தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 januari 2015

தேசிய பாதுகாப்பு தொடர்பில் புதிய திட்டங்கள்!- ஜனாதிபதி



வடமராட்சி கிழக்கு, வத்திராயன் மாணவர்களுக்கு குணரத்தினம் அறக்கட்டளை நிதியம் அப்பியாசக் கொப்பிகள் உதவி
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 05:09.21 PM GMT ]
போரின்போதும், சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கின் வத்திராயன் கிராமத்தைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு குணரத்தினம் அறக்கட்டளையினர் அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஊடாக வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் சூரியகாந் அவர்களினால் அப்பியாசக் கொப்பிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இநநிகழ்வு வத்திராயன் கிராம முன்னேற்றச் சங்கத் தலைவர் புவனேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சிக்கிழக்கு அமைப்பாளர் சூரியகாந்,
தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. எம் அழிவுக்கான படலத்தை நிறைவேற்றிய அதர்மவாதியை அரங்கிலிருந்து அகற்றியிருக்கிறோம். நாங்கள் சிந்திய இரத்தக் கண்ணீரும் எம் உறவுகள் சந்தித்த துன்பமும் ஒருங்கே சேர்ந்து அவரையே தண்டித்திருக்கிறது.
தமிழர்களைப் பொறுத்த வரையில் 70 ஆண்டுகளாக பல இன்னல்களை சந்தித்திருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மக்களை இழந்திருக்கிறார்கள்.
நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்களை தங்களுடைய விடுதலைக்காக புதைத்திருக்கிறார்கள். காலம் காலமாக ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழர்களுக்கான தீர்வுகள் எதனையும் முன்வைக்க அவர்கள் தவறி விட்டனர்.
அதிகார மமதையும் ஆட்சி வெறியும் இன குரோதமும் தமிழர்களுக்கான தீர்வுப் பொதியை வழங்குவதற்கு இடமளிக்கவில்லை.
வடமராட்சிக்கிழக்கு மண் எமது தர்மப்போரில் வீரியம் மிக்க விதைகளை தந்த மண், அபிவிருத்திச் சாயம் பூசி எம்மனங்களை வெல்லலாம் என நப்பாசை கொண்டவர்களுக்கும் தக்க பதிலை தக்க சமயத்தில் எம்மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
தமிழர்கள் தம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முனைந்தார்கள். இதற்காக அவர்கள் மரணங்களைக்கூட வென்றார்கள். இதற்குக்கூட தடைவிதித்த அரசுகள் எங்களுக்கான நீதிதேவதையை கொன்றுவிட்டார்கள் என்றார்.
இந்நிகழ்வில் வத்திராயன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் அப்பன், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் புவனேந்திரன், கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் சிவதாஸ் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgw5.html

