[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 11:33.58 AM GMT ]
தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கேசன்துறை வரையான ரயில் சேவையை ஆரம்பித்து வைத்ததற்காக அகில இலங்கை ரயிவே ஊழியரகள் பொதுச்சங்கம் மஹிந்தவுக்கு எதிராக தேர்தல் ஆணையளரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் தருணத்தில் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் இந்த ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்படுவதாக அகில இலங்கை ரயில்வே ஊழியர்களின் பொதுச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வித்தானகே குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கு இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணிகள் இதுவரை பூரணப்படுத்தப்படவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காகவே இந்த ரயில் சேவை ஆரம்பித்து வைத்துள்ளதாக வித்தானகே சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் இந்தக் குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா ரயில்வே திணைக்களத்தின் அதிகாரி விஜய அமரதுங்க நிராகரித்தார். கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் மட்டுப்பட்டுத்தப்பட்டிருந்த வடக்கு ரயில் சேவை இன்று முதல் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையில் தமது சேவையை மேற்கொள்ளும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmw0.html
பொன்சேகாவிற்குப் பதிலாக மகிந்தவை சாடிய வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 11:42.50 AM GMT ]
வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, சரத் பொன்சேகாவை சாடுவதற்குப் பதிலாக மகிந்தவின் பெயரை தடுமாறி உச்சரித்து விட்டு மன்னிப்புக் கோரிய சம்பவம் யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சார்பாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா,
சங்கிலியன் பூங்காவை கிட்டு பூங்கா என்று முதலில் தடுமாறினார்.
போரில் ஒரு மக்களும் இறக்கவில்லையென கிட்டு...... சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் இராணுவத் தளபதி பொன்சேகா துணிகரமாக சொல்லியிருக்கிறார் என சரத் பொன்சேகாவை சாடிக் கொண்டிருந்த தவராசா வாய் தடுமாறி மகிந்தவை பேசியுள்ளார்.
தமிழர்கள் சிங்களவர்களை அண்டித்தான் வாழ வேண்டுமென்று கனடாவிற்குச் சென்று உரையாற்றி இருந்தவர். அப்படியான மகிந்த ராஜபக்சவைத் தான்.... மன்னிக்க வேண்டும்... என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmw1.html
ஏமாற்றும் அரசியலில் தொடர்ந்தும் இருக்க முடியாது: எதிரணியில் இணைந்த அச்சல ஜாகொட
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 11:44.56 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றி்ல் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போரை வென்ற உரிமையை தனிநபர் தன்வசப்படுத்தி வருகிறார். இந்த வெற்றியின் உரிமையானது பயங்கரவாதத்தை தோற்கடிக்க அர்ப்பணிப்புகளை செய்த முழு நாட்டு மக்களுக்கும் வழங்கப்பட வேண்டிய உரிமையாகும்.
அத்துடன் போரில் தமது உயிர்களை தியாகம் செய்த படையினரின் பெற்றோருக்கு இந்த உரிமை கௌவரம் வழங்கப்பட வேண்டும்.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் மகிந்த ராஜபக்ஷ மீது பெரிய எதிர்ப்பார்ப்புகளை கொண்டிருந்தனர்.
போர் முடிந்து விட்டது நாடு கட்டியெழுப்படும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் கொண்டிருந்தனர். எனினும் அவர் அபிவிருத்திக்குள் செல்லவில்லை. பெருமளவில் பணத்தை அறவிடக் கூடிய திட்டங்களை மாத்திரம் அவர் மேற்கொண்டார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு பதிலாக தனது குடும்பத்தை மாத்திரம் மகிந்த கட்டியெழுப்பினார். இதனால், மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு வரும் வகையில் அரசியலமைப்பில் மாற்றங்களை செய்து பதவிக்காலம் முடியும் முன்னர் தேர்தலை அறிவித்தார்.
மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணியினர் சர்வதேச சதித்திட்டத்தை மேற்கொள்வதாக அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகிறது. ஆனால், மகிந்த ராஜபக்ஷவுக்கு பின்னால் இருந்து ஆலோசனைகளை வழங்கி வரும் நபர்களே சர்வதேச சதித்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அச்சல சுரங்க ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmw2.html
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கலையரசன், இராஜேஸ்வரனின் பாதுகாப்பு திடீர் நீக்கம்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 12:07.48 PM GMT ]
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே இருக்கும்வேளையில் இவரின் பொலிஸ் பாதுகாப்பு மீளப்பெற்றுள்ளமையானது ஒரு அரசியல் பழிவாங்கலாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபாலவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பு மீளப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது இனியபாரதியின் திட்டமிடப்பட்ட செயல் என கூறப்படுகிறது
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmw3.html
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் உன்னத குணத்தை பற்றி கூறும் மங்கள சமரவீர
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 12:13.55 PM GMT ]
மாத்தறை தெவிநுவர நீல்வெல்லே பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஆங்கிலத்தில் உரையாற்றும் போது மிஸ்டர் பிரபாகரன் என கூறியிருந்தார்.
இதனை மாபெரும் தேசத்துரோக செயலாக காட்ட அரச ஊடகங்கள் முயற்சித்து வருகின்றன. இது குறித்து கருத்து வெளியிட்ட மங்கள சமரவீர மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை ஒன்றுப்படுத்திய துட்டகைமுனு மன்னர், தன்னுடன் போரிட்டு இறந்த தமிழ் மன்னனான எல்லாளனுக்கு கல்லறை ஒன்றை கட்டியதுடன் அதன் அருகில் செல்லும் அனைவரும் அதற்கு மரியாததை செலுத்த வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்.
அவரது இந்த கட்டளை சிங்கள பௌத்தர்களின் குணத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்த குணத்தை இன்றைய காலக்கட்டத்தில் வெளிப்படுத்தி தனது கண்ணை பறித்த தனது உயிரை பறிக்க முயற்சித்த பிரபாகரனை ஐயா என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmw4.html
Geen opmerkingen:
Een reactie posten