் நீலநிறப் புடவையைத்தான் அவர்கள் அணியவேண்டுமென எனக் கட்டாயப்படுத்தியுள்ளார்கள்.
அதேபோல் அந்தப் பச்சிளம் பாலர்களும் இராணுவம் சொல்லும் நிறத்தில் தான் தங்கள் உடைகளை அணிய வேண்டும்.
இவ்வாசிரியர்கள் மாதம் இரு தடவை விசுவமடு இராணுவ முகாமுக்கு அழைக்கப்படுவதும், அங்கு அரசியல் செயல்களில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுவதும், யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் எனவும் அச்சுறுத்தப்பட்டமையும், மேஜர் ஜெனரல் ரட்ணப்பிரிய அவர்களின் கட்டளையின் கீழ் நடைபெற்ற விடயங்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
விசேடமாக சின்னஞ்சிறு வயதுப் பாலர்கர்களைப் பராமரிக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இலங்கை நாட்டில் ஒருதகுந்த கல்விமுறை இல்லை என்பது வேதனையானது.
இலங்கையின் கல்வித்திட்டத்தில் ஒவ்வொரு மாகாணங்களிலும் முன்பள்ளிகளுக்கான உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் வலய ரீதியாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களையும் புறம் தள்ளி துப்பாக்கிகளுடனும் இராணுவச் சீருடையுடனும் இராணுவத்தினரே நேரடியாக இந்த முன்பள்ளிகளையும் ஆசிரியர்களையும் இராணுவ ரீதியாக நடத்துகிறார்கள்.
இலங்கையின் கல்வித்திட்டத்தில் ஒவ்வொரு மாகாணங்களிலும் முன்பள்ளிகளுக்கான உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் வலய ரீதியாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களையும் புறம் தள்ளி துப்பாக்கிகளுடனும் இராணுவச் சீருடையுடனும் இராணுவத்தினரே நேரடியாக இந்த முன்பள்ளிகளையும் ஆசிரியர்களையும் இராணுவ ரீதியாக நடத்துகிறார்கள்.
வடக்கு மாகாண சபை இருந்தும் கூட இம்முன்பள்ளிகள் ஒரு இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருப்பது, தாங்களும் நாங்களும் நேசிக்கும் ஜனநாயகத்திற்கு விரோதமான விடயமாகும்.
தாங்கள் தயவு கூர்ந்து இவ்விடயத்தைக் கவனத்தில் எடுத்துப் பாதுகாப்பு அமைச்சின் கீழ்வரும் சிவில் பாதுகாப்பபுப் பிரிவின் ஊடாக இருபத்தோராயிரம் ரூபா(21இ000ஃஸ்ரீ) சம்பளம் வழங்கப்படும் இம்முன்பள்ளி ஆசிரியர்களை மாகாணக்கல்வி அமைச்சின்கீழ் விடுவித்து இதே சம்பளத்தைக் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களும் தொடர்ந்து பெறக்கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
அத்துடன் இராணுவச்சீருடைகளுடனும் துப்பாக்கிகளுடனும் இராணுவத்தினர் பாடசாலைகளிலும், முன்பள்ளிகளிலும், பிரவேசிப்பதைத் தடுக்க வேண்டும்.
ஏனெனில் இப்பச்சிளம் பாலகர்களிடம் துப்பாக்கிகளில் இராணுவப் பிரசன்னங்கள் தொடர்பான பயந்த மனநிலையினை மாற்ற வேண்டும். அத்தகைய சூழலே ஆரோக்கியமான கல்விச் செயற்பாட்டிற்கும், அச்சமற்ற எதிர்காலத்திற்கும் வழிவகுக்கும். எனவே இராணுவத்தினர் கல்விமற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் தலையீடு செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
2015.01.24ம் திகதியன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உருத்திரபுரம் கிழக்கு சாயிமுன்பள்ளிக் கட்டடத் திறப்பு விழாவில் அத்துமீறிக் கலந்து கொண்ட இராணுவத்தினர் தேசியக் கொடியோடு இராணுவப் படையணிக் கொடியை ஏற்றிய படங்களைத் தங்களின் மேலான கவனத்திற்கு இக்கடிதத்துடன் அனுப்பி வைக்கின்றேன்.
எனவே தயவு செய்து இந்தநாட்டின் முதல் மனிதன் என்ற வகையில் இலங்கையிலே எங்குமே இல்லாத இந்த முன்பள்ளிகள் மீதான இராணுவச் செயற்பாட்டினை நிறுத்தி அனைத்து ஆசிரியர்களுக்கும் இதேசம்பளத்துடன் மாகாண அரசினது கல்வி அமைச்சின் கீழ் செயற்படத் தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இக்கடிதத்தைச் சமர்ப்பிக்கின்றேன்.
நன்றியுடன்,
சி.சிறீதரன்.
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி
சி.சிறீதரன்.
