[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 06:27.59 AM GMT ]
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன் ஊடக அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாகவும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் காரணமாகவும் பொருளாதார நோக்கங்கள் கருதியும் இந்நாட்டுப் பிரஜைகள் இலட்சக்கணக்கானோர் வெளிநாடு சென்று அந்த நாட்டுப் பிரஜைகளாக மாறியுள்ளனர்.
முன்னர் இவ்வாறு வெளிநாட்டுப் பிரஜைகளாக இருப்பவர்கள் மீண்டும் இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்வதில் ஒரு இலகுவான நடைமுறை பின்பற்றப்பட்டது.
ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தில் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வது என்பது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் அத்தகைய குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறையானது மிகவும் கடினமானதாக மாற்றப்பட்டது.
இப்பொழுதுள்ள நடைமுறைகளைப் பார்க்குமிடத்து, வெளிநாட்டில் வசிப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதாகவே தோன்றுகின்றது.
இரட்டைக் குடியுரிமையைக் கோருபவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, சர்வதேச பொலிசாருக்கூடாகவும்கூட இத்தகைய விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
வெளிநாடுகளில் சிங்கவளர், தமிழர், இஸ்லாமியர் என இலங்கையின் சகல இனத்தவரும் அந்தந்த நாட்டுப் பிராஜவுரிமையுடன் வாழ்ந்துவருகின்றனர். அதுமட்டுமன்றி, இவ்வாறு வாழ்பவர்களின் தொகை மில்லியனுக்கும் மேலாக இருக்கின்றது.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது உழைப்பின் பெரும்பகுதியை தமது தாய்நாடான இலங்கையில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அதுமாத்திரமல்லாமல், இவர்கள் பிறப்பால் இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் இலங்கைப் பிரஜாவுரிமையை மீளப் பெற்றுக்கொள்வதற்கு அரசு வகுத்திருக்கும் மிகக் கடினமான வழிமுறை என்பது அர்த்தமற்றதும் எமது சொந்த நாட்டு மக்களைக் கேவலப்படுத்துவதும், நாட்டிற்குள் வரக்கூடிய பெருந்தொகையான முதலீடுகளையும் அந்நியச் செலாவணியையும் ஒதுக்கித் தள்ளுவதுமாகவே அமைகின்றது.
வெளிநாட்டுப் பிரஜாவுரிமைiயைப் பெற்றிருந்தாலும்கூட, உணர்வுரீதியில் தம்மை இலங்கையர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்பவர்கள். அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலும், அவர்களது சுயமரியாதையை மதிக்கும் வகையிலும், இரட்டைக் குடியுரிமைக்கான இலங்கையின் வழிமுறைகள் இலகுபடுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchxy.html
சமூகத்தை சீரழிக்கின்ற அரசியல்வாதிகளை ஒதுக்கி புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவோம்: பெ. இராஜதுரை
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 06:42.49 AM GMT ]
மலையக பகுதி ஆசிரியர்களை தெளிவுபடுத்தி மலையகத்தில் கல்வியில் மாற்றத்தையும் அரசியலில் மாற்றத்தையும் ஏற்படுத்த ஆரம்பித்திருக்கும் கூட்டம் ஒன்று அட்டன் தொழிலாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
அதில் பிரதம அதிதியாக உரையாற்றிய சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான இராஜதுரை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்த முதலாவது நபராக நான் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் நீண்ட பேச்சுவார்த்தையை நடாத்தினேன். அவரிடம் நான் வைத்த கோரிக்கை எமது மக்களின் உணவு பிரச்சினைக்கான தீர்வாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கவும், கல்வியில் முன்னலை பெற பல்கலைக்கழகம் கணிதம், விஞ்ஞான ஆசிரியர்களை தந்துதவி எமது மக்களின் கல்வி நிலையை உயர்த்தவும் என கூறினேன்.
அவரும் எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அந்த அடிப்படையில் சட்ட ரீதியாக காணிகளை பெறப்படல் வேண்டும்,100 நாள் திட்டத்தில் ஏழு பேர்ச் காணி சம்பந்தமாக எங்கும் குறிப்பிடப்படவில்லை காணியுடன் வீடு கட்டிகொடுக்கப்படும் என்று சிலர் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றர்கள்.
சட்ட ரீதியாக காணியும் அதனுள் வீடும் கட்டி கொடுக்கப்படும் என்று அரச வர்த்தமானியில் பிரசுரம் செய்யப்படல் வேண்டும். அவ்வாறு இதுவரை நடைபெறவில்லை. எனவே பொதுமக்கள் பொய்யுரைகளை நம்பி ஏமாறாது இருப்பது மிக அவசியம்.
கல்முனைக்கு அடுத்தப்படியாக அதிக வாக்குகளை நுவரெலியா மக்கள்தான் அளித்துள்ளனர். நுவரெலியா அரசியல் பிரதிநிதிகளை வைத்தே நாம் பேரம் பேச வேண்டும். பேரம் பேசி வருகின்றோம்.
நாம் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் சென்றுவிட்ட போதும் ஐந்து பரம்பரை வாழ்ந்துவிட்ட போதும் எமது வளர்ச்சி ஆமை வேகத்திலேயே நடைபெறுகின்றது.
ஏனைய சமூகத்தவரை போல் கல்வி வளர்ச்சியில் நாம் குறிப்பிட்ட அளவு முன்னேற்றத்துறையில் இல்லை. அதேபோல் அரசியல் துறைகளிலும் தீர்மானிக்கக்கூடிய அதிகாரிகள் இல்லை. எமது மக்களுக்கு சொந்தமாக உள்ளது பிரச்சினைகள் மாத்திரமே.
எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வழிமுறை அரசியல் துறையே. துரதிஷ்ட வசமாக மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்திற்கு அனேக உல்லாசப் பிரயாணிகள் வருவார்கள். பார்ப்பார்கள். ரசிப்பார்கள். கருத்துக் கூறுவார்கள். சென்றுவிடுவார்கள். அதேபோல் தான் அரசியல்வாதிகளும் உல்லாச பிரயாணிகள் போல் மாதம் ஒருமுறை வந்து போகின்றனர்.
இவர்களுக்கென்று தொழில்கள் உண்டு அதில் சட்டரீதியாகவோ அல்லது வேறு விதமாகவோ பணம் வருகின்றது. அதனைக் கொண்டு மலையக இளைஞர்களின் கலாச்சார பண்பை கெடுக்கும் வகையில் அநாகரீக விடயங்களில் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்த பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொறு உல்லாச பிரயாணிகள் போல் வருகின்ற மலையக அரசியல்வாதிகள் தங்களுக்கும் பாதுகாப்பு பட்டாளங்களுடன் மலையக பகுதிகளுக்கு உல்லாச பயணம் மேற்கொள்ள வேண்டும். அதன்போது அப்பாவி மக்களை தங்களின் வாகனங்களால் மோதி பலி எடுக்க வேண்டும் அதன் மூலம் விளம்பரங்களை தேடுவதும் சகஜமாகிவிட்டது.
எனவே புதிய உண்மையான நேர்மையான சேவை மனப்பான்மையுடன் மக்களிடம் உண்மையை பேசி அரசியல் செய்யும் கலாச்சாரத்தை நாம் ஆரம்பித்து செயல்படுத்தி இரண்டாம் மூன்றாம் தலைகளை உருவாக்கி சமூகத்தை சீரழிக்கும் தலைமைகளை ஓரம் கட்டுவோம் என்கிறார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchxz.html
Geen opmerkingen:
Een reactie posten