தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 januari 2015

காணாமல் போனோரை மீட்டுத் தரக்கோரி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு: ஜனாதிபதிக்கு மகஜர்

பிரதம நீதியரசர் தொடர்பில் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் அறிவிக்கப்படும்: பிரதமர்
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 08:27.13 AM GMT ]
பிரதம நீதியரசர் தொடர்பிலான சர்ச்சைகள் குறித்து நாளை நாடாளுமன்றில் அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் எவரும் அரசியல் அமைப்பினை மீறவில்லை. அரசியல் அமைப்பிற்கு புறம்பான வகையில் எவரையும் பணி நீக்கவில்லை.
பணியில் அமர்த்தப்படாத ஒருவர் பணி நீக்கப்பட வேண்டிய அவசியமில்லை.
பிரதம நீதியரசர் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விவாதம் நடத்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
நாளை இந்த விடயம் பற்றி தெளிவாக நாடாளுமன்றில் விளக்கம் அளிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfq4.html
மைத்திரி அரசாங்கம் நாடாளுமன்றை இழிவுபடுத்தியுள்ளது: தினேஸ் குணவர்தன
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 08:46.46 AM GMT ]
மைத்திரி அரசாங்கம் நாடாளுமன்றை இழிவுபடுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரதம நீதியரசர் ஒருவரை பணி நீக்கக் கூடிய ஒரே நிறுவனம் நாடாளுமன்றமேயாகும். அந்த அதிகாரம் வேறு எவருக்கும் கிடையாது.
2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் திகதி 150 நாடாளுமன்ற உறுப்பினர்களினால் பணி நீக்கப்பட்ட பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மீள பணியில் அமர்த்திய முறைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
இந்த நடவடிக்கையானது நாடாளுமன்றை மலினப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நீதிமன்றின் சுயாதீனத்தன்மை மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலானது மிகவும் துயரமான ஓர் நிலைமையாகும் என தினேஸ் குணவர்தன நாடாளுமன்றில் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfq6.html
இடைக்கால வரவு செலவுத் திட்டம்! 13 அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு- 10,000 ரூபாய் சம்பள உயர்வு
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 08:52.02 AM GMT ]
அரச ஊழியர்களுக்கான சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் தற்போது பெற்று வரும் சம்பளம் அவர்களது வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு பெப்ரவரி மாதம் 5000 ரூபாவும் ஜூன் மாதம் மிகுதி 5000 ரூபாவும் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47% சம்பள அதிகரிப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
இதேவேளை, தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்களை உயர்த்துமாறு தனியார்துறை நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கம் தனியார் துறை முயற்சியான்மையாளர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கப் போவதில்லை எனவும் அந்த நலன்களை ஊழியர்களுக்கு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி அலுவலகத்தின் கடந்த கால செலவுகள் 2009ம் ஆண்டு 634 கோடி ரூபாய், 2010ம் ஆண்டு 756 கோடி ரூபாய், 2011ம் ஆண்டு 5063 கோடி ரூபாய், 2012ம் ஆண்டு 5936 கோடி ரூபாய், 2013ம் ஆண்டு 8244 கோடி ரூபாய், 2014ம் ஆண்டு 10,494 கோடி ரூபாவாகவும் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2015ம் ஆண்டுக்காக 9593 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், பின் மைத்திரிபால சிறிசேன அரசால் அது 256 கோடியாக குறைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று நள்ளிரவு தொடக்கம் 12.5 கிலோ கேஸ் சிலின்டர் விலை 300 ரூபாவால் குறைக்கப்படும் எனவும் அதன்படி 1596 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என்றும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
இலங்கையின் கல்வித் துறைக்கு தேசிய வருமானத்தில் 6% நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
மண்ணெண்னை லீட்டருக்கு மேலும் 6 ரூபா குறைக்கப்படும் என்றும் அதன்படி 59 ரூபாவிற்கு மண்ணெண்னை ஒரு லீட்டர் கொள்வனவு செய்ய முடியும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
ஏப்ரல் மாதம் தொடக்கம் ஓய்வூதியம் 1000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 20,000 கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடனில் 50% குறைப்பு செய்யப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
வரவு செலவுத்திட்டத்தில் மேலும்....
விவசாயிகளின் கடனில் 50 வீதம் இரத்துச் செய்யப்படும்
சிரேஷ்ட பிரஜைகள் வர்த்தக வங்கிகளில் வைப்புச் செய்துள்ள நிரந்த வைப்புகளுக்கான வட்டி 15 வீதமாக அதிகரிக்கப்படும்.
எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 1596 ரூபாவாகும். அண்மையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்திற்கு அமைய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
சீனி கோதுமை மா பாண் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது
சீனி கோதுமை மா பாண் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக 2015ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றி வரும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீனியின் ஒரு கிலோவின் விலை 10 ரூபாவினாலும் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை 12.5 ரூபாவினாலும்  400 கிராம் எடையுடைய பால் மாவின் விலை 100 ரூபாவினாலும்,  பயறு ஒரு கிலோவின் விலை 40 ரூபாவினாலும், டின் மீனின் விலை 60 ரூபாவினாலும் உழுந்து ஒரு கிலோவின் விலை 60 ரூபாவினாலும் மாசி ஒரு கிலோ கிராமின் விலை 100 ரூபாவினாலும் காய்ந்த மிளகாயின் விலை 25 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளது.
இவ்வாறு பொருட்களுக்கான விலையை குறைப்பதனால் அரசாங்கத்தின் வரி வருமானம் குறைவடைகின்றது. எனினும் மக்களுக்கு நலன்களை வழங்கும் நோக்கில் இவ்வாறு சலுகைகள் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.
பத்து பொருட்களின் விலைகளையே குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தோம். எனினும் 13 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
 http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfq7.html
பாலித்த தேவரபெரும மீண்டும் விளக்கமறியலில்!
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 09:00.19 AM GMT ]
ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பாலித்த தேவரபெருமவை எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் அரசியல்வாதி ஒருவரை முட்டிபோட வைத்த சம்பவம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்படடிருந்தார்.
மேலும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் 4 பேரும் எதிர்வரும் 2ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் கலந்துக்கொள்ள உத்தரவு விடப்பட்டுள்ளது.

