[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 03:33.09 PM GMT ]
வவுனியா- பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள விபுலானந்தாக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், மாணவத் தலைவர் சின்னம் சூட்டும் நிகழ்விற்கு நுவரேலியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன் போது அழைத்துச் சென்ற ஆசிரியர்கள், மாணவர்களை அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு மதுபானம் அருந்தியதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 21ம் திகதி மேற்படிப் பாடசாலையிலிருந்து 69 மாணவர்கள் மாணவ தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றிருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு நடைபெறாமல் பாடசாலைக்கு வெளியே நுவரேலியாவுக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற பாடசாலை நிர்வாகம், அதற்காக 69 மாணவர்களிடமும் தலா 2600ரூபா பணம் பெற்றுக்கொண்டுள்ளதுடன், 13 ஆண் ஆசிரியர்களும் 2 பெண் ஆசிரியர்களும் மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும் இதற்காக மாகாண கல்வியமைச்சிடம் எவ்விதமான அனுமதியினையும் கோரியிருக்காத நிலையில் மாணவர்களை அழைத்துச் சென்றவர்கள், தங்கியிருந்த இடத்தில் பெண் ஆசிரியர்களையும், மாணவர்களையும் அறைக்குள் வைத்துப் பூட்டிய பின்னர் 13ஆண் ஆசிரியர்கள் இணைந்து தங்கியிருந்த இடத்திலேயே மதுபானம் அருந்தியிருக்கின்றனர்.
இந்நிலையில் எதற்காக நாம் அறைக்குள் பூட்டப்பட்டிருக்கின்றோம்? என மாணவர்கள் பார்த்தபோதே ஆசிரியர்கள் மதுபானம் அருந்தியமை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த சம்பவத்தினால் மாணவர்களின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பதுடன் குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண கல்வியமைச்சின் கவனத்திற்கும் கொண்டு வந்திருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfw0.html
ஆட்சி மாற்றம் நடைபெற்றாலும் எமக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை!- பா.அரியநேத்திரன்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 04:03.20 PM GMT ]
இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற காணாமல்போனவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
என்னதான் ஆட்சி மாற்றம் நடைபெற்றாலும் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக யாரும் நினைத்துக் கொள்ள கூடாது.
ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ள இந்த காலகட்டத்தில் அண்மையில் பட்டிப்பளையில் கொக்கட்டிச்சோலை படுகொலை நிகழ்வை நடாத்தியிருந்தோம்.
அந்த நிகழ்வு மிகவும் சுதந்திரமாக நடைபெற்றதாக பலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அந்த நிகழ்வை தடுத்து நிறுத்துவதற்கு தடை உத்தரவை தருமாறு பொலிசார் மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர்.
அப்போது நீதிபதி அவர்கள் கொக்கட்டிச்சோலை படுகொலை நிகழ்வு நடைபெறுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டுள்ளார்.
அதற்கு மக்களை திரட்டி அந்த நிகழ்வை நடத்தும்போது மக்களுக்கு பல இடையூறுகள் வரும். எனவே அதனை தடுத்து நிறுத்த தடையுத்தரவு தாருங்கள் என பொலிசார் கேட்டுள்ளனர்.
ஆனால் நீங்கள் கூறும் காரணத்தை ஏற்று தடையுத்தரவு தரமுடியாது. கடந்த காலங்களிலும் இவ்வாறான தடையுத்தரவுகள் கொடுக்கப்பட்ட படியால் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து கூட்டமைப்பினர் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். எனவே தடையுத்தரவு தரமுடியாது எனக் கூறியுள்ளார்.
நான் ஏன் இதை கூறுகின்றேன் என்றால், சிலர் நினைக்கின்றனர் ஜனாதிபதி மாறிவிட்டார். இனிமேல் எல்லாம் செய்யலாம் என்று. ஆனால் அப்படியல்ல, இந்த
நிகழ்வில் கூட புலனாய்வாளர்கள் படம்பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
நிகழ்வில் கூட புலனாய்வாளர்கள் படம்பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலை மாறவேண்டும். எங்களது மக்கள் தங்களது பிரச்சினைகள் சம்பந்தமாக சுதந்திரமாக போராடவேண்டும். என்பதற்காகவே ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்.
கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக இது போன்ற அடக்குமுறைகளில் ஈடுபட்டதனாலேயே தமிழ் மக்கள் மைத்திரிபாலவிற்கு
வாக்களித்து ஜனாதிபதியாக ஆக்கினர் என்பதை புரிந்துகொண்டு புதிய அரசு செயற்பட வேண்டும் எனக் கூறினார்.
வாக்களித்து ஜனாதிபதியாக ஆக்கினர் என்பதை புரிந்துகொண்டு புதிய அரசு செயற்பட வேண்டும் எனக் கூறினார்.
தொடர்புடைய செய்தி- எனது பிள்ளையை கண்டுபிடித்துத் தரவும்: மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfw1.html
Geen opmerkingen:
Een reactie posten