தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

சுன்னாகம் கழிவு எண்ணை விடயம், இன அழிப்பின் ஒரு புதிய வடிவம்……

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பாரிய மோசடி….

மாணவர் நலனில் அக்கறைசெலுத்தாத பேரவை உறுப்பினர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை வருமாறு
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2015ம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் கடந்தவருடம் பேரவையில் இருந்து கொண்டு அதிகாரத்துஸ்பிரயோகம் செய்து பலமுறைகேடுகள் இடம்பெறக் காரணமாக இருந்த மூதவை உறுப்பினர்கள் இருவர் மீண்டும் தெரிவாகியுள்ளனர்.
குறிந்த இரு உறுப்பினர்களும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிர்வாகம் மேற்கொண்டபோது அதற்கு ஆதரவாகவும் செயற்பட்டனர்.
அதேவேளை இவர்களில்……
1. ஒருவர் வர்த்தகமுகாமைத்துவப்பீடத்தின் வருகைதரு விரிவுரையாளராகவும் பேரவை உறுப்பினராகவும் எவ்வாறு செயற்படமுடியும?;. பேரவை இடம் பெறும் வேளையில் குறிந்த பேரவை உறுப்பினர் மது அருந்துவதாக எமக்கு கிடைந்த தகவலை அடுத்து நாங்கள் அவரை கண்கானிக்க தொடங்கினோம். அது உண்மை என்பதையும் அறிந்து கொண்டோம். ஒரே நேரத்தில் இரு வேலைகள் செய்வதுடன் உபவேந்தருக்குவிசுவாசமாகவும் செயற்பட்டார்
2. கடந்தபேரவையில் அங்கம் வகித்த அம்பாறை மாவட்டத்தைச்சேர்ந்த ஒருவர் மறைமுகமாக கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வினியோகஸ்த்தராகவும் வழங்குனராகவும் தொழில்ப்பட்டார் என்பதாக அறிந்தோம.; இவர் இங்கு இடம் பெற்றமோசடிகளை அறிந்தும் அறியாமல் தொழில்ப்பட்டார் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்
கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் பல்கலைக்கழகமானியங்கள் ஆனைக்குழுவுக்கு வழங்கப்பட்ட 156 பக்கமுறைகேடுகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முறைகேடுகள் இடம் பெற்ற காலப்பகுதியிலும்
இவர்கள் பேரவையின் உறுப்பினர்களாக செயற்பட்டனர் எனவே இருவரையும் 2015ம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்குமாறு மாணவர் ஒன்றியம் வலியுறுத்துகின்றது.
எமது பல்கலைக்கழகப்பேரவை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கௌரவம்இ சமூகஅபிவிருத்திஇ மாணவர்கல்வி மற்றும் நலன் என்பவற்றுக்கு மேலாக எமது கலாசாரப்பாரம்பரியத்தை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டுமே தவிர பேரவை உறுப்பினர்களின் தனிப்பட்ட நலன்களை அடைவதற்காக செயற்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
எமது பல்கலைக்கழகப் பேரவையானது சமூகசேவை ஆர்வலர்கள் மற்றும் புத்திஜிவிகளின் பங்களிப்பு அவசியமே தவிர அரசியல் மயப்பட்டதாகவோ வெளி அமைப்பினரது சுயநலதன்மை கொண்டதாகவோ அமைவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.
பேரவையின் புதியபெயர் பட்டியலைத்தயார் படுத்தியர்கள் யார்?
கடந்தகாலத்தல் பேரவை நியாயமாகவும் நேர்மையாகவும் கடமையாற்றிய பேரவை உறுப்பினர்களைத்தவிர்ந்து இந்த இரு நேர்மையற்றவர்களை தெரிவு செய்ததன் காரணம் என்ன?
முறைகேடுகள் இடம் பெற்ற வேளையில் பேரவையின் உறுப்பினர்களாக இருந்தவர்களின் பெயர்களை சிபாரிசு செய்தது யார்?
சிபாரிசு செய்த இவர்களின் துரநோக்கம் என்ன? கொஞ்சம் சிந்தியுங்கள்!!!!!
ஊழலுக்கு எதிரான புதிய ஜனநாயக அரசு கிழக்குப்பல்கலைக்கழகத்தில் அதிகார துஸ்பிரயோகம் மற்றும் முறைகேடுகள் இடம் பெற்றவேளையில் பேரவையின் உறுப்பினர்களாக இருந்தவர்களை மீண்டும் பேரவையின் பெயர் பட்டியலிலும் இனைத்து அனுமதி அளித்தமை ஊழலுக்கு எதிரான புதிய ஜனநாயக அரசாங்கத்தின் மீது எமக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
இதுதானா புதிய அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான நல்லாட்சி????
கடந்தபேரவையில் இருந்த உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளுர் அரசியல் தலைவர்கள் மற்றும் மத்திய அரசில் அங்கம் பகிக்கும் பலருக்கும்; இவர்கள் தொடர்பான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்பும் இவர்கள் புதிய பேரவையில் இடம் பெற்றது எவ்வாறு?
குறிந்த இருவரையும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு பல்கலைக்கழக அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்யக்கூடியவர்களை எந்தவிதமான இனஇ மத வோறுபாடு இன்றி நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாணவர் ஒன்றியம் கேட்டுக் கொள்கின்றது.
கிழக்குமாகாணம் 3 மாவட்டங்களை உள்ளடக்கிய போதிலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் திருகோணமலையில் இருந்தும் கடந்தகாலங்களில் பேரவை உறுப்பினர்கள் எவரும் திருகோணமலையில் இருந்து தெரிவுசெய்யப்படாத நிலையில்
“முன்னைய பேரவையின் உறுப்பினர்கள் இருவருக்கும் பதிலாக நியமிகப்படுபவர்களில் ஒருவர் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமையவேண்டுமென கிழக்குப் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் வேண்டுகின்றது.”
அவ்வாறு இரு உறுப்பினர்களையும் புதியபேரவையில் இருந்து நீக்காதவிடத்து மாணவர்களின் தொடர்போராட்டம் மூலமாக அவர்களை நீக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
சம்மந்தப்பட்ட உறுப்பினர்களே உங்களுக்கு ஓர் வேண்டுகோள் நீங்களாக பேரவையில் இருந்து விலகிக் கொள்வது பின்வரப்போகும் போராட்டங்களையும் கடந்த காலங்களில் பேரவை பற்றிய பல இரகசியங்கள் வெளிவராமல் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும் என கூறிக்கொள்கின்றோம்.