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி
வடக்கு கிழக்கில் இன்னமும் மகிந்தராஜபக்ஷவால் தமிழரை நசுக்க பழக்கப்படுத்தப்பட்ட இராணுவ தலையீடுகளில் மாற்றங்கள் இல்லை.
சர்வாதிகார அரசாங்கத்தை அகற்றி மக்களுக்கு நல்லாட்சியையும் மாற்றத்தையும் கொண்டுவரப்போவதாக ஜனாதிபதி கூறிவருகின்ற நிலையில் வடக்கு கிழக்கு தமிழர் வாழும் பகுதிகளில் இன்னமும் மகிந்தராஜபக்ஷவால் தமிழரை நசுக்க பழக்கப்படுத்தப்பட்ட இராணுவத்தினரின் தலையீடுகளும் நெருக்குவாரங்களும் இம்மியளவும் குறைந்ததாக தெரியவில்லை.
ரோந்துகளும் புலனாய்வு துறையினரின் மோப்பங்களும் தொடர்கின்றது.இதன் மூலம் இந்த நாட்டிலும் தமிழ் மக்கள் வாழ்விலும் நம்பிக்கை வருமென நம்பி வாக்களித்த மக்களின் மனதில் அச்சமும் நம்பிக்கையின்மையிலும் ஏற்பட்டுவருகின்றது.
நேற்று கிளிநொச்சி உருத்திரபுரத்திரம் சாஜிமுன்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொள்ளச்சென்றபொழுது அங்கு இராணுவப் பிரசன்னமே நிறைந்திருந்தது.முன்பள்ளியில் இராணுவச்சீருடைகளே அதிகமாக இருந்தது அங்கிருந்த மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதே வேளையில் பயங்கரவாத தடுப்புபிரிவால் முன்னைய நாள் போராளிகள் விசாரணைகளுக்கு அழைக்கப்படுவதுடன் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
நேற்று மேற்படி முன்பள்ளி நிகழ்வில் கலந்துகொண்ட பா.உறுப்பினர் உரையாற்றுகையில் உருத்திரபுரத்தின் எம் எதிர்கால சந்ததி சிறந்த முறையில் நல்லதொரு கல்விச்சூழலில் கல்வி கற்பதற்கு ஒரு அழகான முன்பள்ளியொன்றை அமைத்துக்கொடுத்துள்ள யுஎன்க பிராற் நிறுவனத்துக்கும் அதன் பொறியிலாளர் யுகநேசனுக்கும் இந்த முன்பள்ளி அமைய ஒத்துழைத்த இந்த முள்பள்ளி சமுகத்துக்கும் என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் நான் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
நான் இந்த நிகழ்விற்கு வந்தபோது நிறைந்த இராணுவ பிரசன்னத்தை இங்கு பார்த்தேன்.அது மனதிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.ஒரு முன்பள்ளி நிகழ்வில் இராணவச்சீருடை பிரசன்னம் எமது மக்களையும் எமது எதிர்கால சந்ததிகளையும் ஒரு அடிமைத்தனத்துக்குள் வைத்திருப்பதையே ஆக்கிரமிப்பாளர்கள் விரும்புவதான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இராணுவ பிரசன்னம் எமது பிள்ளைகளின் உளவியலில் பாதிப்பை ஏற்படுத்தும்.சிங்கள கிராமங்களில் இப்படி இராணுவச்சீருடையுடன் இராணுவத்தின் கொடிகளையும் ஏற்றி விழாக்கள் நடக்குமா.ஒருபோதும் நடக்காது.
ஆனால் நாம் தமிழர்கள் என்ற காரணத்தால் நாம் அடிமைகள் என்ற காரணத்தால் இராணவத்தினர் இத்தகைய கீழ்த்தரமான வேலைகளை செய்துவருகின்றனர்.இந்த நாட்டினுடைய ஜனாதிபதி நல்லாட்சியை ஏற்படுத்துதாக சொல்கிறார்.முயற்சிக்கிறார்.
ஆனால் இங்கு இராணுவமோ பழைய மாதிரியே செயல்பட நினைக்கின்றது.எனவே இது தொடர்பாக நான் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்த இருக்கின்றேன்.எமது பிள்ளைகளின் கல்லறைகளின் மீது இராணுவம் ஏறிமிதித்து அசிங்கம் செய்யும் வரை இராணுவம் எமது நண்பர்களாக முடியாது.நாம் கடந்த எட்டாம் திகதி தெளிவாக வாக்களித்து மைத்திரிபாலசிறிசேனா அவர்களை ஜனாதிபதி ஆக்கியது.
நாம் தொடர்ந்தும் அடிமை வாழ்வுக்குள் வாழ்வதற்கு அல்ல.எனவே இந்தச்செய்தி இராணுவ மற்றும் அரசாங்க மேலிடங்களுக்கு சென்று சேரவேண்டும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgwy.html
Geen opmerkingen:
Een reactie posten