[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 07:08.35 AM GMT ]
நபரொருவரை தாக்கியமை தொடர்பான வழக்கு விசாரணைகளில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட ஆணையை மதிக்காமல் நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் அவர் தேடப்பட்டுவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே அம்பாறை குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினராகும்.
கிளிநொச்சியில் கிராமக் காற்றின் கானம் மற்றும் குழந்தைப் பாடல்கள் இறுவட்டுக்கள் வெளியீடு
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 07:12.44 AM GMT ]
குழந்தைப் பாடல்களுக்கான வரிகளை வளவை வளவன் எழுதியுள்ளார். இசையை அற்புதன் வழங்கியுள்ளார்.
ஜெயபாரதி, கௌசிகள், அ.அபி, அ.ஐஸ்ணவி, அ.அடசயன் ஆகியோர் பாடியுள்ளனர். கிராமக் காற்றின் கானம் இறுவட்டுக்கான இசையை எஸ்.பி.ரூபன், ரி.நாகேந்திரா ஆகியோர் வழங்கியுள்ளனர்.
பாடல்களை பொன்.காந்தன், திசா.ஞானச்சந்திரன், லோ.கோணேஸ், க.லிங்கராசா, எஸ்.பி.ரூபன் ஆகியோர் எழுயுள்ளனர்.
இந்த பாடல்களை எஸ்.பி.உதயரூபன், எஸ்.பி.ரூபன், பி.றெஜிஸ், சுபா ஆர்.ரதீஸ், எஸ்.சரஸ்வதி, தர்சினி, மது, இசைக்கனி ஆகியோர் பாடியுள்ளனர்.
அணி செய் கலைஞர்களாக கலாவித்தகர் இரா.சிவராமன், எஸ்.ரதீஸ் ஆகியோரும் பணி செய்துள்ளனர். இந்த இறுவெட்டுக்கள் நேற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துகொண்டு இறுவட்டுக்களை வெளியிட்டு வைத்தார்.இந்த நிகழ்வில் கவிஞர்கள் படைப்பாளிகள் கலைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதித் தேர்தலில் இணைய ஊடகங்கள் முக்கிய பங்காற்றின: கலாநிதி. ரங்க கலங்சூரிய
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 07:17.26 AM GMT ]
கொழும்பில் நடைபெறும் சர்வதேச ஊடக ஒழுக்க நெறி சம்பந்தமான கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணம், கொழும்பு, காலி, மொனராகலை உட்பட 14 மாவட்டங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் இது தெரியவந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. தகவல்களை அறிந்து கொள்ள ஊடகங்களை பயன்படுத்துவதாக கருத்து கணிப்பில் கலந்து கொண்ட 80 வீதமானவர்கள் தெரிவித்தனர்.
அவர்களில் 93 வீதமானவர்கள் தொலைக்காட்சிகளை தகவல்களை அறிந்து கொள்ள பயன்படுத்துவதுடன் இரண்டாவதாக இணையத்தளங்கள் மூலம் தகவல்களை அறிந்து கொள்கின்றனர்.
27 வீதமானவர்கள் தேர்தல் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள இணைத்தள செய்தித் தளங்களையும் சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தியுள்ளனர். இந்த விடயத்தில் சம்பிரதாய ஊடகங்களான செய்தித்தாள்கள் மற்றும் வானொலி என்பன பின்னடைவை சந்தித்துள்ளமை தெளிவாக தெரிந்தது.
எதிர்பார்க்காத பிரதேசங்களான காலி, தெனியாய, மொனராகலை, அனுராதபுரம் போன்ற பிரதேசங்களில் பெருமளவிலானவர்கள் இணையத்தளங்களை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
இது இணைய ஊடகங்கள் இலங்கை ஊடகத்துறையில் புதியது அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் கலங்சூரிய தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcguz.html
Geen opmerkingen:
Een reactie posten