காணாமல் போனோரை மீட்டுத் தரக்கோரி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு: ஜனாதிபதிக்கு மகஜர்
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 09:21.58 AM GMT ]
வடக்கு கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடந்த காலத்தில் அராஜக அரசாங்கங்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களின் கடத்தல்களால் காணாமல் போகச்செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான உறவுகளை மீட்டுத்தரக்கோரி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் உருவாகி இருக்கும் நல்லாட்சிக்கான அரசாங்கத்தை நோக்கி கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த கிளிநொச்சி மாவட்ட காணாமல் போனோருக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த காலத்தில் பெரும்போர்களின்போதும் குறிப்பாக முள்ளிவாய்க்காலில் முடிந்த வகை தொகையற்ற மானுடக் கொலைகள், நடைபெற்ற போரின்போதும் அதன் பின்பும் காணாமல்போகச் செய்யப்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகளை இழந்து தேடி அலைந்து அவர்களின் பெற்றோர்களும் மனைவி மற்றும் உறவுகளும் எதுவித பயனுமற்று கண்ணீருடன் ஏக்கத்துடன் இன்றும் வாழ்கின்றனர்.
இந்நிலையில் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும் அந்த ஆட்சியாளர்களின் நூறு நாள் வேலைதிட்டமும் தமிழ் மக்களின் வாழ்வில் நிம்மதியையும் சுபீட்சத்தையும் கொண்டுவருமென ஒட்டுமொத்த தமிழினம் எதிர்பார்க்கின்றது.
எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் சகல  மாகாண சபை மற்றும் நகர, பிரதேச சபை உறுப்பினர்கள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர், கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டுமெனவும்
சமுகத்தின் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், புத்திஜீவிகள் பொது சன அபிமானமுள்ள சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்களென திரண்டு காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரக்கோரியும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் திரண்டு குரல் கொடுக்கவேண்டுமென கிளிநொச்சி மாவட்ட காணாமல் போன உறவுகளின் அமைப்பு மிக நேசமுடன் எதிர்பார்த்து நிற்கின்றது.
கிளிநொச்சியில் எதிர்வரும் திங்கட்கிழமை ஏ9 வீதியிலுள்ள பழைய கச்சேரிக்கு முன்பாக காலை 9மணிக்கு இந்த கவனயீர்ப்பு நடைபெறுவதுடன் எதிர்வரும் 9ம் நாள் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் நடைபெறும் எனவும் காணாமல் போன உறவுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது.
மாவட்டம் தோறும் இதற்கு ஒரு தீர்வு எட்டும்வரை போராட்டம் நடத்தப்படுமெனவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfr0.html

Geen opmerkingen:

Een reactie posten