தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 januari 2015

புலிகள் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கையாம்: அமெரிக்கா மீண்டும் உறுதிசெய்கிறது !

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 1997ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. எனவே புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் தரப்பினர் அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படுவர் என தெரிவித்துள்ளது.
அமெரிக்கா புலிகளுக்கு ஆதரவினை வழங்கியதாக அண்மையில் ஜே.வி.பி.யின் தலைவா அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார். புலிகளுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான தொடர்புகளை குமரன் பத்மநாதனைக் கொண்டு அறிந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளித்த அமெரிக்கத் தூதரகம் இதனைத் தெரவித்துள்ளது.
2002ம்ஆண்டு தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக கடமையாற்றிய காலத்தில் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் பலம் பலவீனம் பற்றி இரகசிய அறிக்கை ஒன்றை அமெரிக்கா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
http://www.athirvu.com/newsdetail/2140.html

Geen opmerkingen:

Een reactie posten