தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 januari 2015

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு வடமாகாண சபை ஜனாதிபதிக்கு கடிதம்



லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தால் மாதகல் கிழக்கு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் உதவி
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 11:21.50 AM GMT ]
இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினர்  மானிப்பாய் நாம் நண்பர்கள் அமைப்பினுடாகவும் மானிப்பாய் மேற்கு இளைஞர் கழகத்தினுடாகவும் மாதகல் கிழக்கு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியுள்ளது.
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிகழ்வு கடந்த 25ம் நாள் மாதகல் கிழக்கு இளைஞர் கழக தலைவர்அ.பபில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரன் மாதகல் கிழக்கு சகாய மாதா அன்னைஆலய பங்குத்தந்தை ஜே.அருள்தாசன் இளைஞர் பா.உறுப்பினர் க.உசாந்தன் மானிப்பாய் மேற்கு இளைஞர் கழக தலைவர் பே.சாம்பவி சண்டிலிப்பாய் மேற்கு இளைஞர் கழக தலைவர் நா.கஜீலன் ஆனைக்கோட்டை இளைஞர் கழகத்தலைவர் எப்.எக்ஸ்.டி.குரே நாம் நண்பர்கள் அமைப்பினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfr4.html

நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் ஜனவரி 9 ஆம் திகதியே கிடைத்தது: அசாத் சாலி
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 11:30.08 AM GMT ]
இலங்கைக்கு உண்மையான சுதந்திரம் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கிடைக்கவில்லை எனவும் கடந்த 9 ஆம் திகதியே நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் இன்றைய ஜனாதிபதி வீதி சமிக்ஞை சட்டங்களை பின்பற்றி வாகனத்தில் செல்லும் தலைவர்.
ஜனாதிபதி பயணிக்கும் வீதிகளை இனிமேல் மூட வேண்டிய அவசியமில்லை. பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதுவே உண்மையான சுதந்திரம் எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சராக மீண்டும் தன்னை நியமிக்க கோரும் சஷீந்திர ராஜபக்ச
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 11:54.35 AM GMT ]
ஊவா மாகாண முதலமைச்சராக ஹரின் பெர்னாண்டோ சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ளதால், அவரது நியமனத்தை இரத்துச் செய்து தான் உட்பட அமைச்சரவையை வழமை போல் செயற்பட அனுமதிக்குமாறு சஷீந்திர ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மாகாண சபை உறுப்பினர்களான குமாரசிறி ரத்நாயக்க, சாமர சம்பத் தசநாயக்க, செந்தில் தொண்டமான், சபை முதல்வர் சுதர்ஷன தெனிப்பிட்டிய ஆகியோர் சட்டத்தரணிகள் ஊடாக ஆளுநரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டதை முன்னுதாரணமாக கொண்டு செயற்படுமாறு சட்டத்தரணிகள் சுஜீவ ஜயசிங்க, ஹேமிந்த தயாவங்ச ஆகியோர் ஊவா மாகாண ஆளுநரிடம் கோரியுள்ளனர்.
புதிய ஆளுநர் இன்னும் தனது கடமைகளை பொறுபேற்காததால், ஆளுநரின் செயலாளர் எச்.எம். சோமதிலக்கவிடம் இந்த கோரிக்கை கடிதத்தை கையளித்துள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfr6.html

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு வடமாகாண சபை ஜனாதிபதிக்கு கடிதம்
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 12:02.11 PM GMT ]
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு வடமாகாண சபை கடிதம் அனுப்பியுள்ளது.
மாகாண சபையின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களால் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
“1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்துச் செய்தல்” எனத் தலைப்பிட்டு அனுப்ப்பட்ட கடிதத்தின் முழு விவரம்:
2014 ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் அமர்வில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் கீழே தரப்படுகிறது.
இலங்கை மக்களின் சமாதானமான வாழ்வை உறுதிப்படுத்தும் பொருட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சகல அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளையும் மேதகு ஜனாதிபதியையும் இச்சபை கோருகிறது.
இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் போது சபை பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொண்டது.
1) இந்தச் சட்டம் அப்பாவிப் பொதுமக்களை விசாரணை எதுவுமின்றி தன்னிச்சையாகக் கைதுசெய்து தடுத்து வைக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்கிறது. மேலும் பொய்க் குற்றச்சாட்டுக்களை புனைந்து அப்பாவிப் பொது மக்களை காலவரையறையின்றி தடுத்து வைக்க வாய்ப்பளிப்பதுடன் ஊழல் முறைக்கேட்டுக்கும் வழி வகுத்துள்ளது.
2) பொலிஸாரால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி எவரையும் பயங்கரவாதச் சட்டத்தில் சிக்க வைக்கவும், பிணை வழங்குவதை மட்டுப்படுத்தவும் இந்தச் சட்டம் வழிவகுத்துள்ளது.
3) தடுத்து வைக்கப்படும் காலத்தில் எவரையும் துன்புறுத்தவும், கட்டாய வாக்குமூலங்களைப் பெறவும் அதிகாரிகளால் முடிகிறது.
4) பொதுவாக இந்தச் சட்டம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முழுமையாக மீறுகின்றது.
5) இந்தச் சட்ட ஏற்பாடுகள் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற வேறுபாடின்றியும், வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கைச் சேர்ந்தவர்கள் என்ற வேறுபாடின்றியும் சகல மக்களது கருத்துத் தெரிவிக்கும் உரிமைகளை நசுக்கவும் உபயோகப்பட்டுள்ளது.
எனவே 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இந்தச் சட்டத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டுகின்றோம் என்றுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfr7.html

Geen opmerkingen:

Een reactie posten