தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

கே.பிக்கு எதிரான முறைப்பாடு தொடர்பாக இன்று ஆராயப்படும்

நாமல் ராஜபக்ச கலாநிதி படிப்பை மேற்கொள்ள தகுதியானவரா?
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 03:34.23 AM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிஎச்டி (கலாநிதி) பட்டமேற்படிப்பு தொடர்பில் இலங்கையின் இணைத்தளம் ஒன்று ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக செனட் சபையிடம் விளக்கங்களை கோரியுள்ளது.
ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் செனட்சபை நாமல் ராஜபக்சவுக்கு கலாநிதிபட்டத்துக்கான திட்டத்துக்கு அனுமதி வழங்கி அதன் அடிப்படையில் அவரும் அதனை மேற்கொண்டுள்ளார்.
செனட்சபையின் 316.08.05 அறிக்கைப்படி லச்மன் நாமல் ராஜபக்ஷ பதிவு இலக்கம் 1805,2011001 இன்கீழ் �சமூக கலாசார ஏதுக்கள்��சிறுவர் துஸ்பிரயோகங்களில் செலுத்தும் தாக்கம்� என்ற தலைப்பின்கீழ் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்,என்.எல்.ஏ கருணாரட்ன மற்றும் பேராசிரியர்,எம்.டபில்யூ.ஜெயசுந்தர ஆகியோர் மேற்பார்வையாளர்களாக இருந்துள்ளனர்.
பரீட்சை அதிகாரியாக றுகுனு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் அமரசிங்க மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் தயா அமரசேகர ஆகியோர் செயற்பட்டுள்ளனர். எனினும் கொழும்பின் ஆங்கில இணைத்தளம் நாமல் ராஜபக்ச பிஎச்டீ நிகழ்ச்சித்திட்டத்தை மேற்கொள்ள உரிய கல்வித்தகுதியை கொண்டிருந்தாரா? என கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன் பட்டதாரி படிப்புக்குகூட அவருடைய கல்வி தகுதி குறித்து இணையத்தளம் கேள்வி எழுப்பியுள்ளது எனவே இணையத்தளம் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக செனட் சபையிடம் பல கேள்விகளுக்கு பதில்களை கோரியுள்ளது.
லச்மன் நாமல் ராஜபக்ச பிஎச்டி படிப்பை மேற்கொள்ள என்ன கல்வி தகுதிகளை கொண்டிருந்தார்? என்ன தகுதிகளை அவர் சமர்ப்பித்தார் இந்த தகுதிகளை பல்கலைக்கழகம் பரீட்சித்து பார்த்ததா? பல்கலைக்கழகத்தின் எம்ஏகியூ பரீட்சை ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்படும். 2013 மற்றும் 2014ஆம் ஆண்டு எப்போது இந்த பரீட்சை நடந்தது?
இதன்போது நாமல் ராஜபக்சவுக்கு விசேட பரீட்சை ஒன்று நடத்தப்பட்டதா? இந்த எம்ஏகியூ பரீட்சைக்காக நாமல் ராஜபக்ஷ என்ன கல்வித்தகுதிகளை சமர்ப்பித்தார்? என்ற கேள்விகளையே இணையத்தளம் ஜெனவர்த்தனபுர பல்கலைக்கழக செனட் சபையிடம் கோரியுள்ளது
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchv3.html

கே.பிக்கு எதிரான முறைப்பாடு தொடர்பாக இன்று ஆராயப்படும்
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 03:46.52 AM GMT ]
விடுதலை புலிகளின் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆயுத பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக இன்று ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குறித்த முறைப்பாட்டை கடந்த 19ஆம் திகதி தாக்கல் செய்துள்ளார்.
கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்து சட்ட ரீதியாக தண்டனை வழங்க வேண்டுமாறு முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchv4.html

Geen opmerkingen:

Een reactie posten