மன்னார் புதைகுழி கிணற்றை கண்டுபிடி! காவல்துறைக்கு பணிப்பு!
புதைகுழி தோண்டப்பட்ட இடத்தில் முன்னர் கிணறு ஒன்று இருந்ததாகவும் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் எனவே அதனையும் தோண்டுவதற்கு நீதிமன்று அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிய பொதுமக்களின் கையொப்பத்துடன் அறிக்கையொன்று முன்னர் மன்றிற்கு வழங்கப்பட்டிருந்தது.
அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வன்னி மாவட்ட காவல்துறை அத்தியட்சகருக்கு மன்று உத்தரவிட்டிருந்தது. எனினும் குறித்த இடத்தில் கிணறு இருந்தமைக்கான அடையாளம் எதுவும் இல்லை என்று மன்றில் தெரிவித்திருந்ததுடன் அறிக்கையினையும் காவல்துறை சமர்ப்பித்திருந்தது
இருப்பினும் ஏற்கனவே பொதுமக்களின் கையொப்பம் இடப்பட்டு மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கையொப்பம் இட்ட பொதுமக்கள் காவல்துறையுடன் சென்று கிணறு இருந்த இடத்தை அடையாளப்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கிணறு இருந்த இடத்தை அடையாளப்படுத்திய பின்னர் அது தொடர்பிலான முழு அறிக்கையினையும் மன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.மூடப்பட்டுள்ள கிணற்றினுள்ளும் பெருமளவிலான மனித எச்சங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.
http://www.jvpnews.com/srilanka/95525.html
சர்வதேச விசாரணைக்கு தயாராகும் டென்மார்க்
இச்சந்திப்பின் போது ஆட்சி மாற்றத்தினால் தமிழ் மக்களிற்கேற்பட்டுள்ள சவால்கள் பற்றியும், சர்வதேச சமூகம் கவனித்துக்கொள்ளவேண்டிய விடயங்கள் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டதுடன் ஜ.நா மனிதவுரிமை ஆணையகம் சிங்களதேசத்திற்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தினூடாக நடாத்தவுள்ள போர்க்குற்ற விசாரணையை நடாத்திமுடிப்பதற்கான அழுத்தத்தினை தொடர்ந்து கொடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆட்சி மாற்றத்தினூடாக தமிழ் மக்களிற்கு எதிராக நடாத்தப்பட்ட அல்லது நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அநீதிகளிற்கு தீர்வு வந்துவிடாதெனவும் அதற்கு நல்லுதாரணமாக சிங்கள தேசத்தின் புதிய ஜனாதிபதி சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாதென்று அறிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் இலங்கையில் பேச்சுச்சுதந்திரத்தினைத் தடைசெய்யும் சட்டங்கள் இல்லாதொழிக்கப்பட்டு முழுமையான பேச்சுச்சுதந்திரம் உறுதிப்படுத்தவேண்டுமென்றும் தாயகத்தின் பல பாகங்களிலும் நிறுவப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட்டு நாட்டில் அகதிகளாக வாழும் தமிழ் மக்களை சொந்த இடங்களில் வாழ அனுமதிக்க வழிகோரவேண்டுமென்பதும் கலந்துரையாடப்பட்டது.
சிங்கள சிறைகளில் வாடும் தமிழ் மக்கள் விடுதலைசெய்யப்பட்டு அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டுமென்றும், ஜ.நா. நிறுவனங்கள் தமிழர் பிரதேசங்களில் இயங்குவதற்கு அனுமதிக்கப்படல் வேண்டுமென்பதும் எடுத்துக்கூறப்பட்டது. இச்சந்திப்புக்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
http://www.jvpnews.com/srilanka/95541.html
சம்பந்தனுக்கு ஹக்கீம் வைத்தார் ஆப்பு
ஹக்கீம் தனது சுயநலத்தைக் காட்டியுள்ளார். இன்னுமா இன ஒற்றுமை இப்படிப் பட்ட ஈனப் பிறவிகளுக்கே முடியும், இரண்டு வீட்டில் குடும்பம் நடத்த மத்தியில் மைத்திரி, மாநிலத்தில் மகிந்த இதை விட இந்த தலைமைகள் பிச்சை எடுத்து வாழ்வது மேல்.
இவர்கள் முஸ்லீம் மக்களின் உரிமை வெல்லவும் மாட்டார்கள் எதுவும் நடக்காது. அஸ்ரப்பின் பின் கல்முனைத் தொகுதிக்கு ஒரு முக்கிய பதவியும் செல்லக் கூடாது என்பதில் ஹக்கீம் அவதானம். இது எத்தனை கல்முனை முஸ்லீம்களுக்கு தெரியும் ஒன்றும் தெரியாது.
இலங்கை வரலாற்றில் முஸ்லீம்களுக்கு இப்படிப் பட்ட கீழ்தனமாக அரசியல் தலைமை என்றும் கிடைத்திராது. காரணம் அல்லா, மார்க்கம் என முஸ்லீம்களின் மார்க்கத்தைக் கூறி, குறுக்கு வழியில் சம்பாதிக்கும் ஒருவர் என்றால் வேறு யாருமல்ல ஹக்கீம்
மகிந்த அணியின் சகாக்களுடன் நடந்த உரையாடல்
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் சற்றுமுன் நிமல் சிறிபால ,சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் நடந்த கலந்துரையாடலில் பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் உத்தரவின் பேரில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வரும் தினங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவிக்கு ஒருவரை தெரிவி செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு சில முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை புரன்ட் ரணர்ஸ் இடையே கடும் பேட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது…
http://www.jvpnews.com/srilanka/95519.html
Geen opmerkingen:
Een reactie posten