தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

சிறிலங்காவின் ஆட்சி மாற்றமும் தமிழினப் படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும்: பிரான்சில் சமகால அரசியற் பொதுக்கூட்டம்



யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் ஒன்றியம் ஆதரவு
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 02:58.40 PM GMT ]
யாழ்.பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் எனக்கோரி நாளைய தினம் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேற்படி விடயம் தொடர்பாக இன்றைய தினம் மாலை ஒன்றியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
யாழ்.பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் தாமாக பதவி விலக வேண்டும் என்று கடந்த 22.01.2015 அன்று நாம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் வலியுறுத்தியிருந்தோம்.
27 அங்கத்தவர்களைக் கொண்ட யாழ்.பல்கலைக்கழகப் பேரவையானது, 14 வெளிவாரி உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
பல்கலைக்கழக சட்டம் 1985 பிரிவு 44(1) கல்வி, தொழில்சார் நிபுணத்துவம், வர்த்தகம், கைத்தொழில், விஞ்ஞான, நிர்வாக வட்டங்களில் கௌரவிக்கத்தக்க வகையில் சேவையாற்றியோரிடமிருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் வெளிவாரி உறுப்பினர்களானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டுமென குறிப்பிடுகிறது.
ஆனால் பேரவையின் 14 வெளிவாரி உறுப்பினர்களும் 2008, 2011, 2014 ஆம் ஆண்டுகளில் உள்ளூர் முன்னாள் அரச சார்பு அமைச்சர் ஒருவரின் சிபார்சின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டனர்.
குறித்த அமைச்சர் தன்னால் நியமிக்கப்பட்ட பெரும்பான்மையான வெளிவாரி பேரவை உறுப்பினர்களைக் கொண்டு பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளில் தனது முழுமையான ஆதிக்கத்தினை செலுத்தி வந்தார்.
இவ்வாறான தலையீட்டால் எமது பல்கலைக்கழகத்தின் சுயாதீனமான செயற்பாடுகள் இதுவரை காலமும் தடைப்பட்டிருந்தது. இதனால் பல்கலைக்கழக ஊழியர் நியமனங்கள், பேரவையின் தீர்மானங்கள், நீதிக்கு புறம்பான வகையில் தனிப்பட்ட அரசியல் நலன் சார்ந்ததாக காணப்பட்டது.
இத்தகைய முறைகேடுகளை சுட்டிக்காட்டி குறிப்பிட்ட வெளிவாரி பேரவை உறுப்பினர்களை தாமாகவே பதவிவிலகுமாறு வெளிப்படையாகவே கோரியிருந்தோம். ஆனால் இதுவரையில் அவர்கள் பதவி விலகாமல் நாளைய தினம் குறித்தபேரவையானது கூடவுள்ளதாக அறிகின்றோம்.
இச்செயற்பாடானது யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினது கோரிக்கைகளை உதாசீனம் செய்வதாகவே நாம் கருதுகின்றோம். இத்தகைய சூழ்நிலையில் நாளை நடைபெறவிருக்கும் பேரவை கூட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து ஊழியர் சங்கத்தினர் அடையாள வேலை நிறுத்தத்திலும் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளனர். இப்போராட்டத்திற்கு நாம் பூரண ஆதரவை வழங்குவதோடு போராட்டத்திலும் இணைந்து கொள்கின்றோம்.
அதேவேளை இப்போராட்டமானது ஒரு ஆரம்ப கட்ட நடவடிக்கையேயாகும். இதை உணர்ந்து தாமாகவே அவர்கள் பதவி விலகவேண்டும். அவ்வாறு பதவி விலகாத பட்சத்தில் பல்கலைக்கழக அனைத்து மாணவர்களோடு ஒட்டு மொத்த பல்கலைக்கழக சமூகத்தினரையும் உள்ளடக்கி மாபெரும் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆர்ப்பாட்டத்திற்கான ஒன்று கூடல்
யாழ்.பல்கலைக்கழகத்தின் பேரவையினை தூய்மைப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் நாளைய தினம் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிணை நடத்தவுள்ளது.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கான ஒன்று கூடல் இன்றைய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது அனைத்து ஊழியர்களும் தங்கள் ஒத்துழைப்பினை நாளைய தினம் வழங்கவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதுடன், ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியம் ஆகியனவும் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கான ஆதரவினை தெரிவித்திருக்கின்றன.
இந்நிலையில் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களாக பின்கதவு வழியாக வந்தவர்கள் தாங்களாகவே தங்கள் பதவிகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்பதே ஊழியர் சங்கத்தின் முக்கியமான கோரிக்கையாக உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfwy.html

சிறிலங்காவின் ஆட்சி மாற்றமும் தமிழினப் படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும்: பிரான்சில் சமகால அரசியற் பொதுக்கூட்டம்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 03:24.45 PM GMT ]
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் பல்வேறுபட்ட மட்டங்களில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், “சிறிலங்காவின் ஆட்சிமாற்றமும் தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும்” எனும் தலைப்பில் சமகால அரசியற் பொதுக்கூட்டமொன்று பிரான்சில் இடம்பெறவுள்ளது.
-சிறிலங்காவின் ஆட்சிமாற்றம் ஐ.நா மனித உரிமைச்சபையில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும்?
- ஆட்சி மாற்றத்தின் பின்னால் உள்ள நலன்கள் என்ன?
- ஐ.நாவின் விசாரணையினை எவ்வாறு அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் கையாள்வது?
இவ்வாறான கேள்விகளை மையமாக இடம்பெறவுள்ள இப்பொதுக்கூட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (01-02-2015) பெப்ரவரி 1ம் நாளன்று மாலை 16மணிக்கு 4-6 Place de La Republique, 93100 Montreuil (Metro / ROBESPIERRE, Ligne : 9) எனும் இடத்தில் இப்பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
பல்வேறு விடயங்களின் அடிப்படையில் கருத்துப் பரிமாற்றமும் கலந்தாய்வு செய்வதும் அரசியல் விழிப்பினையும் புரிதலையும் ஏற்படுத்தும் என இப்பொதுக்கூட்டத்துக்கான அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமிழ் அமைப்புக்கள், ஆர்வலர்கள், கலைஞர்கள், ஊடகர்கள் என அனைவரையும் இப்பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfwz.html

Geen opmerkingen:

Een reactie posten