தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

மார்ச்சுக்கு முன்னர் ஐ.நா விசாரணைக் குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு நா.க.த.அரசாங்கம் கோரிக்கை

பொலிஸ், படையினர் வசமுள்ள கைதிகளின் விபரங்கள் வெளியிடப்படும்: மனோ கணேசன்
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 12:06.26 PM GMT ]
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் விபரங்களை தரும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இன்று தேசிய நிறைவேற்று சபையில் கோரிக்கை விடுத்தார்.
இன்று காலை நிறைவேற்று சபை கூடியபோது, கடந்த வாரம் மனோ கணேசன் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில்,
இலங்கை முழுக்க சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் விபரங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில், பொலிஸ் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு மற்றும் படைத்தரப்பு முகாம்கள் ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் விபரங்களையும் தரும்படி மனோ கணேசன் கோரினார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த தகவல்களையும் போலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சுகளிடமிருந்து பெற்று சபைக்கு சமர்ப்பிக்கும்படி, தேசிய நிறைவேற்று சபையின் செயலாளர் திலக் ரணவிராஜாவுக்கு பணிப்புரை விடுத்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgp1.html
ஸ்ரீ லங்கன் விமான சேவையின் புதிய தலைவர் பதவியேற்பு
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 12:27.49 PM GMT ]
இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் டயஸ் இன்று தனது பணிகளை பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கான நிகழ்வு கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கன் விமான சேவையின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்களாக அர்ஜுன ரணதுங்க, பைஸர் முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கபடுகின்றது.
மார்ச்சுக்கு முன்னர் ஐ.நா விசாரணைக் குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு நா.க.த.அரசாங்கம் கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 12:46.55 PM GMT ]
இலங்கை தொடர்பான ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்துலக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் முடிப்பதற்கு முன்பாக, ஐ.நா.விசாரணைக் குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் ஆட்சி பீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பை ஐ.நா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஐ.நா உயர் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நம்பகமான மூன்றாம் தரப்புக்களின் ஆதாரங்களை விசாரணைக் குழு ஏற்கனவே பதிவு செய்து முடித்திருக்கும்.
எனினும், இலங்கைத் தீவில் உள்ள பல பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தமது வாக்குமூலங்களைக் கொடுக்கவில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஆகவே இந்த வாய்ப்பை நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கப் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் இது அக்கடித்தில் பிரதமர் உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார். 
மேலும் ஐ.நா விசாரணைக் குழுவின் இலங்கை;கான பயணம் மேலும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ள அக்கடித்தில், பாதிக்கப்பட்டவர்களின் விசாரணை மட்டும் அன்றி, குற்றவாளிகளும் விசாரிக்கப்பட வேண்டியது அவசியம்.
இந்த விசாரணை, நேரடியாகக் குற்றம் புரிந்தவர்களை நிர்ணயிக்க மட்டும் அல்லாமல், கட்டளைப் பொறுப்பின் சங்கிலித் தொடரில் எந்தெந்த அதிகாரிகள் பொறுப்பைக் கொண்டிருந்தார்கள் என்பதை தீர்மானிக்கவுமேயாகும் எனவும் குறித்துரைத்துள்ளார்.
தடயவியல் ஆதாரங்களை பெற சம்பவம் நடந்த இடங்களுக்கு செல்வது இன்றியமையாதது.
இலங்கை விவகாரம் தொடர்பிலான அறிக்கையினை சபையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஆணைக்குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைப்பீர்கள் என நம்பிக்கை கொள்ளவதாக அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgp4.html

Geen opmerkingen:

Een reactie posten