எமது இந்த கோரிக்கையினை அதிமேதகு ஜனாதிபதி அவர்களினதும் கொளரவ உயர் கல்வி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுவருகின்றோம். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.Batti East 1Batti East 2Batti East 3
http://www.jvpnews.com/srilanka/95527.html

சுன்னாகம் கழிவு எண்ணை விடயம், இன அழிப்பின் ஒரு புதிய வடிவம்……

கடந்த அரசின் ஆசீர்வாதத்தோடு ஒரு புறம் போதை பொருளுக்கு அடிமையாக்கி சிந்திக்க தக்க இளைஞர் சமூகத்தை சீரழிக்கும் சிங்கள திட்டமிடலால் யாழ் இளைஞர் சமூகம் பாரிய பாதிப்புக்களை சந்தித்து இருக்கும் நிலையில் மறுபுறம் ராணுவ மயமாக்கல் மூலம் தமிழர்களின் பூர்வீக நிலம் சூறையாடபட்டுக்கொண்டு இருக்கின்றது.
இன்னொரு புறம் இனத்தின் தனித்துவத்தை உடைக்க இனப்பரம்பல் செய்து எமது உடமைகளை இல்லாமல் செய்துகொண்டு இருக்கிறது.எமது பிரதேசங்களுக்கு சிங்கள மொழியில் பெயர் சூட்டல் 1480 களில் ஆரம்பித்து இன்றுவரை தொடர்கின்றது.
இவற்றை எல்லாம் விட மேலாக எமது தாய்குலத்துக்கு கருத்தடை செய்து அவர்கள் சந்ததி வளர்ப்பை நேரடியாக கட்டும்படுத்தும் சூழ்ச்சி நடக்கின்றது.இவை எல்லாம் சிங்கள அரசின் நீண்டகால திட்டமிடலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகும் இவற்றுக்கு சில தமிழ் கட்சிசார் நபர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுவதும் காலத்தின் பதிவில் பதிவு செய்யபடுகின்றது.
இம்முறை இயற்கையின் கொடையான மழை எமது பிரதேசங்களில் நீர் நிலைகளை நிறைத்து இருந்தாலும் ,அந்த மழை நீரை சேமித்து தேக்கி வைத்து எமது தேவைகளுக்கு பயன்படுத்தும் தயார்நிலையில் எமது தேசத்தின் நீர் நிலைகள் குளங்கள் தயார்படுத்தபட்டு இருக்கவில்லை. அந்த கால மன்னர்கள் செய்த குளம் கட்டுதல் அணைகட்டுதல் போன்ற திருப்பணிகளுக்கு பின்னர் எமது முன்னோர்கள் ஓரளவு திருத்த வேலைகளை செய்து பாதுகாத்து வந்தார்கள். இன்று அவற்றை செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை.
ஒல்லாந்தர்காலத்தில் யாழ் மாவட்டத்தை பாதுகாக்க வன்னியில் இருந்து தண்ணீரை கொண்டுவரும் திட்டத்தை அவர்கள் தொடங்கினார்கள். சமகாலத்தின் அவர்கள் அரசியல் வீழ்சியால் அவர்கள் பிரித்தானியர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு வெளி ஏறியதால் அந்த பணி இடை நடுவில் விடப்பட்டது.
இன்று அதே தண்ணீரை கொண்டுவருவதற்கு நாம் புலத்துக்கு அழைத்துவந்து பொன்னாடை போர்க்கும் ஒருவர் தடையாக உள்ளார். அதற்காக அவர் சொல்லும் காரணங்கள் அவர்கள் அரசியல் நலன் சார்ந்ததாக இருக்கின்றதே தவிர ஒட்டுமொத்த தமிழ் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. இதுவும் காலத்தின் பதிவில் கடந்து போகும்.

இன்று இந்த கழிவு எண்ணை விடயம் மிகவும் பாரதூரமான விளைவை குடா நாட்டில் ஏற்படுத்த போகின்றது. இதையும் அரசியலாக பார்த்து தேர்தல்களின் போது மட்டும் கூக்குரல் இடும் விடயமாக பார்க்காமல் மக்கள் நலன்சார்ந்து தீர்க்க படவேண்டிய பாரிய பிரச்சனையாக பார்க்கவேண்டும். எமது மக்களின் இருப்பை உறுதி செய்ய நாம் செய்யவேண்டிய தலையாய கடமைகளில் இதுவும் ஒன்றாகும்…..
http://www.jvpnews.com/srilanka/95534.html
Sunakim 01Sunakim 02Sunakim

Geen opmerkingen:

Een reactie posten