தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விரைகிறார்….

அங்கயனின் தந்தை மற்றும் சகாக்களை கைது செய்ய உடனடி உத்தரவு

2013ம் ஆண்டினில் நடைபெற்ற வடமாகாணசபை தேர்தலின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரமுகர் தம்பிராசாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்தே சுமார் 17 மாதங்களின் பின்னர் கைதிற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரப்பகுதியில் வைத்து தனக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையும் அத்துடன் அப்போது பிரசன்னமாகியிருந்தவர்களில் பெயர் தெரியாதவர்களது புகைப்பட ஆதாரங்களையும் தம்பிராசா சமர்ப்பித்திருந்தார். எனினும் முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் எதனையும் செய்திராத காவல்துறை அத்துடன் குற்றஞ் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியும் இருக்கவில்லை.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை அவர்கள் அனைவரையும் அரசியல் தலையீடுகள் எதனையும் பொருட்படுத்தாது கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதுவரை காலமும் மஹிந்தவினது படங்களுடன் ஜொலித்த அங்கயனின் யாழ்.மாவட்ட அலுவலகம் அண்மையிலேயே மைத்திரிக்கு மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/95635.html

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விரைகிறார்….

நாளை முதல் எதிர்வரும் 30ம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்படுகிறது. ஸ்வெயார் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வெயார் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்வெயார் புதிய பிரதமர் ரணில் விக்ரசிங்க உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளார். அண்மைய தேர்தல்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்ய ஏற்பட்டுள்ள வாய்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்வெயார் தெரிவித்துள்ளார். இலங்கையில் சுபீட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்த சகல வழிகளிலும் பிரித்தானியா ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/95638.html

Geen opmerkingen:

Een reactie posten