தமிழ் மக்களுக்கு உள்ள சந்தேகத்தினை ஜனாதிபதி தீர்க்க வேண்டும்!- இரா.துரைரெட்ணம்
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 12:36.42 AM GMT ]
கிழக்கு மாகாணசபை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி தமிழ் மக்களை புறக்கணித்து செயற்படுகின்றாரா என்ற தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கின்ற சந்தேகத்தை தவிர்க்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இருக்கின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மத்திய அரசாங்கத்தில் மாற்றம் உண்டாக கிழக்கு மாகாணசபையில் மாற்றம் உருவாகக்கூடிய சூழல் உருவாகியிருக்கின்றது. இந்த மாற்றத்தினை ஏற்படுத்தும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பல திட்டங்களை முன்னெடுத்திருந்தது.
முதலாவதாக முஸ்லிம் காங்கிரசுடன் பேசி முதலமைச்சரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டு ஒரு கூட்டாட்சி அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு அது வெற்றியடையாத நிலையில் இரண்டாவதாக ஜனாதிபதி, பிரதமருடன் பேசி அனைவரும் சேர்ந்து ஆட்சியமைக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தோம்.
கிழக்கு மாகாணத்தில் அறுபத்தைந்து சதவீத மக்கள் கொடுங்கோலாட்சியை நிறுத்தி ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை பெற்று பதினொரு ஆசனங்களை கைப்பற்றி கடந்த முறை கிழக்கு மாகாண ஆட்சி புறக்கணிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக நல்லெண்ண சமிக்ஞையாக முதலமைச்சரையும் ஆட்சியமைப்பதற்கான சூழலையும் உருவாக்க வேண்டும்.
கடந்த இரு நாட்களாக எமது தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசிய போதும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஆட்சிமாற்றத்திற்கு காரணமான கிழக்கு மாகாண மக்களை புதிய ஜனாதிபதி அவர்கள் கைவிட்டுவிட்டாரா அல்லது தொடர்ச்சியாகவும் வருகின்ற அரசாங்கங்கள் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதா என்ற சந்தேகம் உருவாகின்றது.
கிழக்கு மாகாண மக்கள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு வாக்களித்தவர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தத் தேர்தல் வெற்றிக்காக செயற்பட்டவர்கள் என்ற வகையில் கிழக்கு மாகாண மக்கள் கடந்த காலத்தில் கிழக்கு மாகாண ஆட்சியாளர்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள், இந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கு ஜனநாயக முறையில் பதினொரு ஆசனங்களை பெற்று அதிக வாக்குகளையும் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவி கிடைப்பதோடு ஆட்சியாளராக மாறுவதற்கு ஏற்ற சூழல் உருவாவதற்கு புதிய ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த தினங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவால் நாங்கள் கவலையடைகின்றோம். ஜனாதிபதி அவர்கள் கிழக்கு மாகாண தமிழ் மக்களை கைவிட்டுவிட்டாரா அல்லது பக்கச்சார்பாக நடக்கின்றாரா அல்லது இனவாதமாக பார்க்கின்றரா அல்லது கடந்த கால ஆட்சியாளர்களைப்போல் இந்த ஜனாதிபதியும் தமிழ் மக்களை புறக்கணித்து செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியிருக்கின்றது. இந்த சந்தேகத்தை தவிர்க்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது. இன்னும் காலம் கடந்துவிடவில்லை. எதிர்வரும் பத்தாம் திகதிக்கிடையில் பல நாட்கள் இருக்கின்றன.
அதற்கிடையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் ஆட்சியாளர்களாகின்ற சூழ்நிலை ஜனாதிபதியால் உருவாக்கப்படவேண்டும். இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும். அப்படியில்லாவிட்டால் கிழக்கு மாகாண மக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என்ற முடிவிற்கு தமிழ் மக்கள் வந்துவிடுவார்கள் என்பதை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எங்களைப் பொறுத்தவரை மத்திய அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் நாங்கள் கோரவில்லை. மத்திய அரசில் அதிகாரப்பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவிற்கு எமது தலைவர் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிக்கின்றார்.
மத்திய அரசில் எந்தப் பதவியையும் பட்டத்தையும் நாங்கள் கோரவில்லை. கிழக்கு மாகாணத்தில் மட்டும் ஆட்சியாளராக மாறுவதற்குரிய வேலைத்திட்டங்கள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும். நாற்பது வீத தமிழ் மக்கள் வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவி எமக்கு தரப்பட வேண்டும். இது எமது உரிமை. சலுகையல்ல. பதினொரு ஆசனங்களையும் அதிக வாக்குகளையும் பெற்றவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் இதை கோருகின்றோம்.
கிழக்கு மாகாண மக்களை பொறுத்தவரை இனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் மாற்று இனத்திற்கு இந்தப் பதவி வழங்கப்படக்கூடாதென அவர்கள் கருதுகின்றனர். அது பாதிப்பின் வெளிப்பாடாகும். ஆனால் நாங்கள் அவர்களுடன் ஐக்கியமாக வாழக்கூடாதென கூறவில்லை.
கடந்தமுறை அப்படியான பொறுப்புகளை அவர்களுக்கு வழங்கியதன் விளைவாக நாங்கள் பாதிக்கப்பட்ட வரலாறு இருக்கின்றது. அது அல்லாத பட்சத்தில் அடைக்கால மாற்றுத்திட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும்.
கிழக்கு மாகாண தமிழ் மக்களை பொறுத்தவரை ஏனைய சிறுபான்மையினத்தோடு பரஸ்பரம் ஒரு ஒப்பந்தத்தின் ஊடாக முதலமைச்சரை வழங்கி ஏனைய அமைச்சுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டு ஆட்சியாளர்களாக மாறவேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
இதை மீளாய்வு செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசை சார்ந்தது. இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ளும் முகமாக மத்திய அரசு செயற்பாட்டில் ஈடுபடவேண்டும்.என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcgw6.html
புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 12:45.55 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விசேட உரையாற்றுவார்.
இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது. ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்துவார்.
பிற்பகல் 1.15 மணிமுதல் 3 மணி வரை வரவு செலவுத்திட்டம் மீதான உரை இடம்பெறும்.
அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வு மற்றும் குறைந்தது 10 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புடன் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்கான நிவாரணப் பொதிகள், தனியார் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்கள் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம்
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 12:55.03 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வண.மாதுலுவாவே சோபித தேரர், தலைமையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகள் வெளியான போது அவர், ஜனாதிபதி செயலகத்தில் மகிந்த ராஜபக்சவுடன் இருந்தார் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.
இதனால் அவர் தொடர்பில் தமக்கு நம்பிக்கையில்லை என்றும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸுக்கு எதிராக உயர்நீதிமன்றுக்கு முன்பாக சட்டத்தரணிகளால் பல தடவைகள் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
பிரதம நீதியரசராகவிருந்த மொஹான் பீரிஸை பதவியை விட்டு விலகிச்செல்லுமாறு வலியுறுத்தி ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் ஒன்றியம் நேற்று புதன்கிழமை புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
அரசாங்க ஊடகங்களின் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும்: சுதந்திர ஊடக மையம்
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 12:57.36 AM GMT ]
அரசாங்க ஊடகங்களின் தலைமைகளை மாத்திரம் மாற்றாது, அதன் கொள்கைகளும் மாற்றப்பட வேண்டும் என்று சுதந்திர ஊடக மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கொள்கை மாற்றத்தின் போது அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று சுதந்திர ஊடக மையத்தின் அழைப்பாளர் சுனில் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அரசாங்கம் மாறியுள்ள போது, அரசாங்க ஊடகங்களில் தகுந்த மாற்றங்களை காணமுடியவில்லை என்றும் சுனில் ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் புதிய திட்டங்கள்!- ஜனாதிபதி
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 01:02.28 AM GMT ]
தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக படைகளின் பிரதானியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த முடியும் என்று அவர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்து விடயங்களை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.
தேசிய பாதுகாப்பை பலப்படுத்த உள்நாட்டின் ஜனநாயக திட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மைத்திரிபால கூறினார்.
இதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcgx0.html

Geen opmerkingen:

Een reactie posten